1.5.06

வணக்கம்...

நேரமின்மை, தைரியமின்மை ஆகிய இன்மைகளை சற்று ஒதுங்கச் சொல்லி, வெகுநாட்களாக மனதில் தேக்கி வைத்திருந்த ஒரு ஆசைக்கு செயல் வடிவம் கொடுத்துள்ளேன். நேற்றிலிருந்து கோடைக்கால விடுமுறை. எனவே வரும் ஜூன் மாதமும் தாண்டி இதனை நான் எடுத்துச் செல்லும் பட்சத்தில் எனது இந்த முயற்சியில் வெற்றி பெற்றவனாவேன். நான் இந்த முயற்சியினை எடுக்க வேண்டும் என்று உள்ளார்ந்த விருப்பத்துடன் வேண்டியவர்களுக்கு எனது நன்றி!
.
கலைச்சேவை புரிவதில் நடிகர் ஒருவருக்கு இருக்குமளவுக்கும், எழுத்தாளருக்கு இலக்கியச் சேவை புரிவதில் இருக்கும்ளவுக்கும்...வழக்குரைஞராகிய எனக்கும், ‘சட்டம் குறித்தான கருத்துகளை சகலரும் தெரிந்து கொள்ளவேண்டும்’ என்பதில் ஆர்வமுண்டு! அடிப்படையில் மற்றவர்களுக்கு எழுதுவதற்காகவே நான் மேலும் கற்பது, எனக்கு மிகுந்த மன நிறைவினைத் தரும் ஒரு காரியமாக இருப்பதாலும்...இம்மணற்கேணி!நான் ஏற்கனவே இணையத்தில் எழுதியவற்றை இங்கு பதிய எண்ணம் கொண்டுள்ளேன். தொடர்ந்து சட்டம் சார்ந்த விடயங்களைப் பற்றி எழுத முயல்வேன்.
.
இணைய தொடர்புகளை விட்டு பெரிதும் நான் விலகியிருப்பினும்...தொடர்ந்து என்னால் முடிந்தவரை வலைப்பதிவுகளை கவனித்து வருகிறேன். நண்பர்களாகிய உங்களைப் போன்ற சக வலைப்பதிவாளர்கள் இணையத்தில் கூறும் கருத்துகளே எழுதுவதற்கான எனது ‘inspiration’. தொழில் நுட்ப தகவல்கள் குறித்தும், எழுதுவது குறித்தும் தங்களது மேலான ஆலோசனைகளை இங்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிப்பின் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.
.
அன்புடன்
பிரபு ராஜதுரை

2 comments:

மதி கந்தசாமி (Mathy) said...

வாங்க. :)

சட்டம் சம்பந்தமான விவாதங்கள் வரும்போது உங்களை நினைத்துக்கொண்டதுண்டு. தொடர்ந்து எழுதுங்கள்.

குறைந்தது மூன்று இடுகைகளை எழுதினால், தமிழ்மணத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இன்னுமொரு இடுகை எழுதிவிட்டு சேர்த்துவிடுங்களேன்.

-மதி

செல்வராஜ் (R.Selvaraj) said...

வாங்க பிரபு. ரொம்ப நாள் கழித்து வருகிறீர்கள். தொடர்ந்து சட்டம் பற்றிய பொது அறிவைப் பயனுள்ள வகையில் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஏன் திடீரென்று காணாமல் போய்விட்டீர்கள் என்று நினைத்துக் கொண்டதுண்டு. எதுவாயிருப்பினும் சிரமமின்றி இனி உங்களால் எழுத முடியவேண்டும். நுட்ப உதவிகள் வேண்டுமெனில் சொல்லுங்கள். தமிழ்மணம் மன்றத்திலும் கேட்கலாம்.