30.9.06

வைகோ விடுதலையும் தாராள எண்ணங்களும்... I

(வைகோ விடுதலையின் பொழுது எழுதியதுதான்... இன்றும் அர்த்தமுள்ளதாகவே எனக்கு படுவதால்...)


சில நாட்களுக்கு முன்னர் அருண் வைத்யநாதன் என்பவர் 'வைகோ வழக்கில்’ மறு ஆய்வுக் குழுமத்தின் (Review Committee) தீர்ப்பினை பற்றி தனது வலைப்பதிவில் குறிப்பிடுகையில் 'பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வைகோவே சட்டத்தை மீறலாமா?' என கேள்வி எழுப்பியிருந்தார்.

எதிர்பார்த்தது போலவே அவர் எழுப்பிய கேள்விக்கு சாதகமாக எதிர்வினைகள் இல்லை. ஆனாலும் மனிதர் அவரை ஆதரிக்க கூடிய ஒருவர் கூட இல்லையா என்று புலம்பியிருந்தார்.

அதன் பலனோ என்னவோ, 'இட்லி வடை' என்ற வலைப்பதிவாளர் பொடா சட்டம் முதல் பத்திரிக்கைச் செய்திகள் வரை பலவற்றை ஆதாரக் குறிப்புகளாக காட்டி 'மனித உரிமைகளை எல்லாம் தூர வைத்து விட்டு தீவிரவாதிகளை மூட்டைப் பூச்சி நசுக்குவது போல நசுக்க வேண்டும்' என்று பொரிந்து தள்ளியிருந்தார்.

இயல்பாக நகைச்சுவை ததும்பும் அவரது பதிவில் 'மறுஆய்வுக் குழுமத்தின் தீர்ப்பு மட்டுமே பெரிய நகைச்சுவை' எனக்குறிப்பிட்டு பின்னர் சேரியமாகவே சொல்கிறேன் என்று தனது கருத்துகளை எழுதியிருந்தார். வாசகர்களின் எதிர்வினைகளும் அவர் எழுதிய அதே வேகத்தோடு 'இட்லி சட்னியாயிரும்' என்பது வரை இருந்தது.

இரு வலைப்பதிவுகளையும் படித்த பின்னர் எனக்கு நிலை கொள்ளவில்லை, உடனடியாக பொடா சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று.
வைகோ எவ்விதத்தில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தினை செய்தார் என்பதும், குழுமத்தின் தீர்ப்பு என்னவென்பதும் நான் அறியேன் என்றாலும் அறிந்தமட்டிலும் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.


'அரசியல் தலைவராக இருக்கும் வைகோவே சட்டத்தை மீறலாமா?' என்ற அருணின் சந்தேகம் பலருக்கும் எழுவது இயல்பு.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 'தான் சட்டத்தை மீறியதாக' வைகோ நிச்சயம் கூறியிருக்க முடியாது. இந்நிலையில் அவரது செயல் சட்டத்தை மீறியிருப்பதாக நீதிமன்றம்தான் தீர்க்க வேண்டும். மேலும், நீதிமன்றம் தீர்மானம் செய்யுமுன்னே நம்மால் தீர்ப்பு கூற முடியுமென்றால் நீதிமன்றங்களில் வழக்கு எதற்கு? நேரிடையாக தண்டனை கொடுத்து விடலாமே.

பொடா சிறப்பு நீதிபதி மாவட்ட நீதிபதி தகுதியில் இருப்பவர். ‘வைகோவின் செயல் சட்டத்தை மீறவில்லை’ என்று கூறியிருக்கும் குழுமத்தின் தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். எனவே, வைகோ சட்டத்தை மீறியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு தற்பொழுது நியாயமில்லாதது. “பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றமெனில் ஆதரிப்பதாக கூறும் அவர் குற்றவாளியில்லையா?” என்ற பொதுவான கேள்வி பத்திரிக்கை செய்திகளை வைத்து எழுகின்றது என்பது என் அபிப்பிராயம்.
-oOo-

பொடா சட்டத்தினை படித்த நான் வைகோ, பொடா சட்டத்தின் பிரிவு 21(1)(அ) பிரிவின் மீது குற்றம்சாட்டப்பட்டார் என்றே நினைத்தேன். 'இட்லி வடை' தனது ஆதராக் குறிப்பிலும் இந்தப் பிரிவினையே குறிப்பிடுகிறார். சரி, இந்தப் பிரிவு கூறுவது என்ன? "A person commits an offence if he invites support for a terrorist organisation" என்பதுதான்.

கவனிக்கவும் இங்கு குற்றமாக கூறப்படுவது ஆதரவு தெரிவிப்பதை அல்ல. ஆதரவு கோருவதை. பொடா சட்டம் முழுவதும் நான் படித்த வரையில் எங்குமே பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றம் என கூறப்படவேயில்லை.

"உங்கள் வாக்குகளை பாஜாகாவுக்கு போடுங்கள்" என்று கூறாமல் ரஜினி "என் ஓட்டு பாஜாகாவுக்கு" என்று கூறியதன் வித்தியாசம் புரிந்தால் நான் இங்கு கூற விரும்பும் வித்தியாசமும் புரியும்.

சரி, அடுத்த பிரிவான 22ம் பிரிவு இந்த வித்தியாசத்தினை தெளிவாக்க உதவும். இந்தப் பிரிவு பயங்கரவாத இயக்கங்களுக்கு பொருளுதவி செய்வதைப் பொறுத்தது. பிரிவு 22(1)(அ) கூறுவது என்ன? "A person commits an offence if he invites another to provide money" இதற்கு அர்த்தம் பணத்தினை கோருவது என்பதை நான் கூற வேண்டியதில்லை.
அடுத்த உப பிரிவு 22(2)(அ) "A person commits an offence if he receives money or other property" இதற்கு அர்த்தம் பணம் பெறுவது குற்றம். அடுத்த உப பிரிவு 22(3)(அ) முக்கியமானது. "A person commits an offenc if he provides money or other property" இது பணம் கொடுப்பது.

ஆக, 22ல் மிகத் தெளிவாக பணத்தினை கோருவது, பெறுவது, அளிப்பது என்று எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் பிரித்த சட்ட வரைவாளர்கள் 21ம் பிரிவில் கோட்டை விடுவார்களா?
-oOo-


எனது கருத்து மயிரினைப் பிளப்பது போன்ற மிக நுட்பமானது (hyper technical) என்று தள்ள முடியாது. ஏனெனில், குற்றவியல் வழக்குகளைப் பொறுத்தவரை இதுதான் குற்றம் என தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். எனவே 'இட்லி வடை' சுட்டிக்காட்டும் கண்ணப்பன் 25 முறை என்ன 25 ஆயிரம் முறை கூட 'நான் இன்னாரை ஆதரிக்கிறேன்' என்று கூறிவிட்டு நான் குற்றமே செய்யவில்லை என வாதிடலாம்.

எனது கருத்தினை வைத்து, 'நீ இன்னருக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்க முடியுமா?' என்று கேட்டுவிடாதீர்கள். எனது மருந்தினை என்னிடமே சோதிக்க இயலாது.

நான் கூற வருவது இவ்விதமெல்லாம் வாதிட வழி இருக்கிறது. எனவே 'இட்லி வடை' கூறியதைப் போல வைகோ விடுவிக்கப்பட்டதில் நகைச்சுவையாக ஏதும் இருக்க வழியில்லை.


வேடிக்கை என்னவென்றால், இக்கட்டுரை எழுதுமுன்னர் செய்திகளை மேய்கையில்தான் வைகோ கைது செய்யப்பட்டது பிரிவு 21(3)ன் படி என்ற விபரம் தெரியவந்தது. இந்தப் பிரிவு என்ன கூறுகிறது? "A person commits and offence if he addresses a meeting for the purpose of encouraging support for a terrorist organisation or to further its activities"
மீண்டும் ஒருமுறை படித்தால் இந்தப் பிரிவு எவ்வளவு குழப்பமாக (ambiguous) எழுதப்பட்டிருக்கிறது என்பது புரியும்.

இதில் கூறப்படுவது ஆதரவு திரட்டுவதற்காக கூட்டப்படும் கூட்டமா? இல்லை எந்த கூட்டத்திலும் ஆதரிக்கும் நோக்கத்துடன் பேசப்படும் பேச்சா? addresses a meeting என்பதற்குப் பிறகு arranged என்ற வார்த்தை இருந்திருந்தால் குழப்பமில்லாமல் இருந்திருக்கும்.

பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு திரட்டும் நோக்கத்துடன் ஒரு கூட்டம் கூட்டப்படுகிறது. அங்கு வைகோ மட்டுமல்லாது 'அண்ணன் வருகிறார். அமைதியாக இருங்கள்' என்று கூட்டத்துக்கு அறிவிக்கும் எடுபிடி வரை அனைவரும் கைது செய்யப்பட வேண்டியவர்களே!

சரி, எந்த ஒரு கூட்டத்திலும் பயங்கரவாத இயக்கத்தினை ஆதரிப்பதனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பேசுவது குற்றம் என்று வைத்துக் கொண்டாலும், இந்தப் பிரிவின்படியும் ஆதரிப்பது மட்டுமே குற்றமாகவில்லை என வாதிட வழி இருக்கிறது' எனவே வெறுமே ஆதரித்தார் என்று வரும் பத்திரிக்கைச் செய்திகளை வைத்து வைகோ சட்டத்தை மீறினார் என்று கூற இயலாது.
-oOo-

இதற்கெல்லாம் முக்கிய காரணம் சமீப காலங்களில் எழுதப்படும் பல சட்டங்கள் போலவே, இந்த பொடா சட்டமும் மோசமாக வரையப்பட்டிருப்பதுதான்.
இந்திய தண்டனைச் சட்டம் சுமார் 125 ண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. மெக்காலே கல்வித்திட்டம் என்று நாம் அடிக்கடி விவாதிக்கும் அதே மெக்காலேவால் எழுதப்பட்டது. அதன் ஒவ்வொரு பிரிவும் யாதொரு குழப்பமும் இன்றி, சில சமயம் ஒரு கவிதையைப் படிப்பது போல சிலாகித்து படிக்கும் வண்ணம் இருக்கிறது.


ஆனால், சமீப காலங்களில் எழுதப்படும் சட்டங்கள் ஏதோ ஒருவர் எழுதும் கடிதம் போல எவ்வித கவனமும் இன்றி எழுதப்படுகின்றன. அதனாலேயே சட்டம் இயற்றப்பட்ட பின்னர் எழும் வழக்குகளைப் பொறுத்து சட்டப்பிரிவுகளை அங்கே இங்கே தட்டி மாற்றுவது வழக்கமாகி விட்டது. முதலில் இந்த "support" என்ற வார்த்தையே மிகவும் பாமரத்தன்மையாக இருக்கிறது. சப்போர்ட் என்றால் என்ன? என்றும் கூறப்படவில்லை. இந்த பொதுப்படையான வார்த்தைக்குள் எந்த ஒரு செயலையும் அடக்கிவிடலாம். இத்தகைய வார்த்தைகள் சட்டத்தினை துஷ்பிரயோகம் செய்ய துணையாக இருக்கும்.


சட்ட வரைவாளர்களின் ஆங்கில அறிவுக் குறைவு மற்றும் அவசர சட்டமாக பிறப்பிக்க வேண்டி வரைவாளர்கள் மீது அரசு ஏற்படுத்தும் நிர்ப்பந்தமே மோசமான சட்டவரைவுகளுக்கு காரணம். இப்படி மோசமாக ஆங்கிலத்தில் எழுதுவதை விட தாய் மொழியிலேயே சட்டத்தை இயற்றுவது நன்மை பயக்கும் என எண்ணுகிறேன். சரி, அதற்கு தனியே ஒரு கட்டுரை எழுதலாம்.
-oOo-


சட்டத்தை மீறுவதைப் பொறுத்து இவ்வளவு கண்டிப்பாக பேசுகிறோமே...முன்பு எம்ஜிர் முதல்வராக இருக்கையில் மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. கலைஞர் கருணாநிதி ஏற்படுத்திய தமிழீழ தரவு இயக்கம் (TESO) மாநாட்டினை ஏற்பாடு செய்த அமைப்பு. மாநாட்டின் பெயர் ‘தமீழீழ ஆதரவு மாநாடு’. மாநாட்டில் பணம் வசூலிக்கப்பட்டு தமிழீழ போராட்டக்குழுக்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது எம்ஜிருடன் நெருக்கமாக இருந்த விடுதலைப்புலிகள் அதை பெற்றுக் கொள்ளவில்லை. பின்னர் அந்தப்பங்கும், சீறீசபாவுக்கு வழங்கப்பட்டது என நினைக்கிறேன். மற்ற இரு பெரிய போராளிக்குழுக்களூம் பணம் பெற்றனர்.

பணம் பெற்ற அனைவருமே ஆயுதப் போரட்டத்திற்குதான் அதை பயன்படுத்த போகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மாநாட்டின் சிறப்பு பேச்சாளர்...நம்ம பிரதமர் வாஜ்பேயி! சரி, இதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா?


‘இந்திய நாட்டுடன் அமைதியான உறவினை கொண்டிருக்கும் எந்த ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும் அல்லது அழிம்பு செய்யும் செயலோ அல்லது அதற்கு உதவி புரிவதோ இந்திய தண்டனை சட்டம் பிரிவு 125, 126ன் படி ஏழு ஆண்டு தண்டனைக்குறிய குற்றம்’


ஏறக்குறைய தமிழ்நாட்டின் மொத்த ஜனத்தொகையையும், முன்னாள் பிரதமர், முதல்வர், ரா பிரிவு அதிகாரிகள், ஏன் இன்னாள் பிரதமரையும் சேர்த்து உள்ளே போடலாம்.
... to be contd.

மும்பை
19/04/2004

12 comments:

முத்து(தமிழினி) said...

Simple and good..informative too

செல்வமணி said...

'ஏறக்குறைய தமிழ்நாட்டின் மொத்த ஜனத்தொகையையும், முன்னாள் பிரதமர், முதல்வர், ரா பிரிவு அதிகாரிகள், ஏன் இன்னாள் பிரதமரையும் சேர்த்து உள்ளே போடலாம்.'

பிரபு ராஜதுரை... உண்மைதான்.பணமும் கொடுத்து பயிற்சியும் கொடுத்தற்கான தண்டனை வேறு வழியில் இந்தியாவுக்கு கிடைத்துவிட்டது...1,157 இந்திய வீரர்களையும்,ஒரு முன்னால் பிரதமரையும் இழக்க வேண்டியதாகிவிட்டது.

வைகோ ஆதரவு பேச்சை நீங்கள் சொல்லுவது போல் சட்டநுணக்கங்களால்
அணுகிவிடலாம்.அதேபோல்...அவர் விசா இல்லாமல் பாஸ்போர்ட் பயன்படுத்தாமல் இலங்கை சென்று வந்ததையும் சட்டநுணக்கங்களை பயன்படுத்தி நியாயப்படுத்த முடியுமா என்பதை விளக்கினால் எங்களுக்கும் பயனுள்ளதாக...இல்லை..பயனுள்ள தகவலாக இருக்கும்.

சட்டத்தை உருவாக்குபவர்களே சட்டத்தை உடைக்கிறார்கள்...interesting!!

PRABHU RAJADURAI said...

நண்பர் செல்வமணி,

இக்கட்டுரையின் நோக்கம் வைகோ செயலின் நியாய அநியாயங்களைக் குறித்தல்ல. பொடா மறு ஆய்வுக்குழு அளித்த தீர்ப்பானது நகைப்பிற்குறியது என்ற விதத்தில் கூறப்பட்டதற்கு பதிலாக எழுதப்பட்டது. அவ்வளவே!

நன்றி!

செல்வமணி said...

புரிந்துகொண்டேன்.

நன்றி.

-/சுடலை மாடன்/- said...

நண்பர் செல்வமணி சொல்ல நினைப்பது போல் "வைக்கோ விசா இல்லாமல் பாஸ்போர்ட் பயன்படுத்தாமல் இலங்கை சென்று வந்ததை" சட்டநுணுக்கங்களை பயன்படுத்தி நியாயப்படுத்த முடியாதுதான். அவர் சென்று வந்ததால் எந்த உயிருக்கும் தீங்கு இல்லாவிடினும் அதற்கான தண்டனையை அதிகமாகவே அனுபவித்து விட்டார்.

ஆனால் அயோத்தியாவில் பாபர் மசூதியை இடித்து இந்தியா முழுவதும் ஆயிரத்துக்கும் மேலான உயிர்கள் மடிந்து இரத்த ஆறு ஓடச்செய்த கிரிமினல் குற்றவாளி அத்வானி போடாச் சட்டம் கொண்டு வைக்கோவை உள்ளே போட்டதுதான் நகைமுரண். இப்படி சட்டத்தை உடைத்து பல உயிர்கள் மடியக் காரணமான அத்வானிகள் சட்டத்தையே உருவாக்குவது செல்வமணிகளுக்கும், அப்பெயர்களின் பின்னால் உள்ளவர்களுக்கும் எப்பொழுதுமே உறுத்துவதில்லை!

நன்றி - சொ. சங்கரபாண்டி

செல்வமணி said...

'சட்டத்தை உடைத்து பல உயிர்கள் மடியக் காரணமான அத்வானிகள் சட்டத்தையே உருவாக்குவது செல்வமணிகளுக்கும், அப்பெயர்களின் பின்னால் உள்ளவர்களுக்கும் எப்பொழுதுமே உறுத்துவதில்லை'

கற்பனைகளை சற்று கட்டுப்படுத்திக்கொள்ளலாமே..அத்வானிபோன்ற மதவாத சக்திகளை ஆதரித்த என் பின்னூட்டம் ஏதாவது பார்த்திருக்கிறீர்களா? வைகோவை விமர்சனம் செய்தால் உடனே அத்வானியின் ஆதரவாளர் என்று முடிவு செய்துவிடுவதா? இது என்ன கணக்கு என்று புரியவில்லை.

பிரபு ராஜதுரை...தங்களின் பழைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன்.நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.நன்றி.

Nakkiran said...

Point noted.. :)

Nakkiran said...

வக்கீல்களின்/சட்டத்தின் வார்த்தை விளையாட்டு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது... சும்மா பூந்து விளாடுங்கோ..

Anonymous said...

Rajiv sent to IPKF to help SL ARMY.
IPKF and SL ARMY killed more than 10 000 Tamils. Indian Media did not say the Truth to own (Indians) People. India received 188 Petroleum Tanks in Trincomalee
Port. He cheated SL Tamils and Indian Tamis. Mr Vaiko criticised Rajiv at Lok Saba. He give voice for Victims of India.
i never accept rajiv Murder. But
what do you want say about 10 000
Deaths in Sri Lanka

Anonymous said...

Rajiv sent to IPKF to help SL ARMY.
IPKF and SL ARMY killed more than 10 000 Tamils. Indian Media did not say the Truth to own (Indians) People. India received 188 Petroleum Tanks in Trincomalee
Port. He cheated SL Tamils and Indian Tamis. Mr Vaiko criticised Rajiv at Lok Saba. He give voice for Victims of India.
i never accept rajiv Murder. But
what do you want say about 10 000
Deaths in Sri Lanka

Anonymous said...

திரு செல்வமணி அவர்களே!

இந்தியப் படையும் புலிகளும் போரிட்டது மாத்திரம் தான் உங்கள் கண்ணில் படுகின்றது. இந்திய அமைதிப்படை அனுப்பும்போதே அங்கேயுள்ள தமிழர்களைக் காப்பாற்றுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, இந்திய அரசு உருவாக்கிய ஈழவிடுதலை இயக்கங்களை அழிக்க இரகசிய உடன்பாடு செய்திருந்தது. இதை இந்து ராம் புரண்ட்லைனில் பகிரங்கப்படுத்தினார். இது
ஏற்கனவே போப்பார்ஸ் ஊழலில் சிக்கியிருந்த ராஜீவை மேலும் ஆத்திரமூட்டியது என்பது தெரிந்தவர்களுக்கு மட்டும் தெரிந்த விடயம்.

இன்று இலங்கையில் உள்ள எண்ணைக் கிடங்குகள் அனைத்துமே இந்திய அரசின் உடமை என்பது உங்களூக்குத் தெரியுமா?
இது எப்படி இந்தியாவிற்கு கிடைத்து என்பதை இட்லி வடைக்கு அல்லது உங்களூக்கு தெரியுமா?

இந்திய வீரர்கள் 1500, இலங்கைத் தமிழர் உயிர்கள் 10000 இதற்கு விலையாக இந்தியா கொடுத்தது.


இல‌ங்கை இர‌க‌சிய‌ உட‌ன்பாட்டின் பிர‌கார‌ம் இல‌ங்கையின் ஆயில் கிட்ட‌ங்கிக‌ள் IOC வ‌ச‌ம் கிட்டிய‌து. ஆனால், இல‌ங்கை அர‌சு இன்திய‌ அர‌சிற்கு ந‌ல்ல‌ ப‌ரிசுக‌ளும் கொடுத்தார்க‌ள்.

இல‌ங்கை பிர‌த‌ம‌ர் பிரெம‌தாசா அவ‌ர்க‌ளே சிங்க‌ள‌ க‌ட‌ற்ப‌டைச் சிப்பாய் மூலம் ராஜீவைத் தாக்கினார்.
தாக்கிய‌ சிப்பாய் 10 ஆண்டு சிறைக்கு செல்ல‌வேண்டும். அவ்ன் 2 வார‌ங்க‌ளில் சிறையில் வெளியே கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌தோடு இன்றும் நாட‌ளூம‌ன்ற‌ உறுப்பின‌ராக்க‌ப்ப‌ட்டார்.

சிறில‌ங்கா அர‌சுதான் 300 மேற்ப‌ட்ட‌ மீன‌வ‌ர்க‌ளைக் கொலை செய்தார்க‌ள் என‌ ஏ.கே ஆன்ட‌னி கூறியிருக்கின்றார். சிறில‌ங்கா அர‌சை எங்க‌ளால் எதுவும்
செய்ய‌ முடியாது. பாகிஸ்த்தான் ம‌ற்றும் சீனா இல‌ங்கைகு கை கொடுக்கும் என்ற‌ அச்ச‌ம் ந‌ம‌க்கு உண்டு.

இல‌ங்கையில் ம‌லகூட‌த்தை துப்ப‌ர‌வு செய்ப‌வ‌ர்க‌ள் இன்திய‌ த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டும் தான். அவ‌ர்க‌ளூக்கு வாக்குரிமை கூட‌ இல்லை.

நேரு, இன்திரா, ராஜீவ் இவ‌ர்க‌ளுக்காக‌ என்ன‌ செய்தார்க‌ள்?
அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள். அவர்கள் வ‌ட‌ நாட்டுக்கார‌ர்க‌ளாக‌ இருப்பின் டில்லி அர‌சு
ம‌ட்டுமல்ல‌ நாமும்தான் க‌ண்ணீர் வ‌டிப்போம்.

வை.கோ ம‌ன‌ச்சாட்சியுள்ள‌ த‌லைவ‌ர்.
தேசிய‌ப்ப‌ற்று அவ‌சிய‌ம் தான். ஆனால் அது ம‌ன‌ச்சாட்சியைவிட‌ உய‌ர்வான‌த் இல்லை.

MADURAI THAMILAN

Anonymous said...
This comment has been removed by a blog administrator.