கடந்த பத்து நாட்களாக நானும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கு குறித்து யாராவது பதிவிடுவார்கள் எதிர்பார்த்தபடியே இருந்தேன். யாரும் எழுதுவதாக தெரியவில்லை. வலைப்பதிவாளர்கள் இந்த வழக்கு குறித்து அறிந்து கொண்டிருக்கவில்லை என்றே அனுமானிக்கிறேன். ஏனெனில் செய்தித்தாள்களிலும் இந்த வழக்கு பற்றிய செய்தி காணப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தது மட்டுமே காரணமாயிருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் பத்துப் பைசா பெறாத பல வழக்கு குறித்த செய்திகள் வந்து கொண்டுதான் இருந்தன...
வழக்கு திருச்சி பெல் நிறுவனத்தில் தச்சர், பெயிண்டர், வெல்டர், டர்னர் போன்ற திறமை தேவைப்படும் வேலையிடங்களில் ஆள் நிரப்புவது சம்பந்தமாக, அதுவும் கைக்கொள்ளப்பட்ட இட ஓதுக்கீடு குறித்து. காலியிடமான 250 பதவிகளில் 48 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் 68 இடங்கள் பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டது சரிதான். ஆனால் பிறழ்சினை ‘தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடங்களில்தான் போட்டியிட முடியும்’ என்று பெல் நிறுவனம் கூறுவதில் ஆரம்பித்தது. காரணம் தாழ்த்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் மற்றவர்களை விட தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டனராம். எனவே, ஒதுக்கீடு செய்யப்பட்ட 116 இடங்கள் தவிர பிற இடங்களில் தாழ்த்தப்பட்டவர் அல்லது பிற்ப்படுத்தப்பட்டவர் அல்லாத மற்றவர்கள் மட்டுமே தேர்வுக்காக அழைக்கப்பட்டனர். இன்னும் என்னன்னவோ விளங்காத தேர்வு முறைகளை பெல் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
வழக்கு நடைபெறுகையில், பெல் நிறுவனத்தின் வாதமாக அவர்களது சீனியர் வழக்குரைஞர் கூறிய வாதங்களும், பெல் நிறுவன கூடுதல் பொது மேலாளரின் பிரமாண பத்திரத்தில் (affidavit) இருந்து வாசிக்கப்பட்ட சில வரிகளும் அவர்களது நோக்கம் என்ன என்பதை ஓரளவுக்கு தெளிவாக்கியது.
“வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தாழ்த்தப்பட்டவர்களின் கட் ஆஃப் மதிப்பெண்கள் பொது ஒதுக்கீட்டின் கட் ஆஃப் மதிப்பெண்களை விட அதிகமாக இருந்தது” கூடுதல் பொது மேலாளரின் பிரமாண பத்திரத்தில்.
“விட்டால், மொத்த இடத்தின் 73% இடங்களை தாழ்த்தப்பட்டவர்களே பிடித்து விடுவார்கள்” பெல் நிறுவன சீனியர் வழக்குரைஞர்.
“தாழ்த்தப்பட்டவர்கள் தேர்வுக் கட்டண விலக்கு, வயது தளர்த்துதல் போன்ற பிற சலுகைகளைப் பெறுகின்றனர். இந்த சலுகைகளைப் பெறும் வண்ணம் விண்ணப்பித்து விட்டு அவர்கள் பொது ஒதுக்கீட்டில் வர முடியாது” பிரமாண பத்திரத்தில்.
“பிற மாநிலங்களில் இவ்வாறுதான் நடக்கிறது. அலகாபத்தில் இது போன்றதொரு வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால தடைக்கு எதிரான மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம், இடைக்கால தடைக்கு தடை வழங்கி உள்ளது” பெல் நிறுவன சீனியர் வழக்குரைஞர்.
நான் ஏதும் கூற விரும்பவில்லை. முதலில் தேர்வுக்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம். பின்னர் பெல் தனது சீனியர் வழக்குரைஞரை அழைத்து வந்து காலியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால் உற்பத்தி பாதிக்கும் என்று வாதிட்டது. எனவே தேர்வு செய்யப்பட்டவர்களை ‘வழக்கின் முடிவிற்கேற்ப’ பணியில் சேர அனுமதிக்குமாறு தடை உத்தரவினை தளர்த்தியது. நேற்று வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது. அசட்டுத்தனமான வாதங்களை கேட்டுக் கொண்டிருக்க வேண்டாமென்ற வெறுப்பில் வாதம் முடியும் வரை அந்த நீதிமன்றம் பக்கம் செல்லவில்லை. தீபாவளிக்கு பிறகு தீர்ப்பு வரும். பெல்லுக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்று நீதிமன்றத்தில் இருந்த மற்றவர்கள் கூற கேட்டேன்...
சரி, பத்திரிக்கைகள்தான் எழுதுவதில்லை. நாமாவது கூறலாமே என்ற நினைப்பில் இங்கு எழுதுகிறேன். ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது’ என்பது இதுதானோ?

10 comments:
நல்லதொரு விஷயம் சொன்னீர்கள்..
முதலில் நன்றி.
இந்த பிரச்சனை எதனால் என்று நினைக்கிறீர்கள்...? குறிப்பிட்ட சாதிப் பிறிவினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததினாலா...அல்லது வோட்டு வங்கி அரசியலினால் இட ஒதுக்கீடு கண்டபடி கையாளப்பட்டதினாலா?
//
தாழ்த்தப்பட்டவர்கள் தேர்வுக் கட்டண விலக்கு, வயது தளர்த்துதல் போன்ற பிற சலுகைகளைப் பெறுகின்றனர். இந்த சலுகைகளைப் பெறும் வண்ணம் விண்ணப்பித்து விட்டு அவர்கள் பொது ஒதுக்கீட்டில் வர முடியாது
//
இது ஞாயமாகத்தானே படுகிறது..You cannot have the cake and eat it too!
பிரபு,
இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்திவந்த தருமி மதுரையில் தானே இருக்கிறார்?. நேரம் கிடைத்தால் அவர் இதுபற்றி மேலும் தகவல் திரட்டி பதிவிடலாம்.
தற்போது, உச்ச நீதிமன்றப் பூசாரிகள் இடஒதுக்கீட்டு வழக்குகளில் அளித்து வரும் அதிரடி ஆணைகள், தீர்ப்புகள் குறித்து அவகாசம் கிடைத்தால் நீங்களும் விரிவாக எழுதவும்.
அதுசரி, தலைப்பு ஏன் வித்தியாசமாக இருக்கிறது?
Thanks for the article sir.
It's unfortunate to see such a blunder from BHEL. What BHEL doing is nothing but discrimination from old days with law clause, It should be stopped. And the court MUST strongly condemn the BHEL board and warn for such wrong practices and twisting the reservation terms. It shows how much the upper society is not ready to see his fellow brother grabbing job opportunities. I can't avoid the thoughts...if these people do these kind of tweaking the system for entry level jobs such as these(fitters, machine men,etc), what would be their scale of twisting when comes to higher positions. SHAM ON BHEL. And ofcourse, the main stream media is proving once again that they HAVE a racial agenda. Thanks once again for bringing up this to tamil blogs. And please submit this to thamizmanm's weekly malar collections.
-KVD.
//இந்த பிரச்சனை எதனால் என்று நினைக்கிறீர்கள்...? குறிப்பிட்ட சாதிப் பிறிவினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததினாலா...அல்லது வோட்டு வங்கி அரசியலினால் இட ஒதுக்கீடு கண்டபடி கையாளப்பட்டதினாலா? //
இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவுந்தான் வழங்கப்பட்டிருக்கிறது.
பிற இடங்கள் எல்லோருக்கும் பொதுவானவை.
"இது ஞாயமாகத்தானே படுகிறது..You cannot have the cake and eat it too!”
நன்றி திரு.வஜ்ரா,
வேடிக்கைக்காக கூறுகிறீர்களா என்பது தெரியவில்லை. ஆயினும் சாதாரண மனிதனாக ஒரு உதாரணம் கூற விரும்புகிறேன்.
ஒரு பேருந்தின் இடது புற இருக்கைகள் அனைத்தும் பெண்களுக்காக ஒதுக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அரசு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டண சலுகை அளிக்கிறது என்றால் வலது பக்கம் உள்ள பொது இருக்கையில் அமர்ந்து செல்லும் பெண்ணுக்கு கட்டண சலுகை கிடையாது என்று கூறுவது இயலாது.
மேலும் உங்களது கேக்கு மொழி இங்கு பொருந்தாது. பெல் கூறுவது பொது ஒதுக்கீட்டில் வருவதாயிருந்தால், நீங்கள் தாழ்த்தப்பட்டவராக இருப்பினும் தாழ்த்தப்பட்டவர் அல்லாதவர் போல கட்டண சலுகை போன்ற எவ்வித சலுகையும் கோராமல் விண்ணப்பதிருக்க வேண்டுமாம். அது சாத்தியமேயில்லை!
அது சாத்தியமேயில்லை என்பது பிரமாண பத்திரம் தாக்கல் செய்த அதிகாரிக்கும் தெரியும். அது மட்டுமல்ல எளிதான, நேர்மையான தேர்வு முறையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான கட் ஆப் மதிப்பெண் பொது ஒதுக்கீட்டின் கட் ஆப் மதிப்பெண்ணை விட கூடுதலாக இருப்பது அடிப்படை கணித விதிகளுக்கு புறம்பானது என்பதும் அவருக்கு தெரிந்திருக்கும்.
இந்தப் பிறழ்சினை எதனால் என்று கேட்டீர்கள் அல்லவா? இவர் போன்ற அதிகாரிகளால் என்பதுதான் எனது பதிலாக இருக்கும். இந்த வகையான முயற்சிகள் விபி சிங் மண்டல் கமிஷன் அறிக்கையினை அமுல் படுத்தியதிலிருந்தே இலை மறை காய் மறையாக தொடங்கி விட்டன. பாவம்! மண்டல் கமிஷன் அறிக்கையில் தாழ்த்தப்பட்டவர்கள் சம்பந்தப்படவில்லை. ஆனால், இப்போது பிற்ப்படுத்தப்பட்டவர்களுடன் சேர்ந்து அவர்களுக்கும் பிறழ்சினை!
இதனை எப்படி குழப்புகிறார்கள் என்பதனை ஐஏஎஸ் தேர்வு முறையினை வைத்து கூறலாம். மத்திய பணிகள் தேர்வில் ஒரு காலியிடத்திற்கு பத்து நபர்களை மெயின் தேர்வு எழுத அழைக்கிறார்கள். பின்னர் அதில் இருவரை நேர்முக தேர்வுக்கு அழைக்கிறார்கள். மொத்த இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 5 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டது என்றால் தாழ்த்தப்பட்டவர்களை தனியே வைத்து 50 நபர்களை மட்டுமே மெயின் தேர்வுக்கு அழைத்து அதில் 10 நபர்களை நேர்முக தேர்வுக்கு அழைத்தால் எப்படியிருக்கும்? இறுதியில் 5 தாழ்த்தப்பட்டவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்! முடிவில் ஒதுக்கீட்டில் உரிமையில்லாதவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு!!
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இந்த பிறழ்சினையினை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பெல் செய்ய முனைந்தது இதுதான். ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வில் நேர்முக தேர்விற்கு தனித்தனியே அழைக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். ஏற்கனவே மத்திய அரசு பணியில் இவ்வாறு பணி மறுக்கப்பட்டவருக்காக எனது நண்பர் சில வருடங்களுக்கு முன்பு தாக்கல் செய்த வழக்கு பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்...ஆயினும் இது போன்று வடிகட்டப்பட்டு அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படும் முறையில் எவ்வாறு இட ஒதுக்கீடு கடைபிடிக்க வேண்டும் என்பது புரியவில்லை. யாராவது விளக்கினால் நலம்.
இறுதியில், நான் இட ஒதுக்கிட்டினை தனிப்பட்ட முறையில் ஆதரிப்பவன் என்றாலும், இட ஒதுக்கீடு அவசியமா? தார்மீக ரீதியில் நியாயமா? என்ற விவாதத்திற்குள் போகவில்லை. அதற்கு வேறு பலர் உள்ளனர். எனது முயற்சி தற்பொழுத் நிலுவையில் உள்ள சட்டப்படி பெல் செய்தது சரியான செயலாக இருக்க முடியாது என்று கூறுவதற்காகவும், இந்த விடயத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு செய்தியினை கூறும் வகையிலும்தான்.
சுந்தர்,
நான் பூசாரி என்று குறிப்பிட்டது அதிகாரிகளை...மண்டல் கமிஷன் அமுல் என்ற பெயரால் 50% முற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கியவர் துரோகியில்லையா?
Can you please give full details of the case and the issues involved.
மண்டல் கமிஷன் அமுல் என்ற பெயரால் 50% முற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கியவர் துரோகியில்லையா
Is it so.Is there any reservation
for the so called forward castes
in jobs/education.The poor among
them get no concession where as
the rich and powerful among
the SCs,STs,BCs and OBCs get
benefits under reservation.The govt. does
very little for the poor in the
so called forward castes but spends
a lot of money for the rich as well
as poor among SCs,STs,BCs and OBCs.
There is something called
equality and the Constitution also
talks about it.Some of the supporters do not have any faith
in it and for them some are more
equal than others.
The Supreme Court is trying to
strike a balance between equality
and discrimination in the name
of reservations.The 50% limit to
reservation is one of the means
to do that.
Mr.Ravi Srinivas,
On the delivery of the Judgment, I shall come with full and authentic details. The present blog is only on what I heard in the Court.
My reference on VP Singh is only on the lighter vein. Please don't be carried away by that. I think you have written enough of the 'reservation' and have had enough from other bloggers.
இந்த வழக்கையும் பெல் நிறுவன சீனியர் வழக்கறிஞர் மற்றும் வலைப்பதிவின் சிலரின் புழுத்த ஆழ்மனக் கிடக்கையையும் வெளிக் கொண்டு வந்தமைக்கு நன்றி!
தீர்ப்பு வந்துவிட்டதா?
http://doctorbruno.blogspot.com/2006/08/open-competition-or-other-castes.html
http://sivabalanblog.blogspot.com/2006/08/blog-post_18.html
http://kuzhali.blogspot.com/2006/08/oc-open-competition-or-other-castes.html
பிரபு, Your blog is good. May I suggest you one thing. Kindly write in short paragraphs quoting other news and articles. You have got talent to write. Keep up the good work and wishing you the best.
Mohan
Post a Comment