23.12.06

கேள்விகள்?

எனக்கு பத்து வயதிருக்கலாம், இரவில் அனைவரும் படுத்திருக்கையில் திடீரென கிளம்பிய அந்த சந்தேகத்தை, அந்த இருட்டிலேயே மற்றவர்களிடம் கேட்டேன். ஆனால் யாராலும் எனது கேள்வியினை புரிந்து கொள்ள முடியவில்லை. அல்லது எனக்கு சரியாக விளக்கத் தெரியவில்லை. ஆயினும் அந்த கேள்வியினை நான் வெகு நாட்கள் சுமந்து திரியவில்லை!



விரைவிலேயே அதற்கு பதில் கிடைத்தது, மலிவு விலையில் அப்பா வாங்கி வந்து தந்த யா.பெரல்மான் என்ற சோவியத் ஆசிரியர் எழுதிய ‘பொழுது போக்கு பொளதிகம்’ என்ற புத்தகத்தில். என்னை குடைந்த கேள்வி ‘இப்படியே புவியில் துளையிட்டுக் கொண்டே சென்றால் அடுத்த பக்கம் வழியாக வெளியேற முடியுமா?’ என்பதுதான்.



பெரல்மானைப் பற்றி இணையத்தில் முன்பு குறிப்பிட்டதில், முல்லை தங்கராசனின் இரும்புக்கை மாயாவிக்கு இணையாக ரசிகர் பட்டாளம் இருப்பதை அறிந்து கொண்டேன்.



ஆனால், அதே வயதில் எனக்குத் தோன்றிய மற்றுமொரு சந்தேகத்தினை வீட்டில் யாரிடமும் கேட்கவில்லை. ஆனால் அதை வைத்து நண்பன் ஒருவனிடம் கடவுள் இருப்பதற்கு அதுதான் ஆதாரம் என வாதிட்டிருக்கிறேன். அந்த வாதம், ‘பாத்தீயா, கல்யாணமானவர்களுக்குத்தான் குழந்தை பிறக்கிறது. இது அதிசயம்தானே!’



இதில் வியப்படைய வைத்தது என்னவென்றால், சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் எனது மகளும் ஒரு நாள், ‘அது எப்படிப்பா, கல்யாணமானா அவங்களுக்கு குழந்தை பிறக்கிறது?’ என்று ஒரு போடு போட்டாள்! என்னிடம் விடையில்லை!!



இவ்வாறாக கேள்வி கேட்கவே பிறந்தவர்களுக்காக, எழுத்தாளர் சுஜாதா முன்பு ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் பதில் எழுதிக் கொண்டிருந்தார். நானும், கல்லூரியில் படிக்(காத)கும் பொழுதில் பல கேள்விகளை எழுதிப் போட்டேன். மற்ற அனைத்து கேள்விகளையும் தள்ளிவிட்டு அசட்டுத்தனமான ஒரு கேள்வியை மேலும் அபத்தமாக ‘எடிட்’ செய்து அதற்கு பத்தாம் பசலித்தனமாக அவரும் பதிலளித்திருந்தார்.



அந்தக் கேள்விகள் அனைத்தும் வாழ்க்கையின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட ஒரே ஒரு கேள்வி மட்டும் அடிக்கடி நினைவுக்கு வந்து அதுவும் மறைந்து போனது.



ஆனால் நேற்று ஆச்சரியம்!



அதே கேள்வியை அட்சரம் பிசகாமல் எனது மகள் கேட்கிறாள். ‘ஏன், கலர் துணியில் தண்ணீர் பட்டால் ‘டார்க்’ கலராக மாறுகிறது?’



விஞ்ஞானத்தை விட்டு வெகு தூரம் வந்து விட்ட என்னிடம் பதிலில்லை. உங்கள் யாருக்காவது தெரிந்தால் கொஞ்சம் உதவினால், நன்றியுடையவனாக இருப்பேன்.

11 comments:

Sridhar V said...

பிரபு அவர்களே,

//யா.பெரல்மான் என்ற சோவியத் ஆசிரியர் எழுதிய ‘பொழுது போக்கு பொளதிகம்’ //
இந்த புத்தகத்தை எனது அண்ணன் எனக்கு அறிமுகப் படுத்தினார். மதுரை மத்திய நூலகத்திலிருந்து எடுத்து படித்ததாக ஞாபகம்.

//ஏன், கலர் துணியில் தண்ணீர் பட்டால் ‘டார்க்’ கலராக மாறுகிறது?//

எனக்கு சட்டென்று தோன்றிய பதில் -

துணிகள் தங்கள் மேல்படும் வெளிச்சத்தை உறிஞ்சியது (absorbs) போக மீதியை வெளிப்படுத்துகிறது. துணிகளின் நிறத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற (dye) சாயத்தின் molecules-ஐ பொறுத்து அது குறிப்பிட்ட அலைவரிசை (wavelength) உட்பட்ட நிறத்தை வெளிப்படுத்துகிறது.

நீர் சேரும்பொழுது அந்த சாயத்தின் தன்மை நீர்த்து போகின்றது (தற்காலிகமாக). அதனால் வெளிப்படுத்தும் நிறம் மாறுகின்றது. துணி dark-ஆக தோற்றமளிக்கின்றது.

பதில் சரியா மக்களே?

சிறில் அலெக்ஸ் said...

என் பையனுக்கு இன்னும் கேள்வி கேக்குற வயசு வரல..

சாக்கி(லேட்) வேணும்னு கேக்கிறதெல்லாம் ஒரு கேள்வியா?

:)

சுந்தரவடிவேல் said...

Sorry for typing in English, no tamil key board!
What I thought and found (http://answers.yahoo.com/question/index?qid=20060701183152AAJGDFi) is a bit close to what Sridhar said above.
Dye molecules in cloth absorb and emit light at specific wavelengths. When the cloth is dry there is no hindrance for the absorption or emission. However when the cloth absorbs water, all its dye molecules are covered by water molecules, plus probably the salt and other molecules in water, which altogether change the absorption/emission characteristics of the dye molecules and hence you see a different colour.
You need absorption for this phenomenon. For example if you put water on a non absorbing material (like umbrella, rain coat, thaamarai ilai) it doesnt change the colour of these materials.
Wishes to your daughter and her questions!

மு. சுந்தரமூர்த்தி said...

பிரபு,

ஸ்ரீதர் சொன்ன மாதிரி எல்லா பொருட்களையும் போல துணிகளும் தங்கள் மேல்படும் வெளிச்சத்தை உறிஞ்சியதைப் போக மீதியை வெளிப்படுத்துகிறது. அதனால் தான் அப்பொருட்களின் நிறங்களை நம்மால் பார்க்க முடிகிறது. நிறம் அலைநீளத்தைப் பொறுத்தது. பளிச்சென்ற தன்மை (brighness) அந்த அலைநீள ஒளித்துகள்கள் எவ்வளவு (number of photons) என்பதைப் பொறுத்தது.

இப்போது உங்கள் கேள்விக்கு விடை. துணிகளில், நூலிழைகளுக்கு இடையில் (அந்த நூலிழையும் பல நுண்ணிய இழைகளால் (microfiber) ஆனது என்பதையும் அறிக) காற்று நிரம்பியிருக்கும். நீரில் (அல்லது ஒளிபுகக்கூடிய வேறெந்த திரவத்திலும்) துணியை (அல்லது நுண்துளைகள்/இடைவெளிகள் காற்றால் நிரப்பப்பட்ட ஸ்பாஞ்ச், தாள்கள் போன்ற பொருட்களையும்) நனைத்தால், நீர் காற்றைத் தள்ளிவிட்டு துளைகளை நிரப்பிவிடும்.

ஒளியின் பண்புகள் காற்றிலும், நீரிலும் ஒரே மாதிரியானவையல்ல. காய்ந்த துணியில் ஒளி அதிகமாக கசியும். குறைவான அளவு ஒளியே துணியால் பிரதிபலிக்கப்படும். ஆனால் இடைவெளிகளில் உள்ள நீரும் ஒளியை பிரதிபலித்து (அனேகமாக எல்லா அலைநீளங்களிலும்) மீண்டும் இழைகளின் மேல் விழச்செய்வதால், துணிக்கு அதிகமாக ஒளியை பிரதிபலிக்கக் கிடைக்கிறது. ஆகவே தான் காய்ந்த துணியைவிட ஈரமான துணியில் நிறம் பளிச்சென்று தெரியும். இது நிறத்திற்கு நிறம் வேறுபடலாம். நீர் சிகப்பு ஒளிநீளப்பகுதியில் அதிகமாக ஒளியை உறிஞ்சுவதால் சிகப்பு நிறத்துணிகளை விட, பச்சை, நீலநிறத்துணிகள் மிகவும் பளிச்சென்று தெரியும்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் துணி பருத்தித் துணியா அல்லது பாலியெஸ்டர் துணியா என்பதைப் பொறுத்து பளிச்சிடும் தன்மை மாறும். பருத்தி செல்லுலோஸ் (cellulose)மூலக்கூறுகளால் ஆனது. செல்லுலோஸ் நீர்விரும்பும் மூலக்கூறு (hydrophilic molecule). பாலியெஸ்டர், நைலான் போன்றவை நீரஞ்சும், எண்ணெய் விரும்பும் மூலக்கூறுகள் (hydrophobic and oleophilic molecules). ஆகவே பருத்தித்துணிகள் நீரை அதிகமாக உறிஞ்சும். பாலியெஸ்டர், நைலான் துணிகளில் நீர் குறைவாகவே உறிஞ்சப்பட்டிருக்கும். அதே நேரம் எண்ணெயை அதிகமாக உறிஞ்சும்.
நீரால் நனைத்த பருத்தித்துணியும், எண்ணெயில் நனைத்த பாலியெஸ்டர் துணியும் காய்ந்த துணியைவிட பளிச்சென்று தெரியும்.

PRABHU RAJADURAI said...

நன்றி! இத்தனை விஞ்ஞானிகள் சுற்றியிருக்கையில் எனக்கென்ன கவலை!

ஒன்று புரிகிறது...no two lawyers would agree but not so with the scientists.

PRABHU RAJADURAI said...

சிறில்,

டபுள் ஜியோபார்டி என்பது ஒரே குற்றத்திற்காக, ஒருவரை இருமுறை விசாரணைக்குட்படுத்துவது. இவ்வாறான செயல் நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது.

விதிவிலக்கு, 'விஷம் கக்கிய பாம்பு' என்று நான் எழுதிய பதிவினை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

மரித்தவர் மீண்ட கதையும் இந்தியாவில் நடந்தது. அடுத்த பதிவு அதுதான்...

மு. சுந்தரமூர்த்தி said...

//no two lawyers would agree but not so with the scientists//

Prabhu,
Actually, we do differ :-)

I am talking about 'scattering' (in Tamil 'oLic cithaRal') and Sundaravadivel talks about emission (umizhthal).

If it is absorption and re-emission, it will change the color of the fabric (i.e change of wavelength). This phenomenon is flourescence. Not all dyes are flourescent, especially those used in fabrics. The difference we see between dry and wet cloths is NOT difference in color BUT difference in brightness.

Brightness depends on how much light is scattered by the fabric. Dry cloths with the space filled with air will allow more light to pass through the fabric and less light is scattered. But wet cloths with the space filled with water will also scatter light which in turn is scattered by the (color) fibers adding more light reaching the eye from the fabric.

You can do this simple experiment with your daughter to verify this:

Take two identical pieces of fabric. Keep one dry and soak the other in water. In a dark room, shine light on one side of the dry fabric with a torch light. Hold a white paper on the other side at a distance. Check how much light you see on the paper. Repeat this for the wet cloth. I bet you would see the paper below dry cloth is illuminated more than the one below the wet cloth.

மு. சுந்தரமூர்த்தி said...

Prabhu,
In my previous explanations, I mentioned that wet cloths appear brighter. Actually it is the opposit and you have stated it yourself--wet cloths appear darker. The explanation is same except that the fraction of light scattered by water does not add more light for the fabric to scatter. It rather reduces the amount of light the fabric can scatter. So our eyes see less light and hence the wet fabric is darker.

Hope I didn't confuse you and your daughter :-)

Gurusamy Thangavel said...

//இப்படியே புவியில் துளையிட்டுக் கொண்டே சென்றால் அடுத்த பக்கம் வழியாக வெளியேற முடியுமா?//

காஞ்சி காமகோடி பீடத்தின் மறைந்த முன்னாள் பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவரது தெய்வத்தின் குரல் புத்தகத்தில் ஒரு புராணக் கதைக்கான விளக்கத்தில் இது (புவியில் துளையிட்டுக் கொண்டே சென்றால் அடுத்த பக்கம் வழியாக வெளியேற முடியும்?) வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் சாத்தியமாகியிருந்தது என்ற ரீதியில் பதில் சொல்லியிருப்பார். (ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன்).

Sridhar V said...

//நன்றி! இத்தனை விஞ்ஞானிகள் சுற்றியிருக்கையில் எனக்கென்ன கவலை!//

அது சரி! குயில் கூட்டத்தில சேர்ந்த காக்கை மாதிரி நம்மள பத்தி தப்பா யாரும் யோசிக்கறதுக்குள்ள... நான் விஞ்ஞானியெல்லாம் கிடையாது. வேதியலை விட்டு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. உங்கள் (மகளின்) கேள்வி என் ஆர்வத்தை தூண்டியதால் பதில் எழுத தோன்றியது.

சுந்தரவடிவேல் மற்றும் சுந்தரமூர்த்தி அவர்களுக்கு.

உங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி!. பல புதிய தகவல்கள் கற்றுக் கொண்டேன்.

Doctor Bruno said...

//I bet you would see the paper below dry cloth is illuminated more than the one below the wet cloth.//

I differ....

Basics
1. When an object reflects sunlight it appears white
2. When it absorbs all the light, it appears black
3. An object which absorbs more and reflects less appears darker
4. An object which absorbs less and reflects more appears lighter

Now when Water is added to a fabric, the TRANSPARENCY INCREASES.... there by more light PASSES THROUGH THE FABRIC and less light is reflected back

FOr Example, (purely hypothetical)
1. A dark cloth reflects 20% of photos and absorbs 80%
2. A light cloth reflects 80 % and absorbs 20 %

NO what will happen when the second cloth absorbs 20%, allows 30 % to pass through and reflects the 50 %

You will see that in a darker shade... Isn't it....

And the light will be passing through it...

If you have any doubts as to whether more light passes through water soaked fabric, மழையில் கதாநாயகி நனையும் திரைப்படங்களை
ஞாபகப்படுத்திக்கொள்ளவும்
A