5.5.06

காதல் போயின்...‘நத்திங் பட் பிளாக்ஸ்’ என்ற தனது வலைப்பதிவில், நண்பர் கார்த்திக்ராம்ஸ் ‘தேவதையை கண்டேன்’ என்ற தமிழ் திரைப்படத்தினைப் பற்றிய தனது கருத்தினைப் பதிகையில் கேள்வி ஒன்றினை நம் முன் வைக்கிறார்.

“படம் எழுப்பும் கேள்வி இதுதான், காதலித்து ஏமாற்றுவதை குறித்து ஏன் சட்டம் எதுவும் இல்லை, காதலை சட்டம் கட்டுபடுத்த முடியுமா? காதலித்து ஏமாற்றப்படுபவனுக்கு/ளுக்கு சட்டம் உதவ முடியுமா?”

வலைப்பதிவில் தங்களது எதிர்வினையை தெரிவித்தவர்கள், இதற்கெல்லாம் சட்டம் இயற்றப்பட வேண்டுமென்று கூறுவது அபத்தம் என்ற வகையில் விவாதத்தினை முடிவுக்கு கொண்டு வந்து விட்டாலும், பலருக்கு இவ்வித சந்தேகங்கள் சில சந்தர்ப்பங்களில் ஏற்பட நேரிடலாம் என்பது என் கணிப்பு. ஒரு பிரச்னைக்கான சட்ட ரீதியான தீர்வு இப்படித்தான் என்று எளிதில் தீர்மானித்து விட முடியாது. பிற்காலத்தில் நிகழக்கூடிய எல்லாவித சந்தர்ப்பங்களையும் அனுமானித்து இது இதற்கு இப்படித்தான் என்று சட்டம் வரைவது சாத்தியமல்லாத ஒன்று. எனவே ஒரு செயலினை, சட்டம் அளிக்கும் பரிகாரத்திற்குள் எவ்வாறு கொண்டு வருவது என்பதில்தான் ஒரு வழக்குஞரின் பணி ஆரம்பிக்கிறது.

சட்டத்தில், குற்றவியல் (criminal), உரிமையியல் (civil) என்று இரு பெரும் பிரிவுகள் இருப்பது அனைவரும் அறிந்ததே! குற்ற்வியல் நடவடிக்கைகள் அரசால் தொடரப்படுவது. இதன் முடிவில் குற்றவாளிக்கு தண்டனையே தவிர பாதிக்கப்பட்டவருக்கு பொதுவாக ஏதும் பலனில்லை. ஆனால் அனைவரும் அஞ்சுவது குற்றவியல் நடவடிக்கைகள் குறித்தே! ஏனெனில் வழக்கு எப்படியோ, புகார் பதியப்பட்டதும், குற்றம் சாட்டப்படுபவர் கைது செய்யப்படலாம்...அதன் பலனாக சமூக ரீதியிலான அவமானம்.

காதலில் ஏமாற்றுதல் எவ்வித சந்தர்ப்பங்களில் ஒரு குற்றமாக உருமாறக்கூடும்? பாலியல் பலாத்காரம் (rape) என்ற குற்றம் நாம் அறிந்தது. பொதுவாக ஒரு பெண்ணின் சம்மதமின்றி உடலுறவு கொள்ளும் ஆண் இந்த குற்றம் புரிந்தவராகிறார். ஆனால், பெண்ணின் சம்மதம் இருந்தாலும் சில செயல்கள் குற்றமாகும். உதாரணமாக, உடலுறுவில் ஈடுபடும் ஆணுக்கு தான் அந்த பெண்ணின் கணவனல்ல என்பது தெரிந்திருந்து ஆனால் அந்த பெண் தான் அந்த ஆணை சட்டபூர்வமாக மணம்புரிந்திருக்கிறேன் என்ற நம்பிக்கையில் சம்மதம் தெரிவித்திருந்தால் அது பாலியல் பலாத்காரமே! (Fourth description to Section 375 IPC)

இதே போல ஒரு ஆண் ஒரு பெண்ணை சட்டபூர்வமாக திருமணம் புரியமலேயே அவர்களுக்குள் சட்டபூர்வமான திருமணம் நடைபெற்றதாக நயவஞ்சகமாக (deceit) அப்பெண்ணை எண்ண வைத்து அவளுடன் சேர்ந்து வாழ்ந்தாலே அதுவும் பத்து ஆண்டுகள் தண்டனைக்கு ஏதுவான குற்றம் (Section 493 IPC). கவனிக்கவும், இந்தப்பிரிவில் சேர்ந்து வாழுதல் அல்லது உடலுறவு (to cohabit or have sexual intercourse) என்று இருப்பதால் உடலுறவு கட்டாயமல்ல.

ஆக, குற்றவியல் சட்டப்படி இந்த இரு வகையான செயல்களே தண்டிக்கத்தகுந்த குற்றங்கள். உரிமையில் சட்டம் தனிப்பட்ட நபரின் உரிமை மீறப்படுகையில், அதற்கான பாதுகாப்பு அல்லது பரிகாரம் பற்றியது. காதலுற்ற இருவருக்குள் திருமணம் செய்து கொள்வதாக ஒரு ஒப்பந்தம் இருப்பினும், அனைத்து ஒப்பந்தகளும் சட்டப்படி வலியுறுத்தத் தகுந்தவையல்ல. ஒப்பந்தங்களைப் பற்றி ஒப்பந்தச் சட்டமும் (Contract Act) எவ்வாறு ஒப்பந்தங்களை சட்டபூர்வமாக வலியுறுத்துவது என்பது பற்றி ஏற்றதை ஆற்றுதல் சட்டமும் (Specific Relief Act) உள்ளன. இவற்றின்படி ஒரு ஒப்பந்தந்தினை ஒருவர் மீறுகையில், மற்றவர் அதனை மீறும் நபர் கண்டிப்பாக ஒப்பந்தக் கடமையை புரியும்படி நீதிமன்ற தீர்ப்பு மூலம் வலியுறுத்தலாம். அது இயலாத பட்சத்தில் தகுந்த நஷ்ட ஈடு பணமாக பெறலாம். ஆனால், ஒர் ஒப்பந்தம் சட்டப்படி செல்லக்கூடியதென்றால் அதன் மூலம் பெறப்படும் பலனுக்கு விலை கொடுக்கப்படவேண்டும். உதாரணமாக வீட்டினை உங்களுக்கு விற்பதாக ஒருவர் உறுதி கூறுகையில், நீங்கள் அதற்கான விலையை நிர்ணயித்து அவருக்கு கொடுக்க வேண்டும். விலை என்பது சட்டபூர்வமான விலையாக (lawful consideration) இருத்தல் வேண்டும். இங்கு, தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறுபவருக்கு மற்றவர் கொடுக்கும் விலை என்ன? அன்பு என்று கூறலாம். அன்பும் சில சமயங்களில் சட்டபூர்வமான விலையாகும். ஒரு கணவன் தனது மனைவிக்கு ஒரு சொத்தினை தானமாக (gift) அளிக்கையில் அங்கு அன்பே விலையாக கூறப்படும். ஆனால் அவ்விதமான ஒப்பந்தங்கள் எழுத்தால் எழுதப்பட்டு பதியப்பட்டு (register) இருக்க வேண்டும். இல்லை செல்லாது. மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் நெருங்கிய உறவினர்களாக இருத்தல் வேண்டும் (Section 25 Contract Act). எனவே, ஒப்பந்தச் சட்டத்தால் பலன் இல்லை.

ஆனால், சட்டபூர்வமான உரிமை இருந்தாலே பரிகாரம் கோர இயலும் என்பது பழைய சட்டக் கருத்து (ubi jus ibi remedium என்று லத்தீனிலும் where there is a right there is a remedy என்று ஆங்கிலத்திலும் கூறுவார்கள்). ஆனால், உரிமைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலே, பரிகாரமென்பதால்... சட்டம் எதிர்பார்த்திராத நிகழ்வுகளை பின்னாட்களில் சந்திக்க நேருகையில் பாதிக்கப்படுபவருக்கு நீதி கிடைக்காமல் போனதன் விளைவு, தீங்கியல் சட்டம் (law of torts) என்ற சட்டம் யாராலும் எழுதப்படாமலேயே எந்த சட்ட மன்றத்தாலும் இயற்றப்படாமலேயே முகிழ்த்து இன்று பெரும் சட்டப்பிரிவாக வளர்ந்து நிற்கிறது. இதன் சிறப்பே மாறி வரும் சூழலுக்கு ஏற்ப மேலும் மேலும் வளர்வதுதான். உதாரணமாக, அமைச்சர் தயாநிதி மாறன் ம.தி.மு.க. தலைவர் வைகோ தன்னைப் பற்றி அவதூறாக பேசி மான நஷ்டம் விளைவித்ததாக நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது நாம் அறிந்தது. அவமரியாதையாக பேசினால் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று நமது எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை. ஆனாலும் தீங்கியல் சட்டப்படி அவதூறாக பேசியவரின் செயலால் மற்றவருக்கு இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என்றும் அந்த இழப்பிற்கு ஈடாக பணம் தரலாம் என்றும் நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்புகளே இங்கு சட்டம். போபாலில் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் யூனியன் கார்பைடு மீது தாக்கல் செய்த வழக்கும் தீங்கியல் சட்ட அடிப்படையில்தான்.

எனவே காதலில் ஏமாற்றினால் நஷ்ட ஈடு தர வேண்டுமென்று சட்டம் ஏதும் இயற்றவில்லையெனினும், சட்ட ரீதியில் நஷ்ட ஈடு பெற பாதிக்கப்பட்டவருக்கு வழியில்லாமலில்லை. இது வரை இத்தகைய வழக்கினை நான் கேள்விப்பட்டதில்லை. ஆனாலும் ஏற்கனவே கூறியபடி தீங்கியல் சட்டம் நித்தம் வளரும் ஒரு கற்பக தரு (expanding branch of jurisprudence). எனவே, இப்படி ஒரு வழக்கு தொடுக்கப்படுகையில், வழி காட்டும் முன் தீர்ப்புகள் இல்லை எனினும் அடிப்படை கூறுகள் மற்ற தீங்கியல் வழக்குகளோடு ஒத்துப் போகின்றன. உதாரணத்திற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து காதலித்து பின்னர் ஏமாற்றினால், அப்பெண்ணுக்கு ஏற்படும் மன உழைச்சல், அவமானம், பிற திருமண வாய்ப்புகளில் பாதிப்பு மற்றும் காதலுக்காக செய்த செலவு ஆகியவை நஷ்டங்கள். இதனை தகுந்த முறையில் நீதிமன்றத்தில் நிரூபிக்கையில், நஷ்ட ஈடு பெறும் வாய்ப்பு அதிகம் உண்டு என்றே எண்ணுகிறேன். ஆனால், இவ்வாறு வழக்கு தொடுக்கும் வரை செல்லக்கூடிய பெண் யாரேனும் இருக்கிறார்களா என்ன?

Advocacy is also an art of impossibility’

2 comments:

KARTHIKRAMAS said...

பிரபு,
உங்கள் பதிலால் காதலில் எந்த சந்தர்ப்பங்கள் சட்டப்படி குற்றமாகும் என்று புரிந்து கொள்ளமுடிகிறது.விரிவான பதிவுக்கு மிக்க நன்றி.

Doondu said...

அந்நியன் என்ற வெங்கட்ரமணிக்கு பதில்:-

//நான் என் ஜாதியை பெருமையாக சொல்பவன் இல்லை என்பது என் பதிவுகளை படித்தாலே தெரியும். சொல்லப்போனால் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உயர்வுக்கு பாடுபடும் ஒரு லாபத்துக்கல்லாத அமைப்பில் சில ஆண்டுகள் தன்னார்வலராக (volunteer) பணிபுரிந்தேன். என்னை ஒரு Moderator ஆக கருதி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.//

வெங்கட்ரமணி, நீங்கள் பிறப்பால் ஒரு பார்ப்பனன் என்பது எங்கள் இயக்கத்திற்கு முன்பே தெரியும். உங்களின் தன்னார்வத் தொண்டுகளுக்கும் அது சார்ந்த செயல்களுக்கும் மரியாதை செலுத்துகிறோம். நீங்கள் இன்னமும் செயல்படுவ்தாக இருந்தால் தயவு செய்து எமக்கு மின்மடல் இடவும். நாங்களூம் எம்மை இணைத்து தொண்டுகள் செய்ய ஆயத்தமாக இருக்கிறோம்.

//நீங்கள் நிஜமாகவே ஜாதியில்லாத சமுதாயத்தை உருவாக்கும் உயரிய நோக்கத்தை கொண்டவர்களாக இருந்தால் ஏன் ஒரு தீவிரவாத இயக்கம் போல் செயல்படுகிறீர்கள்?//

பிரச்னையின் ஆரம்பம் தெரியாமல் நீங்கள் உளறுகிறீர்கள்! முதன்முதலில் எங்கள் இயக்கம் அருமையாகத்தான் ஆரம்பமானது. முதன்முதலில் நல்ல கருத்துக்களாக முன்வைத்தோம். ஆனால் கேடுகெட்ட சில பார்ப்பன வெறி பிடித்த பைத்தியக்கார பார்ப்பனர்கள் பிரச்னையை திசைதிருப்பவே நாங்கள் சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளைப் பின்பற்றினோம். எங்கள் இயக்கம் தீவிரவாத வழிமுறைகளைப் பின்பற்ற மாயவரத்தான் ரமேஷ்குமாரும் டோண்டு ராகவனும் முழுமுதற்காரணம். இன்றைக்கும் எம் இயக்கம் ஜாதி, மதம் கடந்த தொலைநோக்குப் பார்வையோடுதான் சிந்திக்கிறது, எழுதுகிறது. சில இடங்களில் தன் ஜாதியை பெருமையாகச் சொல்லும் பார்ப்பான்களை தீவிரமாக எதிர்க்க வேண்டி இருக்கிறது.

//இத்தனை பேரை, குறிப்பாக பிராமணர்களை ஏன் குறி வைக்கிறீர்கள்? அவர்கள் எல்லாரும் ஜாதிவெறியர்கள் என்று என்னால் நம்பமுடியவில்லை.//

அது என்ன குறிப்பாக பார்ப்பனர்களைச் சொன்னதும் உங்களுக்கு பீறிக் கொண்டு வருகிறது??? உங்களின் பார்ப்பன புத்தி எப்படிச் சிந்திகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். நாங்கள் குறிப்பாக எல்லாம் பார்ப்பனர்களைக் குறிவைக்கவில்லை. நான் வடகலையில் பிறந்த ஒரு ஐயங்கார், இந்த ஜாதியில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று தமிழ் வலைப்பதிவர்கள் முன்னிலையில் முதமுதலில் சொன்னது உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன். அதனாலேயே நாங்கள் எதிர்க்க ஆரம்பித்தோம். எந்த தலித்தாவது நான் தலித்தாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று வலைப்பதிவில் எழுதி இருக்கிறானா? ஏன் மிருகத்தினைவிட மிகக்கேவலமான பாப்பான் மட்டும் இந்த இழிசெயலைப் புரிந்தான்? அதுபற்றி கொஞ்சமாவது நீ ங்கள் சிந்தித்தீர்களா? உம் கூட்டம் சிந்தித்ததா??? முதன்முதலில் வலைப்பதிவு உலகில் நான் இந்த ஜாதி என்று எவன் கூறினான்? உங்கள் ஜாதியைத்தவிர வேறு யாராவது கூறி இருக்கிறானா? அப்படி எவனும் சொன்னால் தயவு செய்து தெரிவிக்கவும்.

//ஏன் தமிழ்மணம் போன்ற ஒரு ஆக்கபூர்வமான வலைத்தளத்தில் பெண்களை நிம்மதியாக இருக்கவிடமாட்டேன் என்கிறீர்கள்? ஏன் உங்கள் கொள்கைக்கு ஒத்துப்போகாத விவகாரமான பின்னூட்டங்கள்?//

எது கொள்கைக்கு ஒப்பாத பின்னூட்டங்கள்? நீங்கள் பாப்பான் நல்லவன் வல்லவன் என்பீர்கள். கைகொட்டி வாய்பொத்திக் கேட்டுக் கொண்டிருக்க நாங்கள் என்ன மட ஜென்மமா? அந்தக் காலமெல்லாம் மலையேறி விட்டது வெங்கட்ரமணி ஐயங்கார்! வேற உலகம் போங்க. கைபர் போலன் கணவாய் வழியாக பிழைக்க வந்த வந்தேறிக் கூட்டத்திற்கே அவ்வளவு இருக்கும்போது இந்த மண்ணின் மைந்தர்களான எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?

தமிழ்மணம் போன்ற ஆரோக்கியமான வலைத்தளத்தில் முதன்முதலில் என் ஜாதி இதுவென்று மார்த்தட்டிச் சொன்னது ஒரு அய்யங்கார். அன்று அவனைத் தட்டிக் கேட்காமல் எங்கே நீங்கள் சென்று இருந்தீர்கள்? செரைக்கவா? அன்றே அவனைத் தட்டி அவனை தனது தமிழ்மணத்தில் இருந்து நீக்காமல் காசி என்ற ஒரு இழிபிறவியும் அவனை வைத்திருந்ததால்தான் சண்டை பெரிதானது. இன்னமும் சண்டை நிறைவுறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உங்களைபோன்ற இன்னும் ஓராயிரம் மென்பொருளாளர்கள் வந்தாலும் எங்கள் இயக்கத்தின் மயிரைக்கூட உங்களால் புடுங்க முடியாது! எங்கள் இயக்கமும் மென்பொருளில் ஊறியது. எனவே உங்களுக்கு பெரிய சவாலை நாங்கள் கொடுப்போம் என்பது உண்மை.

தமிழ்மணம் மற்றும் தேன்கூட்டின்மூலம் தம்மை இணைத்துக் கொண்டு எழுதும் பெரும்பாலான பதிவாளர்கள் இந்த பிரச்னையை எப்படி எதிர்கொள்வது? அல்லது நிறுத்துவது? ரொம்ப சிம்பிள். முதலில் டோண்டு என்பவனை மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள். எங்கள் இயக்கம் தாமாகவே அடங்கிவிடும். எங்கள் தலைமைக் கழகம் மூலம் ஒவ்வொருவருக்கும் சொல்லி அனுப்பி எங்கள் இயக்கத்தினரை நேர்மையுடன் கருத்துகள் எழுதச் சொல்கிறோம். ஒன்று தெரியுமா உமக்கு? பார்ப்பான்களின் தீவிரவாதம் அதிகமாக அதிகமாக எங்களின் இயக்க தோழர்களும் அதிகமாகிறார்கள். ஆப்பு, போலி அன்னியன் போன்றோர் எம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்து செய்தி அனுப்பி இருக்கிறார்கள்.

முதலில் டோண்டுராகவனையும் மாயவரத்தான் ரமேஷ்குமாருக்கும் உங்கள் ஆலோசனையைச் சொல்லுங்கள். அப்படி இல்லாமல் அவர்களோடு சேர்ந்துகொண்டு பார்ப்பன சமுதாயத்துக்காக நீங்களும் குரைப்பீர்கள் என்றால் உங்களை எப்படி அடக்கியாள்வது என்று எங்களுக்கும் தெரியும்.


//என் பேரில் உள்ள போலி உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர் இல்லை என்றால் உங்கள் இயக்கம் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்.//

உண்மைதான். இவ்வளவுக்கும் காரணம் யார்? மிருகத்தினை விடவும் கேவலமாகச் செயல்பட்ட நரசிம்மன் ராகவன் என்ற வடகலை அய்யங்காரால்! ஏன் சாவதானமாக அவனை மறந்து விடுகிறீர்கள்? ஏன் மாயவரத்தான் ரமேஷ்குமாரை மறந்து விடுகிறீர்கள்? இந்த இருவரும்தானே எம் இயக்கம் வளர முக்கிய காரணமானவர்கள்!!!


//கீழ்க்கண்ட புனைபெயர்களில் எவர்கள் உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லமுடியுமா?
மத்தளராயன்
திருப்பாச்சி
போலியன்//

இவர்கள் எம் இயக்கம் இல்லை. விட்டால் ஊரில் உள்ள எல்லா பார்ப்பன எதிர்ப்பாளர்களையும் எம் இயக்கம் என்பீர்கள் போலத் தெரிகிறது! உங்களுக்கு என்ன? வலைப்பதிவாளர்கள் எல்லோரும் பார்ப்பான் வாழ்க என்று கோஷம்போட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா??? உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா???

//இதைப்போல் நிறைய பேர் கிளம்புவதால்தான் தமிழ்மணத்தின் நலன்மேல் அக்கறை கொண்ட எங்களைப்போன்றவர்கள் இதற்கு தொழில்நுட்ப தீர்வுகள் கொண்டுவர வேண்டியதாய் இருக்கிறது. உங்கள் பதிலுக்கு காத்திருப்பேன்.//

டோண்டுராகவன் போன்ற கீழ்த்தரமான இழிபிறவிகள் தங்கள் ஜாதியைப் பெருமையாகச் சொன்னதால்தான் எங்கள் இயக்கமே ஆரம்பமானது. அவன் முன்வந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே எங்கள் இயக்கம் முற்றாக கலைக்கப்படும். அவனுக்கு ஆதரவுக்கரம் அளிக்கும் காசி போன்ற கீழ்த்தரமானவர்கள் என்னதான் நினைத்தும் எங்கள் முடியைக்கூட அசைக்க முடியவில்லை!!! நான் முன்பே சொன்னதுபோல எத்தனை மென்பொருள் வல்லுனர்கள் வந்து தீர்வுகள் கண்டாலும் இதனைக் கட்டுபடுத்த இயலாது. காரணம் எமக்கும் மென்பொருள் தெரியும் என்பதை நீங்கள் வசதியாக மறந்து விடுகிறீர்கள். நம்மைவிட எதிரி பன்மடங்கு வலுவானவன் என்று நினைத்து நீங்கள் உங்கள் முயற்சியைத் தொடங்கினால் எளிதில் எங்களை வென்றுவிடலாம். ஆனால் கேவலமான பார்ப்பன இனம் அவ்வாறு நினைக்க மறுக்கிறது. இதுதான் உண்மை.

நீங்கள் மட்டுமில்லை, இன்னும் ஓராயிரம் மென்பொருள் வல்லுனர்கள் வந்தாலும்கூட எம் இயக்கத்தினை அழிக்க முடியாது. டோண்டுராகவன், மாயவரத்தான் ரமேஷ்குமார் போன்ற இழிந்த பிறவிகள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே எம் இயக்கம் கலைக்கப்படும். அதுவரையில் எம் விளையாட்டு தொடரும். முடிந்தால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்.

போலிடோண்டு தலைமைக் கழகம்
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி
துபாய்.