‘இந்த நடவடிக்கை, ஒரு பாராட்டத்தக்க நோக்கம்தான். ஆனால், பல்வேறு வகுப்பைச் சார்ந்த மக்களின் ஒரு அமைப்பு ............விதிமுறைகளை வகுக்கும் வண்ணம் தாங்களே இவ்வாறு சட்டமியற்றிக் கொள்ள முடியுமா என்பதுதான் இங்கு ஆழமாக பரிசீலிக்க வேண்டிய ஒரு விடயம்’
மேற்கண்ட வாக்கியம் தாங்கள் கூறுவது போல ஜன்லோக்பால் சட்டம் ஒன்றை இயற்றினால்தான் ஆயிற்று, என்று வலியுறுத்தும் அன்னா ஹசாரே குழுவின் நடவடிக்கையை பற்றி யாரோ கூறியது என்று நினைத்தால்...அது தவறு!
நீதிமன்றம் இவ்வாறு மக்கள் குழு ஒன்று சட்டமியற்றிக் கொள்ள முடியுமா என்று வினவிய நடவடிக்கை, ஒரு திருமண முறை!
ஆம், திருமண முறைதான். 1934ம் ஆண்டில் அப்பொழுதான் முளைவிடத் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தினர் நடத்தி வைத்த முதல் திருமணம் செல்லத்தகுந்ததா என்ற கேள்விதான் தெய்வானை ஆச்சி வழக்கில் எழுப்பப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பில்தான், உயர்நீதிமன்றம் இவ்வாறு ‘சுயமரியாதை இயக்கம்’ என்று கூறிக்கொள்ளும் ஒரு அமைப்பு தானே ஒரு திருமணமுறையை ஏற்ப்படுத்தும் வண்ணம் தனக்குத்தானே சட்டமியற்றிக்கொள்ள முடியுமா என்று கேட்டது.
இறுதியில் சுயமரியாதை திருமண முறை சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பளித்தது.
‘பாராட்டத்தக்க நோக்கம் கொண்டவை’ என்று உயர்நீதிமன்றத்தால் புகழப்பட்டாலும், இவ்வாறு அமைப்பு ஒன்று, தானே சட்டமியற்ற இயலாது என்று நிராகரிக்கப்பட்டதால், சுயமரியாதை இயக்கத்தில் பெரிய ஆதங்கமேற்ப்பட்டது. மேலும் முதலாவது தீர்ப்பு கூறப்பட்ட 1953ம் ஆண்டு போல அல்லாமல் 1966ல் சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய மக்கள் சக்தியாக உருவெடுத்திருந்தது. அதன் அரசியல் தலைவராக முன்னிறுத்தப்பட்ட அண்ணாதுரை ஏறக்குறைய பெரும்பான்மை தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார்.
ஆனால், அண்ணாதுரை ஒரு வருடம் காத்திருந்தார்.
அடுத்த ஆண்டே அவரது திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக ஆட்சியை கைப்பற்றியது. தமிழக முதல்வராக பதவியேற்ற அண்ணாவின் அரசினால் முதலில் இயற்றப்பட்ட சட்டத்திருத்தம், சுயமரியாதை திருமணத்தையும் ஒரு திருமணமுறையாக அறிமுகம் செய்து பிரிவு 7A ஐ இந்து திருமணச் சட்டத்தில் ஏற்ப்படுத்தியதுதான் (Act 21 of 1967)
அது அண்ணா வழி!
அன்னா வழி?
மக்களாட்சியில் மாற்றத்திற்கு வழியில்லையோ?
மதுரை
30/08/11
5 comments:
இந்தப் பதிவு எனது 201ம் பதிவு. போன பதிவு 200 என்பதை கவனிக்கவில்லை
இந்து திருமண முறைகள் பற்றியும் மேற்கண்ட வழக்குகள் குறித்தும் எனது பழைய பதிவு ‘இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா?’
http://marchoflaw.blogspot.com/2006/09/blog-post_27.html
Deivanai Achi Vs Chidambaram Chettiar AIR 1954 Mad 557
Rajathi Vs Chelliah 1966 (2) MLJ 40
//சுயமரியாதை திருமணத்தையும் ஒரு திருமணமுறையாக அறிமுகம் செய்து பிரிவு 7A ஐ இந்து திருமணச் சட்டத்தில் ஏற்ப்படுத்தியதுதான் (Act 21 of 1967)//
பிரபுராஜதுரை,
சுயமரியாதை எப்படி இந்து திருமணச் சட்டத்தில் ஒரு பகுதியாக ஆயிற்று?
அது மதங்கள் சாராதவர்களின் தனிச்சட்டமாக அல்லவா இருந்திருக்க வேண்டும்?
எந்த மதத்திலும் சேராத ஒருவர், திருமணப் பதிவை செய்துகொள்ள வேண்டும் என்றாலும் இந்து திருமணச் சட்டம் 7ஆ தானா?
இந்து என்ற ஒன்றையே சட்டம் சரியாகச் சொல்லாத நிலையில் அதன்மீது மேலும் மேலும் சார்ந்திருப்பது சரியா?
இந்து மதத்திற்கு என்று எந்த சட்டதிட்டங்களும் இல்லை. யார் யார் இது இது இல்லையோ அவர்கள் எல்லாரும் இந்துக்கள் என்ற அளவில்தான் சைவம், சமணம், வைணவம் , சீக்கியம் என்று எல்லாவற்றையும் கொண்ட சாம்பாராக இந்துமதம் உள்ளது.
THE CONSTITUTION OF INDIA Article 25 (2)(b) அதன் பங்கிற்கு ஒரு குழப்பமான விளக்கத்தைச் சொல்லிச் செல்கிறது.
http://india.gov.in/govt/documents/english/coi_part_full.pdf
Fundamental Rights Right to Freedom of Religion
25.(1)Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practice and propagate religion.
(2)Nothing in this article shall affect the operation of any existing law or prevent the State from making any law.
(a)regulating or restricting any economic, financial,political or other secular activity which may be associated with religious practice;
(b)providing for social welfare and reform or the throwing open of Hindu religious institutions of a public character to all classes and sections of Hindus.
Explanation I.The wearing and carrying of kirpans shall be deemed to be included in the profession of the Sikh religion.
Explanation II.—In sub-clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion,and the reference to Hindu religious institutions shall be construed accordingly.
*****
என்னளவில், இந்தியாவில் பிறந்து எந்த ஒரு நிறுவனப்படுத்தப்பட மதத்திற்கும் மாறாதவரை ஒருவர் இந்துவாகவே அறியப்படுகிறார் அவர் எந்த மதைத்தையும் சாரதவராக இருந்தாலும்.
இந்து என்றால் யார் என்று விளக்கும் தெளிவான சட்டங்கள் ஏதும் உள்ளதா?
முதலில் கூறப்பட்ட திருமணம் நடைபெற்ற ஆண்டு ஏதாவது ஒரு மத சட்டத்தின்படிதான் இருவர் திருமணம் செய்ய இயலும். ஆனால், 1954ம் ஆண்டில் இயற்றப்பட்ட சிறப்பு திருமண சட்டத்தின்படி எந்த மதத்தை சார்ந்தவர்களும், எவ்வித சடங்கு முறைகளும் இன்றி திருமண பதிவாளர் முன்பு திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் பிரச்னை, அவர்களுக்கு குடும்ப சொத்தில் பங்கு கிடைக்காது. 1976ம் ஆண்டுதான் இது சரி செய்யப்பட்டது. எனவே, சுயமரியாதை திருமணம் இந்து சட்டத்தில் ஏற்ப்படுத்தப்பட்டது. இங்கு சுட்டி கொடுக்கப்பட்ட பழைய பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன்.
ஓ அப்பவே விளக்கிவிட்டீர்களா? மிக்க நன்றி!
http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_09.html
எனவே ‘தாங்கள் எந்த மதமுமாக இல்லையென்றாலும் நாடு உங்களை இந்து மதமாக எழுதிக் கொள்கிறது’ என்பது இல்லை. மதமின்றி இருப்பதற்கு யாருக்கும் முழு உரிமை உண்டு!
Post a Comment