7.5.07

காட் பாதர் - நாயகன் = தேவர் மகன்!

மணிரத்னத்தின் இரவல் சிந்தனைகள் என்ற கட்டுரையினை சென்னைக் கச்சேரி என்ற தனது வலைப்பதிவில் பதிவர் தேவ் எழுதியிருக்கிறார். பின்னூட்டங்களும் சுவையானவை! படித்ததும் நானும் எனது அனுமானம் ஒன்றினை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். ஏற்கனவே எனது இணைய நண்பர்களிடம் கேட்டதுதான்...யாரும் இதுவரை எனது அனுமானம் சரிதான் என்று கூறாததால், எனது விடாமுயற்சியும் தொடர்கிறது!

நாயகன் படம் காட்பாதர் கதையின் உல்டா என்பதை மணிரத்தினமே மறுக்க மாட்டார். நாயகனில் தமிழர்களுக்கு தொல்லை தரும் காவலரை வேலு நாயக்கர் கொல்வது போல, காட் பாதரில் இத்தாலியர்களிடம் வட்டிக்கு கடன் கொடுத்து தொல்லை கொடுப்பவரை டான் கார்லியோன் கொல்வார். அடுத்த நாள் டீக்கடையில் காசு வாங்க மறுப்பது போல காட் பாதரிலும் ‘கொன்றது யாருக்கும் தெரியாது’ என்று நினைத்திருந்தாலும் எல்லாம் இலவசமாக கிடைக்கும்.

கார்லியோனுக்கு மூன்று மகன்கள். வேலு நாயக்கருக்கு ஒரே மகன். ஆனால் கார்லியோனின் மூத்த மகனும், நாயக்கரின் மூத்த மகனும் முரட்டு குணம் படைத்தவர்கள்...இருவருமே தங்களது தந்தையின் விருப்பத்தையும் மீறி தங்களை அப்பாவின் தொழிலில் இணைத்துக் கொள்வார்கள். தங்களது முரட்டு குணத்தால் ஒரே மாதிரி அழிவார்கள்! அப்பாக்களும் ஒரே மாதிரி அழுவார்கள்!!

கார்லியோன் சுடப்பட்டு மருத்துவமனையில் இருக்கையில், மீண்டும் அவர் மீதான கொலை முயற்சியினை தடுக்க அவரைக் காப்பாற்றும் காட்சியினை ஏற்கனவே மணிரத்னம் தனது மற்றொரு படத்தில் திருடியிருப்பதால், நாயகனில் இல்லை!

ஆக, பழி வாங்கப்படுபவரின் ரத்தம் கண்ணாடியில் தெரிக்கும் காட்சி உட்பட நாயகன், காட் பாதரின் காப்பிதான். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளும் அன்பர்கள் காட்பாதரின் அப்பட்டமான inspired movie ‘தேவர் மகன்’ என்ற எனது அனுமானத்தினை ஏற்றுக் கொள்ள யோசிக்கிறார்கள்.



***


நாயகனின் முதல் மகன் ஏற்கனவே செத்துப் போனதால், தேவருக்கு கிடைத்தது, டான் கார்லியோனின் அடுத்த இரண்டு மகன்கள்!

கார்லியோனின் இரண்டாவது மகன் சரியான குடிகாரன். தந்தையின் ஆளுமைக்கு சற்றும் தகுதியில்லாதவன். பின்னர் எவ்வித தயக்கமுமின்றி தந்தையின் இடத்தினை நிரப்ப தம்பியே தகுதியானவன் என அவனுக்கு விட்டுக் கொடுக்கிறான். தேவர் மகனிலும் அவ்வாறே!

இரு படங்களிலும் கதாநாயகனான கடைசி மகனோ, தான் பிறந்த கலாச்சாரத்தினை விட்டு உயர்கல்விக்காக விலகியிருக்கிறார்கள். கத்தோலிக்க பிரிவினை சேர்ந்த இத்தாலிய கார்லியோனின் மகன், புரொட்டஸ்டாண்ட் பிரிவினை சேர்ந்த ஆங்கிலேய பெண்ணை காதலிக்கிறார். அவர்களுக்கிடையேயான கலாச்சார வித்தியாசம் போலவே, தேவர் மகனுக்கும் அவரது காதலிக்கும் வித்தியாசம்.

இருவருக்குமே தங்கள் காதலியுடன் தங்கள் கலாச்சாரத்தினை விட்டு விலகி செட்டிலாகிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

இரு கதைகளும் கடைசி மகன் தனது காதலியினை தனது வீட்டிற்கு வந்து அந்த சூழ்நிலைக்கே பொருத்தமில்லாத நபர்களையும் பழக்க வழக்கங்களையும் காதலிக்கு அறிமுகப்படுத்துவதில் தொடங்கும்.

தெளிந்த நீரோடை போல அமைதியாக பயணிக்கும் கதை ஒரு சிறிய பொறியில் ‘ஜெட்’ போல வேகம் பிடிக்கும்.

கதையில் ஏற்ப்படும் வேகமான திருப்பங்களில், இரு கதாநாயகர்களும் காதலியினை தற்காலிகமாக பிரிய, சந்தர்ப்ப சூழ்நிலையில் கிராமத்து பெண்ணை மணக்க நேரிடும்.

கடைசி மகன் மீதான கொலை முயற்சியில் காட்பாதர் படத்து மனைவி இறக்கிறார். தேவர் மகன் மனைவி பிழைத்துக் கொள்கிறார்.

பிறந்த இடத்து கலாச்சாரம் பிடிக்காத இரு கதாநாயகர்களும்...கதையின் போக்கில் அதே கலாச்சாரத்திற்குள் தள்ளப்படுவார்கள்.

இருவரது அப்பாக்களும் பேரப்பிள்ளைகளுடன் விளையாடுகையில் மாரடைப்பு ஏற்ப்பட்டு மரிப்பார்கள்.

தந்தையின் பாத்திரத்தை மகன் ஏற்றதன் அடையாளமாக காட்பாதரில் தந்தையைப் போலவே தாடையில் ஏற்ப்படும் அடி! தேவர் மகனில் மீசை!!

தேவர் மகன் திரைக்கதை எழுதியது யாரென்று தெரியாது...சந்தித்தால் கேட்க வேண்டும்...

மதுரை
07.05.07

13 comments:

நியோ / neo said...

Your speculation ends at the 'intermission' of 'Devar Magan' coz you know that you cant extend the ludicrous allegation after that!!

Nice Try though! :)

Geetha Sambasivam said...

unmai sudum. athanal othukave matanga yarum.

Sundar Padmanaban said...

பிரபுஜி.

//தேவர் மகன் திரைக்கதை எழுதியது யாரென்று தெரியாது...சந்தித்தால் கேட்க வேண்டும்...
//

தேவர் மகனேதான் எழுதியது! :-)

கதை, திரைக்கதை இரண்டும் கமல்ஹாஸன் செய்தது.

'ஒற்றுமை' இருக்கிறது என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் காட் பாதரைத் 'தழுவி' எடுத்தது தேவர் மகன் என்பதை ஏற்க முடியவில்லை. நம் மண்ணின் மணம் கமழும் ஒவ்வொரு காட்சியிலும் வேறு எந்த தேசத்தின் தாக்கத்தையும் நான் எங்கேயும் உணரவில்லை.

ஆனால் கெளதமி ஏதோ நிலவிலிருந்து குதித்ததைப் போல, கிராமத்தையே பார்த்திராதது போல, நடந்து கொள்வது மட்டும் படத்தில் ஒட்டவில்லை (அவர் படத்தின்படி ஆந்திராவிலிருந்து வெளிநாட்டுக்குப் போய் படித்துவிட்டுத்தான் திரும்ப வந்திருப்பார் - அங்கேயே பிறந்து வளர்ந்து படித்ததாகச் சொல்லியிருப்பதாக நினைவில்லை).

மற்றபடி இன்றைய தேதிக்கு 'தேவர் மகன்'தான் தமிழ்ச் சினிமாவின் 'காட் பாதர்' என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேதுமில்லை! :-)

SathyaPriyan said...

எனக்கு தெரிந்த அவர் சொல்லாத ஒற்றுமைகள்.

இரு படங்களிலும் நாயகன் உணவகம் தொடங்க விரும்புகிறான்.

இரு படங்களிலும் நாயகனின் தந்தை பேரக் குழந்தையுடன் விளையாடும் போது இறக்கிறார். (என்ன முன்னதில் வீட்டு தோட்டத்தில், பின்னதில் வீட்டுக்குள்.)

சிறில் அலெக்ஸ் said...

the similarities are certainly striking but treatment was totally Indianized, which is a commendable task. It is not easy to bring a western story on to Tamil screen, and to make it such hits.

a fil is not just the story or the plot a fil is everything that is seen in each frame. if even one of them is not so Indian it might be rejected. Both the movies have lived up to the expectations of Indian audiance.

Everyone needs an inspiration I guess.

:))

Kamal had written the dialog for "ThevarMahan" he might have written the screenplay too.

Siva Sivalingam said...

Screenplay written by KamalHaasan, but its very good try though, even its a copy. Also its better than the movies which we are seeing now.. like "Pokiri" 'Aalwar" "god father" "sivakasi" alot to mention.. lets welcome the good ones even its remake versions, but unfortunatley.. Maniratnam copied his own version of "nayakan" to a new version as "guru" with his own template...

D said...

இந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணினதுக்கு மொதல்ல உங்கள பாராடுரேன்....
தேவர்மகன் படத்துக்கு திரைக்கதை எழுதியவர் கமலஹாசன். இதுல Godfather படத்தோட பாதிப்பு இருந்தாலும், அந்த பாதிப்ப நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி கொண்டு வர்றது கொஞ்சம் கஷ்டம். இப்ப உதாரணத்துக்கு 'போக்கிரி' படத்த எடுத்துக்குங்க...அந்த படம் கிட்டத்தட்ட ஒரிஜினல் படத்தோட டப்பிங் மாதிரி இருக்கும். ஆனா, தேவர்மகனிலோ் அல்லது நாயகனிலோ இந்த ஒரு ஃபீலிங் இருக்காது. அந்த அளவுக்கு திரைக்கதை மாத்தி இருப்பாங்க. So பாதிப்பையும், ஈயடிச்சான் காப்பியயும் போட்டு குழப்பாதீங்க......

மருதநாயகம் said...

எப்படி இருந்தாலும் மணிரத்னம் அளவிற்கு யாரும் காப்பி அடிக்க முடியாது

Unknown said...

பிரபு ஒற்றுமைகள் கட்டாயம் இருக்கத் தான் செய்கிறது.. ஆனால் அப்பட்டமானக் காப்பி என்று சொல்ல முடியுமளவிற்கா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லத் தோன்றும்...

தேவர் மகன் நண்பர் நியோ குறிப்பிட்டு இருப்பது போல் இடைவேளைக்குப் பிறகு பயணிக்கும் திசை வேறு... முன்னோரின் வாழ்க்கை முறையில் மகனுக்கு உடன்பாடில்லாமல் கடைசி வரை அதை மாற்ற போராடுகிறான்.. அந்தப் போராட்டத்தில் முடிவில் மனம் வெதும்புகிறான்...தன் இயலாமையை அவன் வெளிக்காட்டும் இடங்கள் அற்புதமானவை...

தேவர் மகன் நம் மண்வாசனை வீசும் ஒரு திரைப்படம் என்றே எனக்குப்படுகிறது..

Anonymous said...

Hi!
Ofcourse why should we praise "Dever Magan" so much (as the best movie ever made in tamil!)when it's an OUTRIGHT COPY of God Father - The greatest movie ever made in the entire world. Kamal-sir wrote the story and screenplay to honor his dad, who asked them not to live in the house he bought witht the (bloody)money he earned representing those disputed parties and Kamal-sir wrote the story based on that - but how can we let him off the hook? We should bring him down at any cost. And let's stand up and praise and cheer for Vijay, Rajini and the likes who make "inspired" movies from other languages into tamil and thrill us with that! lakalakalakalakalaka pOkiri pongalO pongal!!

Anonymous said...

Hi,

They not only do 'ulda' stories from Western or European movies but they also steal beautiful music melodies from those movies. Listening to a couple of tunes in the movie'The Governess'I felt I was familiar with them: I was reminded of 'Theepidikka theeppidikka'(te tune in the dancing scene), Yetho yetho onru ithayathil nulainthu (I don't remember whic scene) There are other musical notes too that were copied. But they don't accept being theives but it's the poor audience that believe that Tamil musicians are geniuses!! (I guess Illayarajah sometimes tells openly if he's been inspired some tune)

Regards,
Chaminth

Sridhar V said...

ஆம்! ஒற்றுமைகள் நிறையவே. திரைக்கதை எழுதியது கமலஹாசனேதான். அதைப் பற்றி அவர் பாலசந்தருடன் பெருமையாக ஒரு கலந்துரையாடல் செய்தது (பொம்மை பத்திரிகைக்காக என்று நினைக்கின்றேன்) நினவிருக்கிறது.

என்ன Mrs. Doubtfire-ஐ அவ்வை சன்முகியாக மாற்றிய மாதிரி localization செய்திருக்கிறார்.

Doctor Bruno said...

இது பற்றி உஙகள் கருத்து என்ன

http://bruno.penandscale.com/2005/06/anniyan-stranger-in-marmadesam.html