1.5.07

சுஜாதா, சுப்பிரமணியசுவாமி, சூத்திரர்...

எதிரொலி என்ற தனது வலைப்பதிவில் சகோதரர் நல்லடியார், ‘இபிகோவும் இந்து மதமும்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள பதிவில் கூறியுள்ள ஒரு கருத்தினைப் பற்றி சில விளக்கங்கள் அளிப்பது சிறந்தது என நினைக்கிறேன்.

நமது தண்டனைச் சட்டப்படி ‘பறையர்’ என்று அழைப்பது குற்றம். அதனினும் மோசமான ‘சூத்திரர்’ என்றழைப்பது குற்றமில்லை என்ற வகையில் ஒருவித எண்ணத்தினை தோற்றுவிக்கும் வண்ணம் ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் திரைப்பட நடிகை சுஜாதா வாரப்பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘வீட்டிலிருக்கையில் நான் தலையை விரித்துப் போட்டு பறச்சி மாதிரி இருப்பேன்’ என்று கூறப்போக பலத்த கண்டனங்கள் எழுந்தன. குறிப்பிட்ட இனத்தவரை இழிவுபடுத்தியதாக வழக்கு கூட பதிவு செய்யப்பட்டு பின்னர் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதன் பெயரில் பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என நினைக்கிறேன்.

மற்றொரு சம்பவம் ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்றது. அந்த சமயத்தில் அவருக்கு வேண்டாதவராகிப் போன சுப்பிரமணியசுவாமி அவர் மீது வழக்குகள் பல தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். ஜெயலலிதா ஆத்திரத்தில் எப்படியாவது அவரை கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட, ‘ஸ்காட்லாண்டு யார்டு’க்கு இணையான தமிழக காவல்துறையும் மூளையை கசக்கி அவர் ஏதோ ஒரு பேட்டியில் பயன்படுத்திய ‘pariah’ என்ற ஆங்கில வார்த்தையினை தோண்டி எடுத்தது. தமிழிலிருந்து உள்வாங்கப்பட்டு ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ள இந்த வார்த்தை ‘அரசியல் அநாதை’ என்ற அர்த்ததில் அரசியல் விஞ்ஞானத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நீதிமன்றத்திலிருந்து திரும்பிய சுப்பிரமணியசுவாமியை இக்குற்றத்திற்காக ரிசர்வ் வங்கி அலுவலகம் அருகே மடக்கி கைது சென்னை மாநகர மொத்த காவல்துறையும் முடுக்கி விடப்பட்டது. சுப்பிரமணியசுவாமியும் தனது இசட் பிரிவு பாதுகாவலர்களை சுட்டி, காவலர்களை மிரட்டியதும் நடந்தது.

பின்னர் சுப்பிரமணியசுவாமி ‘pariah என்ற வார்த்தையின் மூலம் தெரியாது. இனி இந்த வார்த்தையினை ஆங்கில அகராதியிலிருந்து அகற்ற போராடுவேன்’ என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.

சரி, சுஜாதாவும், சுப்பிரமணியசுவாமியும் செய்ததாக கூறப்பட்ட குற்றம் எங்கு விளக்கப்பட்டது.

சகோதரர் நல்லடியாரின் பதிவில், இபிகோ என்று தலைப்பிலேயே கூறப்பட்டுள்ளதால், அவர் குறிப்பிடுவது இந்திய தண்டனச் சட்டத்தினை (Indian Penal Code) என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவ்வாறான செயல்கள் தவறு என்று கூட கருதப்படாத 1860ம் வருடம் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தில் இத்தகைய குற்றம் பற்றி ஏதும் கூறப்படவில்லை.

1955ம் ஆண்டு இயற்றப்பட்ட Protection of Civil Rights Act என்ற சட்டதில்தான் தீண்டாமைக் குற்றங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. 1989ம் ஆண்டு The Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act என்ற சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. PCR சட்டத்தின் 7(1)(d) பிரிவில் ‘தீண்டாமை அடிப்படையில் யாரும் அட்டவணை வகுப்பினரை அவமானப்படுத்துவது (insult) அதிகபட்சம் ஆறுமாதம் தண்டனைக்கேதுவான குற்றம்’ எனக்கூறப்பட்டுள்ளது.

எனவே ‘பறையரோ’ அல்லது ‘சூத்திரரோ’ வார்த்தை முக்கியமல்ல. அவமானப்படுத்தும் எண்ணம்தான் ஒரு செயலினை, அது எந்த வார்த்தையாக இருப்பினும் குற்றமாக்க முடியும். இல்லையெனில், பறையர் என்ற வார்த்தையினை ஒன்றுக்கும் மேற்ப்பட்ட இடத்தில் இந்தக் கட்டுரையில் குறிப்பிடும் நானே, குற்றம் செய்தவனாவேன்.

அவ்வாறென்றால், சுப்பிரமணியசுவாமி.? நிச்சயமாக இல்லை. அவர் அந்த வார்த்தையினை பயன்படுத்தியதே வேறு அர்த்தத்தில். நடிகை சுஜாதா கூட குற்றமாகாது. ஏனெனில் அவர் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. சட்டப்பிரிவில் ‘insults a member of a scheduled caste’ என்றுதான் உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் 1987ம் வருடமே இந்த குற்றம் குறித்து விரிவான விளக்கங்களுடன் பாஸ்தே சுப்பராயலு எதிர் ராபர்ட் மரியதாஸு (1987 CrLJ 387) என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பினை படிக்கையில், அட்டவணை வகுப்பினர் அல்லாதவரைப் பார்த்து இவ்வாறு கூறுவது குற்றமாகாது எனப்படுகிறது. அட்டவணை வகுப்பினர் மீது பயன்படுத்தப்படுகையிலும், அவமானப்படுத்தும் நோக்கம் இல்லையெனில் குற்றமாகாது என்பதாகவே உள்ளது. உதாரணமாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வரும் ஒரு இளைஞரிடம் அலுவலர், ‘தம்பி நீங்கள் பறையர் வகுப்பினரா?’ என்று வினவினால் அதில் குற்றம் ஏதுமில்லை. ஆனால், ஒருவரின் ஜாதியினை மனதில் கொண்டு ‘இழிபிறவியே’ என்றாலும் சரிதான் ‘சூத்திரனே’ என்றாலும் சரிதான்...அது குற்றமே!

மதுரை
01.05.07

10 comments:

சிறில் அலெக்ஸ் said...

அருமையா விளக்கியிருக்கீங்க நன்றி.

எழில் said...

நல்ல தகவல், நன்றி.
The disrespectful words can be persecuted only if the affected party is one of the scheduled castes, am i right?

Such a caste based or religion based abuse if any can not be persecuted if you are not one of the scheduled castes. Am I right?

Just for clarification.

அன்புடன்,

சிவபாலன் said...

Sir,

Excellent Post!

Thanks for Sharing!

Sundar Padmanaban said...

அண்ணாத்தே

இங்கிட்டுத்தான் இருக்கீங்களா? கவனிக்கவேயில்லையே?

பதிவுக்கு நன்றி.

நிறைய அடிக்கடி எழுதுங்கள்.

சுந்தரவடிவேல் said...

Thank you for the useful clarifications!

துளசி கோபால் said...

விவரமான தகவலுக்கு நன்றி.

Anonymous said...

When Dr.Swamy was arguing a case in the Madras Highcourt, Chandralekha passed on a note that an arrest warrant was ready so that once he stepped out of the court hall he would be arrested and taken to Madurai prison.The case was that by using the word
pariah he had committed an offence
under the 1989 Act. He used it to
describe LTTE as pariah. Swamy
at once mentioned the fact (that an arrest warrant was issued) before the judges and got a stay against arresting him.Then he left to Mumbai by flight as Chandralekha had got a ticket for him in the next flight. He appealed to Supreme Court and obtained a stay against proceeding further in the case and wanted the case to be quashed. Later the TN govt. dropped the case.By using a word pariah against smokers no offence was committed before the
eyes of the law.This is crystal
clear to anyone who has bothered to
read the Act and relevant cases.
When I pointed out this in as
a comment in a blog post that
comment was not published.
But many tamil bloggers do not
know the facts, nor care to know
the facts. They constituency needs
more such posts.

நல்லடியார் said...

சகோதரர் பிரபு ராஜதுரை,

//ஒருவரின் ஜாதியினை மனதில் கொண்டு ‘இழிபிறவியே’ என்றாலும் சரிதான் ‘சூத்திரனே’ என்றாலும் சரிதான்...அது குற்றமே!//

இந்துத் திருமண மந்திரங்களில் மணமக்களை இவ்வாறு இழிவுபடுத்தும் வாரத்தைகள் இருப்பதாக சக வலைபதிவர் ஒருவர் முன்பு எழுதி இருந்தார்.அதனால்தான் பெரியாரிஸ்டுகள் தமிழ் மந்திரம் அல்லது பகுத்தறிவுத் திருமணத்தை வலியுறுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.

மற்றபடி தங்களின் சட்டக் குறிப்புகளுடன் கூடிய பதிவு நல்ல தகவல்.

அன்புடன்,

- யெஸ்.பாலபாரதி said...

:)

பயனுள்ள விவரமான தகவலுக்கு நன்றி அண்ணா.

Anonymous said...

//ஆனால், ஒருவரின் ஜாதியினை மனதில் கொண்டு ‘இழிபிறவியே’ என்றாலும் சரிதான் ‘சூத்திரனே’ என்றாலும் சரிதான்...அது குற்றமே!//

‘சூத்திரனே’சரிதான் ஆனால்‘இழிபிறவியே’ ...... எங்கேயோ இடிக்குது