25.10.08

வைகோ கைது - அன்றும், இன்றும்...


ஏன் இவ்வாறு ஒரு நாட்டின் பிரதமரில் இருந்து கடைசிக் குடிமகன் வரை சட்டத்தை மீறும் நிலை ஏற்படுகிறது? ஏன் ஒரு மத்திய அமைச்சரே 'நான் தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தினை இருபத்தைந்து முறை ஆதரித்துள்ளேன்' என்று கூற தைரியம் கொள்கிறார்?”

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதை சட்டம் போட்டு தடை செய்ய முயலும் அரசு ஒன்றினை மறந்து விட்டது. ஏதோ இந்த சட்டம் போட்டதால் மக்கள் ஆதரவளிப்பதிலிருந்து விலகவில்லை. அதற்கு முன்னரே நடந்த ராஜீவ் காந்தி கொலையே பெருமளவு காரணம். அந்த கொலையால் மக்களிடம் தோன்றிய பொதுக்கருத்தின் விளைவே விடுதலைப்புலிகள் இயக்கம் இங்கு தடை செய்யப்பட்டது. அந்த மக்களுக்கு தங்களது சிந்தனையில் அதே நிலையில் நீடிப்பதற்கும் காலப்போக்கில் மாற்றிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது



வைகோ தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், நான்கு வருடங்களுக்கு முன்னர் இட்லி வடை என்ற பதிவர் தனது வலைப்பதிவில் எழுதிய கருத்துகளுக்கு பதிலாக எழுதிய ஒரு கட்டுரையை மீண்டும் எடுத்துப் படித்தால்...இன்றைய சூழ்நிலையில் ஏதும் மாற்றம் இல்லை.......மக்களிடையே நான் கணித்த மனமாற்றம் தவிர...

அந்த பழைய கட்டுரை எனது வலைப்பதிவிலும் உள்ளது
http://marchoflaw.blogspot.com/2006/10/ii.html
http://marchoflaw.blogspot.com/2006/09/i.html


மதுரை
251008

6 comments:

PRABHU RAJADURAI said...

மேலே படம் போடி மெட்டு வழியாக போன வாரம் மூணாறு செல்லும் வழியில் கண்ட காட்சி!

Anonymous said...

'அந்த மக்களுக்கு தங்களது சிந்தனையில் அதே நிலையில் நீடிப்பதற்கும் காலப்போக்கில் மாற்றிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது”


100 விழுக்காடு சரியான கருத்து. மக்களின் உணர்வுகள் தேர்தலில் கட்சிகளையும் பிரதமர்களையும் மாற்றுகின்றன. மக்களின் கருத்துக்கு எதிரான முடிவுகள் சட்டமீறலைத் தூண்டுகின்றன. மக்களின் கருத்துக்களுக்கு எதிரான நன்டவடிக்கைகள் தோல்வியையும் அழிவையும் தரும் என்பதற்கு இலங்கை நல்லதொரு எடுத்துக்காட்டு. ஜனநாயகம் குறித்த 21ம் நூற்றாண்டின் விளக்கமானது 20ம் நூற்றாண்டில் தரப்பட்ட விளக்கங்களைவிட மிக விரிவானது. விரிவடைந்து செல்கின்றது.

வளரத்துடிக்கும் நாடான இந்தியா, ஜனநாயகம் குறித்து இந்திய மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது அதன் வளர்ச்சிக்கு நன்று.

ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

நேற்று லண்டனில் வெளிவந்த அத்தனை பத்திரிக்கைகளிலும் வெளிவந்த செய்தி.

ஆப்கானிஸ்தானில் போரில் பணிபுரிந்த பிரிட்டனைச்சேர்ந்த ஒரு ராணுவ வீரன் வீடு இல்லாமல் 1.5 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள வீட்டின் அறுகில் ஒரு காரில் குடியிருந்து கொண்டிருக்கிறான். ஆனால் அந்த 1.5 மில்லியன் மதிப்புள்ள நான்கு படுக்கை அறைகொண்ட வீட்டில் ஒரு அகதி குடும்பம் ஓசியில் ஆதாவது வரி செலுத்துவோரின் பணத்தில் குடியிருந்து கொண்டிருக்கிறது. அந்த வீட்டிற்காக வரிசெலுத்துவோரின் பணம் ரூபாய் ஒரு கோடியே 50 லட்சம்(ஒரு வருடத்திற்கு) அரசு மூலம் வாடகையாக கொடுக்கப்படுகிறது. அகதிகளுக்கு குறிப்பாக இலங்கைத்தமிழர்களுக்காக மட்டும் ஜ்ரோப்பிய நாடுகள் ஒவ்வொரு வருடமும் பல பில்லியன்களை செலவிடுகிறது. வரிசெலுத்துவோரின் பணத்தில் வாழ்ந்துகொண்டு அவர்களையே குறைகூறிக்கொண்டும் கொள்ளையடித்துக்கொண்டும் இருக்கும் இவர்களுக்கு தம்மக்கள் தங்கள் தாயகத்தில் படும் கஷ்டம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை. நம்மக்கள் மட்டும் ஏன் இவர்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஒண்ட வந்த பிடாரி ஊர்பிடாரையை விரட்டியது போல இன்னும் சில வருடங்களில் குடியேறிய நாடுகளில் தனி ஈழம் கேட்டு சண்டையிடத்தான் போகிறார்கள். இதன் காரணமாகத்தான் நார்வே சமாதானப் பேச்சு வார்த்தைக்கு பல முறை வழிய வந்து உதவியது. ஏனென்றால் அகதிகளால் அதிகம் அவதிக்குள்ளாகும் நாடுகளில் நார்வேயும் ஒன்று. எப்படியாவது சாமாதனப்படுத்து இவர்களை அவர்கள் ஊருக்கு அனுப்பலாம் என்றால் முடியவில்லையே?!.

பிரிட்டனும் இவர்களை வெளியேற்ற பல சலுகைகளை அறிவித்து விட்டது. சொந்த ஊரில் பிழைத்துக்கொள்ள 15,000 பவுண்டு (சுமார் 12 லட்சம் ரூபாய்) மற்றும் இலவச விமான டிக்கெட் என்று அறிவித்தாலும் , இங்கு கிடைக்கும் சலுகைகளை விட்டு போக யாரும் முன்வரவில்லை.

நம் நாடும் இவர்களால் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஏன் நம் தலைவரையே இழந்து நிற்கிறது. ஆனால் அவர்களை ஆதரிக்க இன்னும் சில புல்லுருவிகள் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தியத்தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்!.

PRABHU RAJADURAI said...

சில வார்த்தைகள் மறைக்கப்பட்டு அநாநியின் இந்த கருத்து வெளியிடப்படுகிறது. மன்னிக்கவும்

முஸ்லீம்கள் மட்டுமல்ல தழித்மக்களும் ஈழத்தில் பலவித இன்னலுக்கு ஆளாகின்றனர். லண்டனிலேயெ ஒரு இலங்கைத்தமிழன் மற்றவரைத்திட்ட வேண்டுமென்றால் "*****" என்று தழித் சாதிபெயரைக்கூறி திட்டுகிறான். ஆனால் இந்த *****திருமாவளவன் மட்டும் இவர்களுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு ,போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிறான்.

Anonymous said...

"நம்மக்கள் மட்டும் ஏன் இவர்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஒண்ட வந்த பிடாரி ஊர்பிடாரையை விரட்டியது போல இன்னும் சில வருடங்களில் குடியேறிய நாடுகளில் தனி ஈழம் கேட்டு சண்டையிடத்தான் போகிறார்கள். "


அநானி.



மலேசிய வாழ் இந்தியத் தமிழர்களையும் சேர்த்துத் தானே சொல்கின்றீர்கள்?

ஒரு ஈழத் தமிழன்

துளசி கோபால் said...

படத்துக்கு நன்றி.

கோபாலுக்கு ரொம்ப 'ஃபீலிங்ஸ் ஆஃப் இண்டியா' ஆயிருச்சு. என் மாமியார் வீடு போடி:-)