19.8.07

இலவசமாக ஆற்றல்!

“ஓடும் ரயிலி இருந்து மின்சாரம் - விருதுநகர் மாணவர்கள் கண்டுபிடிப்பு” என்ற கொட்டை எழுத்து தலைப்பில் இன்றைய தினகரனில் ஒரு செய்தி. பொம்மை ரயிலுடன் மாணவர்கள் நிற்கும் வண்ணப்படம் மேலும் கண்களை ஈர்த்தது.

அதாவது, ரயில் பெட்டிகளின் மீது காற்றாலைகளை அமைத்து ரயில் ஓடும் பொழுது எதிர்த்திசையில் அடிக்கும் காற்றின் விசையால் மின்சாரத்தைப் பெறலாமாம்!

செய்தி அளிக்கும் புள்ளி விபரங்கள் நம்மை அப்படியே சந்தோஷ காற்றில் மிதக்க விடுகின்றன. ஒரு ரயிலில் தினசரி 320 கிலோ வாட் மின்சாரம், நாட்டில் ஓடும் ரயில்களில் இருந்து 50 நகரங்களுக்கு தேவையான மின் சக்தி, ரயில்களில் சிறு மாறுதல் செய்தால் மேட்டூர் அணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் போல 8 மடங்கு மின்சாரம்...இன்ன பிறவுமாக!!

சீக்கிரம், யாராவது பிரதமரின் விஞ்ஞான ஆலோசகருக்கு கூறினால், 123 ஒப்பந்தத்தினை தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு அரசினை காப்பாற்றிவிடலாம்.

***
தவறு எங்கேயிருக்கிறது?

எனக்குப் புரியவில்லை. பன்னிரெண்டாம் வகுப்போடு பெளதீக அறிவினை நிறுத்திக் கொண்ட என்னிடமா இல்லை நான் கற்ற பெளதீக விதிகளிலா?

அல்லது நமது ஆசிரியர்களிடமா இல்லை இலவசமாக ஏதாவது கிடைத்து விடாதா என்றலையும் நமது அற்பத்தனத்திலா?

‘If wishes are horses, beggers would ride on it’ என்று கூறியது யார்?

மதுரை
190807

யா.பெரல்மானின் பொழுது போக்கு பெளதீகத்தினைப் படித்தவர்கள், ஓயாமல் இயங்கும் இயந்திரத்தினை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று ஐரோப்பாவில் அலைந்தவர்களின் வேடிக்கையான இயந்திரங்களைப் பற்றி அறிந்திருப்பார்கள்.

8 comments:

Raj Chandra said...

தவறு எங்கேயிருக்கிறது?

- The answer is in the first paragraph of your post itself...

That news is from Dinakaran. Reading that is the mistake you did :)

மு. சுந்தரமூர்த்தி said...

பிரபு,
எனக்கு உடனடியாக தோன்றுவது,
நீங்கள் பின்குறிப்பில் குறிப்பிட்டபடி இது ஓயாமல் இயங்கும் இயந்திரம் (Perpetual motion machine of second kind) வகையில் தான் அடங்கும். ரயிலுக்கு மேல் பெரிய காற்றாலை. காற்றாலைச் சுழலச் சுழல, காற்றில் அதன் உராய்வு ரயிலின் வேகத்தை மட்டுப்படுத்தும். ரயிலின் வேகம் குறையக் குறைய காற்றாலை சுழலும் வேகமும் குறையும். அல்லது ரயிலின் வேகத்தை சீராக வைத்திருக்க வேண்டுமானால் ரயில் எஞ்சின் இன்னும் அதிகமான ஆற்றலை உறிஞ்சும். சுருங்கக் கூறின் இந்த ஓயாமல் இயங்கும் இயந்திரம் சாத்தியமில்லை என்று தான் தோன்றுகிறது.

வவ்வால் said...

சுந்தர மூர்த்தி சரியாக சொல்லிவிட்டார், அது சாத்தியமில்லாத ஒன்று தான். இப்படி ஒரு கருத்தினை முன்னரே ஒரு புத்தகத்தில் படித்து இருக்கிறேன். அதனையே தற்போது மாணவர்கள் செய்து காட்டி இருக்க கூடும். ஆனால் லோட் அதிகம் ஆகும் போது இலவச மின்சாரம் தயாரிக்க ரெயில் அதிக சக்தி எடுத்துக்கொள்ளும்.

ரயில் பெட்டிகளின் அடியில் டைனமோ இருக்கும் அதனை ரயில் சக்கரத்துடன் இணைத்து இயக்குவார்கள் , அதனைக்கொண்டு மின்கலங்களையும் சக்தி ஏற்றுவர்கள்.அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் தான் பெட்டிகளில் விளக்கு , ஃபேன் ஓடப்பயன்படுகிறது.

இப்படி கிடைக்கும் மின்சாரமும் இலவச மின்சாரமா? அதற்கான சக்திக்கு கூடுதலாக எஞ்ஜின் எடுத்துக்கொள்ளும்!

Bruno said...

I was wondering a little while ago, whether it will be beneficial to supply directly from overhead cables (with transformers, of coruse) in electric trains, rather than using the same dynamo as in diesle engines

Anonymous said...

There are couple of thoughts.

1. The energy required will be more if the wind tunnel(?) are mounted on the train than for normally weighed train. We cannot rule out the weight of the wind tunnels themself.

2. How did they calculate the energy produced can be so much? This needs to be understood first.

3. It is not clear how energy produced from a moving train can be transmitted and stored ..

Anonymous said...

There are couple of thoughts.

1. The energy required will be more if the wind tunnel(?) are mounted on the train than for normally weighed train. We cannot rule out the weight of the wind tunnels themself.

2. How did they calculate the energy produced can be so much? This needs to be understood first.

3. It is not clear how energy produced from a moving train can be transmitted and stored ..

Anonymous said...

கோதையாறில் 2 அணைகட்டுகள் மாஞ்சோலை மேல் உள்ளது,
இதில் கீழே உள்ள ஒரு அணையிலிருந்து மேலுள்ள பெரிய அணைக்கு மோட்டார் பம்ப் மூலம் தண்ணீரை ஏற்றி ,பெரிய அணையிலிருந்து டர்பைன் இயக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
இதன் ஆதாயம் புரிந்தால் ரயில் மூலம் கிடைக்கும் மின்சார ஆதாயமும் தெரியலாம்

விடாதுகருப்பு said...

சிந்தனையைத் தூண்டும் பதிவு ராஜதுரை அய்யா.

எனக்கும் பெளதீகத்தில் அவ்வளவாக ஒன்றும் தெரியாது!