29.5.07

விகடன் - உண்மைக் கலைஞனின் கோபம்

திரைப்பட நடிகர்களின் பின்னே விசிறி என்று சுற்றுவது முட்டாள்களின் வேலை என்று முகத்திலடிக்கும்படி கூறுகிறார் பிரகாஷ்ராஜ். ‘ஸ்பேடை ஸ்பேட்’ என்று கூறக்கூடிய ஒரு நடிகர் தமிழ் திரையுலகில் இருப்பது அதிசயம். ஆனந்த விகடனில் வெளிவரும் பிரகாஷ்ராஜின் கட்டுரைகள் பற்றி கடந்த கிறிஸ்துமஸ் ஆராதனையில் பாதிரியார் குறிப்பிட்டார். அவ்வப்போது படிக்கையில் அவர் மீதான மதிப்பு கூடும். தற்பொழுது இன்னும் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.

முட்டாள்தனம் என்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அவ்விதமான அறியாமைகளுக்கு மன்னிப்பும் இல்லை என்று அண்டன் செகோவ் கதையை உதாரணம் காட்டுகிறார்.

பிரகாஷ்ராஜ் தனது திறமையினை நம்புகிறார். பிறகு ஏன் ரசிகர் என்ற சோம்பேறிக் கூட்டங்கள் என நினைத்திருக்கலாம். பல நடிகர்களுக்கு அவ்வாறு தோன்றலாம். தங்கள் மீது கொண்ட அவநம்பிக்கையின் காரணமாக இவற்றை பொறுத்துக் கொள்கிறார்கள் என்பது எனது அனுமானம். முன்பு ஒருமுறை குறிப்பிட்டேன். சரக்கு குறையும் இடத்திலெல்லாம், இவ்விதமான விளம்பர யுக்திகள் தேவைப்படும் என்று. சரக்கு எவ்வளவு தூரம் குறைகிறதோ அவ்வளவு தூரம் ரசிகர்களை முட்டாளாக்குவதும் அதிகமாகும். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்று தொடர்பு படுத்திப் பார்த்தால் விளங்கலாம்.

கமலஹாசன் அவ்வப்போது, தன்னை இப்படியான கூட்டங்களிலிருந்து விடுபடுத்திக் கொள்ளப்பார்ப்பார். பின்னர் தனது வெற்றியின் மீது நம்பிக்கையில்லாமல் நற்பணி மன்றம் என்று காம்பிரமைஸ் செய்து கொள்வார். குருதிப்புனல் படத்தில், கமலுக்கும் நாசருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களில், தீவீரவாதமெல்லாம் இங்கே செல்லாது என்று நாசருக்கு புரிய வைக்க ‘ரசிகர் பட்டாளங்களைப்’ பற்றி சில கூறுவார். எவ்வித வெட்கமுமின்றி அந்த வசனங்களுக்கு தேவி தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டிக் கொண்டிருந்தார்கள்.

பிரகாஷ்ராஜ் வேண்டாம், கவுண்டமணியிடம் இருந்தாவது தமிழக ஹீ(ஜீ)ரோக்கள் கற்றுக் கொள்வது நல்லது.

10 comments:

துளசி கோபால் said...

அட்டகாசம்! போட்டீங்க ஒரு போடு.

அதிலும் கடைசி வரி,

சூப்பர் பஞ்ச்!

வடுவூர் குமார் said...

நடிகர் பிரகாஷ்ராஜின் கட்டுரைகளை மிகவும் ஆர்வத்துடன் படிக்கும் வாசகனில் நானும் ஒருவன்.சாதாரண மனிதனின் எண்ணங்களை அவ்வப்போது மிக எளிதாக சொல்லியிருப்பார்.
கடவுள் மீது எனக்கு நம்பிக்கையில்லை என்றும், அதே சமயம் மனைவி பிள்ளையாரை கும்பிடுவது அம்மா ஜீசசிடம் வேண்டுவது என்று வீட்டு விஷயங்களை அப்படியே கண்ணாடி மாதிரி காண்பித்து எழுதியிருப்பார்.

ஹரன்பிரசன்னா said...

பிரகாஷ்ராஜைப் பற்றி நீங்கள்தான் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும். நல்ல சினிமா என்றும் ரசிகர்கள் நடிகர்களின் பின்னால் விசிறி என்று சுற்றுவது தவறு என்றும் இவர் சொல்வது எனக்கு ஸ்டண்ட்டாகவே தோன்றுகிறது. இவர் சமீபத்தில் தோன்றிய எல்லா மேடைகளிலும் (விருது பெற வந்த மேடைகள்) ரசிகர்களைக் குதூகலப்படுத்த "செல்லமே" என்று சொல்லாமல் மேடையை விட்டு இறங்குவதில்லை. ரசிக மனோபாவத்தை வளர்ப்பதிலும் திரையில் வரும் கதாபாத்திரமும் நடிகரும் ஒன்றே என்ற எண்ணத்தை வளர்ப்பதிலும் இவர் மற்றெந்த நடிகருக்கும் குறைந்தவரில்லை என்கிற எண்ணத்தையே அவருடைய அத்தகைய மேடை வெளியீடு எனக்குத் தோற்றுவித்தது. இடையிடையில் இப்படி நல்ல சினிமா, பேரலல் சினிமா, ரசிகனை வைவது என்று எதாவது சொல்லிக்கொள்ளவேண்டியதுதான். உண்மையில் ரசிகனை முட்டாள்தனத்திலிருந்து மீட்டெடுக்க விரும்பியிருந்தால், தோன்றும் மேடைகளில் விசிலடிச்சான் குஞ்சுகள் ரேஞ்சுக்கு செல்லம் என்று சொல்லிவிட்டுப் போவது ஏன்?

PRABHU RAJADURAI said...

பிரசன்னா,

எனக்கு பிரகாஷ்ராஜ் பற்றி அவரது கட்டுரை மூலம் மட்டுமே தெரியும். அவரைப் பற்றி ஆய்ந்து எழுதவில்லை.

எனினும் முக்கியமாக இங்கு கூற வருவது, ரசிகனின் அறியாயாமையை exploit செய்யும் நமது ஹீரோக்களைப் பற்றியது. அதற்கு பிரகாஷ்ராஜும் விதிவிலக்காக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், கவுண்டமணி?

மயிலாடுதுறை சிவா said...

நானும் பிரகாஷ்ராஜ் கட்டுரைகளை தொடர்ந்து படிப்பவன். அவர் மற்ற நடிகர் போல் ஓர் மிக சதாரண நடிகன் அல்ல, மிக மிக யாதர்த்தமான திறைமையுள்ள, தமிழ் உணர்வு மிக்க ஓர் நல்ல கலைஞன்.

பிரசன்னாவின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. செல்லமே என்று கூப்பிடுவது ஓர் சதாரண மகிழ்ச்சியூட்டும் செயல்.அவ்வளவுதான்..

மயிலாடுதுறை சிவா...

வெத்து வேட்டு said...

could you(or someone) please tell more about Kounda Mani..at some other places also someone mentioned high about K.mani?
Thanks

நாடோடி இலக்கியன் said...

மயிலாடுதுறை சிவாவின் கருத்துதான் என்னுடயதும்,அது ஒரு மகிழ்யூட்டும் செயலே! ப்ரகாஷ் ராஜ் கூறியிருப்பது பிளேடால் கையை அறுத்துகொள்ளும்,பாலாபிசேகம் செய்யும் ரசிகர்களை.உணர்ச்சிப் பெருக்கில் இது போன்ற செயல்களை செய்யும் ரசிகர்களை திசை மாற்றுவது சம்பத்தப்பட்ட நடிகர்களால் முடியும்,ஆனாலும் செய்யமாட்டார்கள்.

tekvijay said...

http://www.indiaglitz.com/channels/
tamil/article/34220.html

this is what kamal haasan is. he constantly maintains the distance btw his fans, no other actors has guts to behave so. saying that kamal consoles himself by saying that they are not fanclubs but welfare clubs - comedy panreenga.

and his feeling-low times - ha ha ha again comedy. he has lot of other positive sources to recharge him. anyway running welfare clubs is not a sin.

sometimes bloggers blabbers and this is one perfect example.....

[what a late comment frm me...!]

மதுமிதா said...

'செல்லம்' என்று பிரகாஷ்ராஜ் சொல்வது அவருடைய திரைப்படத்தில் அவர் சொல்லும் ஒரு வசனம்.

அதை மேடையில் சொன்னால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்னும் நோக்கம் என்றே கருதுகிறேன்.

விகடனில் வந்த அவரின் தொடர் அவரின் வேறு ஒரு புதிய‌ பரிமாணத்தையே காட்டியது.

RATHNESH said...

பிரகாஷ்ராஜ் அவர்களின் கட்டுரைகள் குறித்த தங்கள் விமர்சனம் மிகச் சரியே. உச்சிப்படியில் நிற்பதற்கும்; அடுத்த படிகளில் இருந்து கொண்டு உச்சத்திற்குப் போகும் எண்ணம் இல்லாமலோ அல்லது போக முடியாது என்பதை உணர்ந்து கொண்டோ இருப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் இது தான். கமல் ரஜினி விஜய் சிவாஜி எம்ஜிஆர் போன்றோர் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருந்தாலும் பேசி இருக்க முடியாது. சமரசம் இன்றி உச்சம் இல்லை. அரசியலில் ராம்தாஸ், கம்யூனிஸ்ட்டுகள், விஜய்காந்த், சரத்குமார் போன்றோர் உதிர்க்கும் சமூக அக்கறைப் பொன்மொழிகள் மாதிரி தான் இதெல்லாம்.