11.10.06

தண்டனை, பாலாவின் கேள்விகள்!


‘மணற்கேணி’ சட்டத்தினைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கும் வறட்டுப் பதிவாக உணரப்பட்டுவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்க முயன்றாலும், பாலா எனது முந்தைய பதிவில் எதிர்வினையாக வைத்த சில கேள்விகளுக்கு வெறும் பதில்களை மட்டுமே எழுதுவதில் எனக்கு விருப்பமில்லையெனினும், நேரமின்மை எனக்கு எதிராக சதி செய்கிறது.

1. இரட்டை ஆயுள் தண்டனை என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினாலும், 14 * 2 ==> 28 வருடங்கள் என்று கணக்கிடாமல், ஒரே சமயத்தில் இரண்டு தண்டைனையையும் அனுபவிப்பார். நன்னடத்தை வாங்கி, காந்தி ஜெயந்தி இன்ன பிற கணக்கிடல்களைக் கருத்தில் கொண்டால் எவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்து விடலாம்?

முன்பே ஒரு முறை இணையத்தில் எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முடியும் வரைதான். பலர் நினைப்பது போல 14 ஆண்டுகள் அல்ல! எனது கட்டுரையில் கூறியபடி நீதிமன்றம் தண்டனை அளித்த பின்னர் அரசிற்கு அதனை குறைக்க அல்லது ரத்து செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால், தண்டிக்கப்பட்ட குற்றம் மரணதண்டனைக்கு உரிய குற்றமாக இருக்கையில் ஆயுள் தண்டனையினை குறைக்க அல்லது ரத்து செய்ய வேண்டுமெனில், குற்றவாளி குறைந்தபட்சம் 14 ஆண்டுகளாவது சிறையில் கழித்திருக்க வேண்டும். எனவே ஆயுள் தண்டனை கைதி 14 ஆண்டுகளுக்கு முன்னதாக விடுதலையாக முடியாது. பதினான்கு ஆண்டுகள் கழித்து அரசு ரத்து செய்யவில்லையெனில் சாகும் வரை சிறையிலேயே வாட வேண்டியதுதான். எனவே இரு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் ஒருவர் ஒரு ஆயுள் தண்டனையினை அனுபவித்தாலே போதுமானது.

2. அவ்வாறு வெளியில் அனுப்பப்படுபவர், 'தப்பை உணர்ந்து திருந்தியிருக்கிறாரா?', 'செய்த குற்றத்தை உணர்ந்திருக்கிறாரா?', 'இன்னும் கொலைவெறி/ஆத்திரம் கொண்டிருக்கிறாரா?' என்பதெல்லாம் மெய்ப்பிக்கப்பட்டுதான் விடுதலை ஆகிறாரா?

இவ்வாறாக தண்டனை குறைப்பிற்காக மனு செய்கையில், அரசு தண்டனை வழங்கிய நீதிமன்றத்தின் ஆலோசனையினை கேட்கலாம். மற்றபடி நீங்கள் கூறியபடி மெய்ப்பிக்கப்படுவது கஷ்டம்...ஆனால், நன்னடத்தை கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.


3. விடுதலையான பிறகு முன்னாள் கைதியின் வாழ்க்கை கண்காணிக்கப்படுகிறதா? அவருக்கு அரசு எவ்விதம் உதவுகிறது? வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள, வேலை தேடிக் கொள்ள என்று ஆலோசகரின் அருகாமை கிடைக்கிறதா?

கண்காணிக்கப்படலாம். ஏனெனில் தண்டனைக் குறைப்பின் பொழுது வேண்டிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு. மீறினால் தண்டனைக் குறைப்பை ரத்து செய்து மீண்டும் குறைக்கப்பட்ட காலத்தை சிறையில் கழிக்க வைக்கும் உரிமை அரசுக்கு உண்டு.


4. குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும்போது சிறையில் கழித்த காலம், தீர்ப்பு வழங்கியபின் கொடுக்கப்படும் தண்டனைக் காலத்தில் இருந்து கழிக்கப் படுமா? அதாவது, சஞ்சய் தத்திற்கு சிறைவாசம் விதிக்கப்பட்டால், ஏற்கனவே ஜெயிலில் இருந்த மாதங்கள் கணக்கில் கொள்ளப்படுமா?

கண்டிப்பாக எடுத்துக் கொள்ளப்படும். இதனை set off என்று அழைக்கிறார்கள்.

கேள்விகளுக்கு நன்றி பாலா!

9 comments:

Sivabalan said...

கேள்வி-பதிலுக்கு நன்றி.

நல்ல பதிவு.

நன்றி

Nakkiran said...

//மணற்கேணி’ சட்டத்தினைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கும் வறட்டுப் பதிவாக உணரப்பட்டுவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்க முயன்றாலும், பாலா எனது முந்தைய பதிவில் எதிர்வினையாக வைத்த சில கேள்விகளுக்கு வெறும் பதில்களை மட்டுமே எழுதுவதில் எனக்கு விருப்பமில்லையெனினும், நேரமின்மை எனக்கு எதிராக சதி செய்கிறது.//

மன்னிக்கவும் பிரபு..என் மனதில் வெகுநாளாய் அரித்த ஒரே ஒரு கேள்வி.. ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு.. சில வருட்ங்கள் சிறையில் இருந்த பின், நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என நிரூபணம் ஆகி விடுதலையானால், இத்தனை வருடம் சிறையில் இருந்ததால் அவர் இழந்த வாழ்க்கைக்கு யார் பொறுப்பு.. அவரின் இழப்புகளுக்கு யார் ஈடு செய்வார்கள்.. சட்டம் எப்படி இதை நியாயப்படுத்துகிறது...

நீங்கள் பொறுமையாக நேரம் கிடைக்கும் போது, வேறு ஏதாவது பதிவு எழுதும் போது இடையில் விடையளித்தால் கூட போதும்...
மணற்கேணி’ சட்டத்தினைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கும் வறட்டுப் பதிவாக உணரப்பட்டுவிடக்கூடாது என்பதில் எனக்கும் உடன்பாடுண்டு..

Boston Bala said...

தெளிவு தரும் பதில்களுக்கு நன்றி.

நன்றி கூறலாக இரு சுட்டி/செய்திகள்:
1. OpinionJournal - Leisure & Arts :: The Page-Turner as Polemic: "John Grisham, in his first nonfiction book, writes about the 1987 trial and sentencing to death of Ron Williamson for the murder and rape five years earlier of 21-year-old Debbie Carter. Mr. Williamson's appellate lawyer succeeded in getting his conviction overturned based on claims that his first trial lawyer was inadequate. While preparations for a new trial were being made in 1997, newly available DNA testing established that neither Mr. Williamson nor his friend and co-defendant, Dennis Fritz, was the killer.

In Mr. Grisham's novels, the characters usually divide into two groups: the good guys caught up in evil conspiracies and the villains who concoct them. "The Innocent Man" is no different. Thanks to his abundant storytelling skills, the author delivers an account that is as vivid as the Grisham fictional fare sold at airport kiosks--but it is also, alas, just as oversimplified as his novels, and it distorts the justice system in the same way. Make no mistake, "The Innocent Man"--with its blunt subtitle ("Murder and Injustice in a Small Town") and its author's long-professed zeal to attack capital punishment--is not simply a legal thriller drawn from real life. It is a polemic."

2. Pardon subject to judicial review: SC: "It also ruled that the power of pardon shouldn't just benefit the convict who is pardoned. However, religious and political considerations should not come into play while considering remission of sentences."

ROSAVASANTH said...

//மன்னிக்கவும் பிரபு..என் மனதில் வெகுநாளாய் அரித்த ஒரே ஒரு கேள்வி.. ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு.. சில வருட்ங்கள் சிறையில் இருந்த பின், நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என நிரூபணம் ஆகி விடுதலையானால், இத்தனை வருடம் சிறையில் இருந்ததால் அவர் இழந்த வாழ்க்கைக்கு யார் பொறுப்பு.. அவரின் இழப்புகளுக்கு யார் ஈடு செய்வார்கள்.. சட்டம் எப்படி இதை நியாயப்படுத்துகிறது...//

எனக்கு சட்டரீதியாக இதற்கு பதில் எதுவும் தெரியாது என்றாலும், நடைமுறையில் வைகோவில் தொடங்கி, இந்த பாராளுமன்ற தாக்குதலில் தவறான மற்றும் பொய்யான ஆதாரங்களின் அடிப்படையில் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டு (எதிர்கால தூக்குதண்டனை மிரட்டும் உளவியல் சித்ரவதை உட்பட) கிலானி உட்பட யாருக்கும், அரசு சார்ந்த எந்த நிறுவனமும் பொறுப்பு எடுத்துக் கொண்டதாகவோ, பதில் கூறியதாகவோ, ஈடு செய்ய முயன்றதாகவோ தெரியவில்லை.

PRABHU RAJADURAI said...

"அரசு சார்ந்த எந்த நிறுவனமும் பொறுப்பு எடுத்துக் கொண்டதாகவோ, பதில் கூறியதாகவோ, ஈடு செய்ய முயன்றதாகவோ தெரியவில்லை"

The reason is that 'the king can do no wrong'. The sovereign functions of the Government are not actionable for damages. However, the principle will gradually be diluted in the course of time as the law of torts is a developing jurisprudence. Thanks nakkiran, when the oppertune moment comes I shall try to write about this.

ரவி ஸ்ரீநிவாஸ் said...
This comment has been removed by a blog administrator.
ரவி ஸ்ரீநிவாஸ் said...
This comment has been removed by a blog administrator.
PRABHU RAJADURAI said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//மன்னிக்கவும் பிரபு..என் மனதில் வெகுநாளாய் அரித்த ஒரே ஒரு கேள்வி.. ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு.. சில வருட்ங்கள் சிறையில் இருந்த பின், நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என நிரூபணம் ஆகி விடுதலையானால், இத்தனை வருடம் சிறையில் இருந்ததால் அவர் இழந்த வாழ்க்கைக்கு யார் பொறுப்பு.. அவரின் இழப்புகளுக்கு யார் ஈடு செய்வார்கள்.. சட்டம் எப்படி இதை நியாயப்படுத்துகிறது...//

அப்படி வாழ்க்கையை இழந்தவர்களுக்கு சட்டத்தில் எந்த பரிகாரமும் இல்லை. ஆனால், மேற்படி நபர் தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தவறான உள் நோக்கத்தோடு போடப்பட்டது என வழக்குப்போட்டு வெற்றி பெற்றால், நிச்சயமாக தகுந்த நஷ்ட ஈடு பெறமுடியும். அப்படி வழங்கப் படும் நஷ்ட ஈடு உள் நோக்கத்தோடு தவறாக வழக்குப் போட்ட அதிகாரியிடமிருந்து வசூல் செய்யப்படும்.