வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக, கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் சென்றிருந்தேன். எனது வழக்கு அடுத்த நாள்தான் என்றாலும், மூத்த வழக்குரைஞருடன் வழக்கு பற்றி விவாதிக்க முன் தினமே நீதிமன்றம் சென்றேன். ’மெட்டல் டிடக்டர்’, ஸ்டென் கன் சகிதமான காவலர்கள் என்று அனைவரையும் வாயிலிலேயே முழுமையாக சோதித்த பிறகே உள்ளே அனுப்பினர்.
சாதாரண உடையில் இருந்ததால், நானும் பொதுமக்கள் செல்லும் வாயில் வழியாக செல்ல முயன்றேன். மூத்த வழக்குரைஞரால், ‘ஒரு குறிப்பிட்ட வழக்கிற்காக என்னை அனுமதிக்குமாறு’ வேண்டிய சீட்டு என்னிடம் இருந்தது. ஆனால் வாயிலில் இருந்தவர்கள் அந்த வழக்கு எண்ணை தங்களது கணிணியில் தட்டிப் பார்த்து, சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது எனவும், அதனால் நான் உள்ளே செல்வதில் அர்த்தமில்லை என்று கூறி என்னை திருப்பி அனுப்பி விட்டனர்.
நான் வழக்குரைஞர் என்றால், அடையாள அட்டை எங்கே என்றனர்.
வழக்குரைஞராக 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தாலும், நான் இதுவரை ஒரு அடையாள அட்டை (identity card) கூட வைத்துக் கொண்டதில்லை.
அட! இப்படி ஒரு பாதுகாப்பா என்று வியந்தேன்.
***
மறுநாள் வழக்குரைஞர் உடைகளுடன் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றேன். சக வழக்குரைஞர் ஒரு கூட வர, வழக்குரைஞர்களுக்கான வாயில் வழியாக உள்ளே சென்றேன். காவலர்கள் இருந்தனர். ஆனாலும், நான் யார் என்று ஒருவரும் வினவவில்லை. அடையாள அட்டை இருக்கிறதா என்றும் கேட்கவில்லை.
முக்கியமாக, நான் அணிந்து சென்ற அங்கிக்குள்ளே ஒரு ஏ.கே.47ஐ மறைத்து எளிதில் எடுத்துச் செல்ல முடியும். ஆயினும் என்னை யாரும் துழாவவில்லை!
’போங்கையா, நீங்களும் உங்கள் பாதுகாப்பும்’ என்று நினைத்துக் கொண்டேன்!
***
பத்ரியின் ’எண்ணங்கள்’ வலைப்பதிவில் பின்னூட்டமிட்டுள்ள நண்பர் ஒருவர், ”The idea of Reservation policy and it's time frame is conveniently forgotten here. Any reservation policy should not go beyond 10 years. but we have been practicing this policy for more than 60 years in states like TN. now, only those who r economically backward [poor class] are the ones need attention” என்ற ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார்.
நமது நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு எனப்படும் இடப்பங்கீடானது அரசியலமைப்பு சட்ட பிரிவு 15 மற்றும் 16ன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதற்கு எவ்விதமான கால வரையறையும் கிடையாது.
பாராளுமன்ற, சட்டமன்ற, நகர்மன்ற, பஞ்சாயத்து தேர்தல்களில், அட்டவணை பிரிவினருக்காக தனித் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. அவ்விதம் தனித் தொகுதி ஏற்ப்படுத்துவதற்குத்தான் பிரிவு 334ன் கீழ் காலவரையறை உள்ளது.
ஆயினும் பல சமயங்களில் ஏதோ இடப்பங்கீட்டிற்கும் காலவரையறை உள்ளது போன்ற தவறான தகவல் பரிமாறப்படுகிறது. பலராலும் படிக்கப்படும் எண்ணங்கள் போன்ற நம்பகத்தன்மை வாய்ந்த பதிவுகளில் இவ்வாறு தவறான தகவல்கள் இடம் பெறுவது துரதிஷ்டவசமானதாகும்.
மதுரை
07/09/11
6 comments:
// ஆயினும் பல சமயங்களில் ஏதோ இடப்பங்கீட்டிற்கும் காலவரையறை உள்ளது போன்ற தவறான தகவல் பரிமாறப்படுகிறது. பலராலும் படிக்கப்படும் எண்ணங்கள் போன்ற நம்பகத்தன்மை வாய்ந்த பதிவுகளில் இவ்வாறு தவறான தகவல்கள் இடம் பெறுவது துரதிஷ்டவசமானதாகும். //
But the consecutive comments have given a clear picture about this mistake. There is no point in suspecting the reliability of the blog, since a wide variety of comments regarding any post which are completely contradicting to each other are getting posted. This is to evoke the participation and to attain final clarity.
I think it is just a wish given by the anonymous commenter. Not really as a fact.
Well, it reads more like a wish than a statement on law. However such perception, I have come across in many discussions on reservation
காலவரையறை சட்டத்தில் உள்ளது என யாரும் கருதவில்லை. சுதந்திரத்திற்குப் பின் பாராளுமன்றத்தில் விவாதித்து இடஒதுக்கீட்டை கொண்டுவந்த போது ‘அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இருக்கலாம்’ என்ற மன்ற உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில் கொண்டுவரப்பட்டது என்பதே புரிதல். அன்று அவர்கள் நினைத்ததைக் காட்டிலும் பலகாலம் நாம் நீட்டித்திருக்கிறோம்... இது குறித்து தரவுகளுடன் பேசுதல் நலம் பயக்கும்..
மேலும் ஒதுக்கீடு உள்ள சமூகங்களுக்கிடையேயே ஏழைகளுக்கு வாய்ப்பில்லாமல் போவதை கண்டுகொள்ளாமல் இருப்பது அயோக்கியத்தனம் தவிர வேறில்லை...
In the debates on framing of the constitution it was envisaged that reservations would be necessary for 10 years.As it has been implemented for so long why not have a review of it.Sattanathan Commission suggested that the reservation policy in Tamil nadu could be revised as by late 60s/early 70s some communities had benefitted more than others.
Reservation policy in India is a cruel joke on principle of equality.
அரசியலமைப்பு சட்டவரைவு குழு இடஒதுக்கீட்டிற்கான பிரிவினை விவாதித்த பொழுது, குன்ஸ்ரு என்பவரால் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதனை மற்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில் குன்ஸ்ரு அவர்களின் திருத்தம் நிராகரிக்கப்பட்டது. எனவே 'இட ஒதுக்கீடு பத்து வருடங்களுக்குதான்' என்ற வாதத்தில் உண்மை ஏதும் இல்லை என்பதே என் கருத்தாகும்
I dont know whether reservation policy is a cruel joke on the principle of equality but I know the principle of equality is a cruel joke on humanity
Post a Comment