சில தினங்களுக்கு முன்னர் ‘திருப்பிக் கொடுத்தால் தாங்குவதற்கு பலம் இருக்கிறதா?’ என்று ஏறக்குறைய தினகரன் சம்பவத்தினை ஞாபகப்படுத்தும் தோரணையில் முதல்வர் கலைஞர், ஆனந்த விகடன் பத்திரிக்கையின் ஒரு நையாண்டியினைப் பற்றி எரிச்சலோடு குறிப்பிட்டதைப் படித்ததும், ‘ஏதோ ஆனந்த விகடன் அரசியல் நையாண்டியில் இதுவரை துக்ளக் கூட தொடாத உச்சத்தை எட்டிவிட்டது போல’ என்று நினைத்தேன். ஆனந்த விகடனை வாங்கிப் பார்த்தால், எவ்வித புத்திசாலித்தனமும் இல்லாத வழக்கமான நகைச்சுவைதான்.
இவ்வளவு தூரம் கடுமையான ஒரு பதிலினைக் கூறும் வகையில், வரம்பு மீறிய நக்கல், நையாண்டி ஏதும் அதில் இல்லை! முதல்வரின் மனைவிகள் அரசியலில் கொஞ்சம் கூட பங்கு பெறுவதில்லையா? தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் பற்றி விமர்சனம் கூடாது என்றால் சகிகலா குடும்ப உறுப்பினர் பற்றியும் விமர்சனம் கூடாதுதான்.
முதல்வரோடு தங்களை நெருக்கமாக காட்டிக் கொள்வதில், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் பெருமை அடைவது உண்டு. அதற்கு கொடுக்கும் விலைதான் இத்தகைய எதிர்வினைகள். தன்னிடம் இவ்வாறு உரிமை எடுத்துக் கொள்ளும் பத்திரிக்கைளில் இருந்து வரும் சிறு விமர்சனமும் முதல்வரை அதிகம் பாதிக்கிறது.
தமிழகத்தின் முதுபெறும் அரசியல் தலைவர் என்ற தகுதியினை அடைவதற்கு முதல்வர் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நன்று!
1 comment:
நண்பரே தனது கடைசி பேரன்வரை ஏதாவது பதவியிலிருக்க வேண்டும் என பொதுவாழ்விற்கு இழுத்துவரும் கலைஞர் விமர்சனமோ, கேலியோ வந்தால் பொறுத்துக்கொள்ளமாட்டேன் என்கிறாரே. ஏற்கனவே ஒரு முறை விகடன் ஆசிரியர் எழுதிய தலையங்கம்தான் நிணைவுக்கு வருகிறது. பாராட்டினால் அதை பதக்கமாக சட்டையில் குத்திக்கொள்வது, விமர்சித்தால் வெகுண்டெழுவது.
Post a Comment