நேற்று (24/12/11) தினகரன் நாளிதழைப் பிரித்த எனக்கு ஏதோ வித்தியாசமாக இருந்தது. கடந்த சில நாட்களாக, அதன் இரண்டு பக்கங்களில் வெளியிடப்பட்டு வந்த முல்லைப் பெரியாறு போராட்டம் சம்பந்தமான் புகைப்படங்களைக் காணவில்லை. இரண்டு பக்கம் என்ன, ஒரு பக்கம் இல்லை ஒரு புகைப்படம் கூட காணவில்லை!
ஆனால், தெளிவாக கண்ணில் பட்டது, கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் புகைப்படங்கள், செய்திகளில் அல்ல. கேரள அரசு விளம்பரங்களில். இரண்டு பக்கங்களில் அரை, அரைப்பக்க அளவில் ‘எதுவும் முக்கியத்துவம்’ இல்லாத, குறிப்பாக தமிழகத்துக்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாத கேரள அரசு விழாக்களைப் பற்றிய விளம்பரங்கள்.
Splendid Coincidence?
தற்செயலானதா, என்று நான் கூற வருவது, புகைப்படங்கள் இல்லாமல் போனதற்கும், கேரள விளம்பரங்கள் இடம் பிடித்தற்கும் இல்லை. இந்த பதிவினை தட்டச்சிக் கொண்டிருக்கையில், பின்புலத்தில் பதிவர் ரோசாவசந்த கூறிய சுட்டியினை பிடித்து ஓடிக்கொண்டிருக்கும் ‘கேளுங்கள் தரப்படும்’ பாடலில் ‘யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்காய் காட்டிக் கொடுத்தானே’ என்ற டேப் ராஜமாணிக்கத்தின் கணீர் வரிகள்!
-oOo-
அதாவது, ‘என்ன இந்தப் பிரச்னை இப்படி போய்க்கொண்டேயிருக்கிறது. அரசு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து இதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என்ற வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்து பலரின் கவனத்திலிருந்து தப்பி விட்டது என்றே நினைக்கிறேன். அந்த கருத்து எழுதப்பட்ட தொனியிலிருந்தே, மூர்க்கத்தனமான ஒரு நடவடிக்கைக்கு காவல்துறையை தூண்டி விடுவது போல இருந்தது. மேலும், கம்பம் பகுதியில் நடப்பதை, எதோ அரசியல் கட்சிகளும், மொழி வெறியர்களும் தூண்டி விட்டு நடப்பது போலத்தான் சித்தரித்துள்ளது. உண்மையிலேயே, அரசியல் கட்சிகளோ அல்லது பிற இயக்க தூண்டுதலோ இல்லாமல் மக்கள் சுயமாகவே போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்கள் என்றால் அது முல்லைப் பெரியாறு போராட்டமும், கூடங்குளம் போராட்டமும் ஆகும். போராட்டத்தின் தீவிரம் உணர்ந்து அரசியல் கட்சிகள் மற்றும் பிற இயக்கங்கள் தங்களை அதனோடு இணைக்க முயலுகின்றன. அவ்வளவுதான்.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வரும் வைக்கோவிற்கே பெரிய அளவில் ஏதும் ஆதாயம் இந்தப் போராட்டத்தில் இருப்பது போலத் தோன்றவில்லை!
ஆனால், இதே டைம்ஸ் குழுமம் தில்லியில் அன்னா ஹசாரேவின் போராட்டத்தை ஏறக்குறைய ஸ்பான்ஸர் செய்தது. அன்னா ஹசாரேவின் போராட்டம் தில்லியை ஸ்தம்பிக்க வைத்தது என்று பெருமையடித்த டைம்ஸ், அப்போதும் இதைப் போலவே, காவல்துறை வேகமாக செயல்பட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தால், இரண்டு நாட்கள் முன்பு அதன் முதல் பக்கத்தில் வெளிப்படுத்திய கருத்துக்கு உள்நோக்கம் உண்டு என்று கூறியிருக்க மாட்டேன்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கும்பல் (mob) குறிப்பிடுவது எனது அனுமானத்தை வலுப்படுத்துகிறது.
டைம்ஸ் சரி, ஹிந்து கூட இன்னமும் முல்லபெரியார் என்றுதானே கூறுகிறது?
மதுரை
24/12/11Times View
For a government which listed law and order as its primary responsibility, the continued unrest and violence along the Tamil Nadu-Kerala border over the Mullaperiyar dam, is a poor reflection of the AIADMK regime’s administrative abilities. Day after day, for more than two weeks, the police force here has been grappling with protesters driven by regional jingoism whipped up through political statements and rallies. The stir has crippled interstate trade and travel, besides affecting the livelihood of thousands in both states. It is time the governments in both states joined hands to restore normalcy and sobriety