5.11.11

வரலாறு மிக முக்கியம்!

தினகரன் நாளிதழில் 'பீட்டர் மாமா' என்ற பெயரில் அரசியல் கிசுகிசுக்கள் தினமும் எழுதப்படும். நேற்றைய பகுதியில், 'மதுரை மீட்டிங்ல அப்போ கொபசாவா இருந்த ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் வெள்ளிச் செங்கோல் கொடுத்தார். அதுக்குப் பிறகு கிடுகிடுன்னு வளர்ந்து சீயெம் ஆயிட்டார்' என்று ஒரு 'செய்தி' எழுதப்பட்டுள்ளது.

எம்ஜியாரிடம் இருந்து ஜெயலலிதா வெள்ளிச் செங்கோல் பெறுவது போல ஒரு புகைப்படம் அதிமுக கட்சி சுவரொட்டிகளில் அடிக்கடி பார்க்கலாம். எம்ஜிஆர் அதிமுக தலைமையை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்ததன் அடையாளமாக, அந்தப் புகைப்படும் தொண்டர்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நடத்தப்பட்ட எம்ஜிஆர் மன்ற மாநாட்டில் அந்தச் செங்கோல் ஜெயலலிதாவால் எம்ஜியாருக்கு வழங்கப்பட்டது.


ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அதிமுகவால் மதுரையில் நடத்தப்பட்ட பிரமாணமான கண்டனக் கூட்டத்தில் ஒபிஎஸ் அதே போன்ற செங்கோலை ஜெயலலிதாவிற்கு வழங்கினார்...

-oOo-

இரண்டு நாட்களாக, சுவிட்சர்லாந்து ஹெச் எஸ் பி ஸி வங்கியில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பெயரை கூற வேண்டுமென்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப் போகிறேன். பின்னர் பூகம்பம்தான் என்று மிரட்டிக் கொண்டிருந்த வருண் காந்தி, இதோ அப்படி கேட்டே விட்டதாக நேற்று டைம்ஸில் செய்தி வெளியாகி உள்ளது.

வருண் காந்தியின் தந்தையான சஞ்ச்ய் காந்தி நான் பதினொராவது வகுப்பு படிக்கும் பொழுது பயிற்சி விமானத்தில் சாகசப் பயிற்சி செய்து கொண்டிருந்த பொழுது விமானம் கீழே விழுந்து இறந்து போனார். அவரது தாயாரும், இந்தியாவின் பிரதமரும் ஆகிய இந்திரா காந்தியின் உணர்ச்சிகளை படம் எடுத்துவிட வேண்டும் என்று குழுமியிருந்த புகைப்படகாரர்களை, பெரிய கறுப்பு கண்ணாடி அணிந்து வந்து இந்திரா ஏமாற்றினார்.

சஞ்சய் உடலைப் பார்க்க வ்ந்த இந்திரா அதிகாரிகளிடம் முதலில் கேட்டு வாங்கி தன்னுடன் வைத்துக் கொண்டது, சஞ்ச்ய் காந்தியின் கைக்கடிகாரம்!


'ஏன் இந்திரா சஞ்சயின் கைக்கடிகாரத்தை குறிப்பாக கேட்டு வாங்கி வைத்துக் கொண்டார்' என்பதற்கு அன்றைய பத்திரிக்கையாளர்களிடம் இருந்த ஒரெ யூகம் பற்றி வருண் காந்திக்கு தெரியுமா?

-oOo-

அவர்களைப் பற்றி யாரேனும் குற்றம் சாட்டினால், 'எங்கள் மீது தவறு இருந்தால் தூக்கில் போடுங்கள்' என்று அன்னாகுழுவினர் கூச்சலிடுகின்றனர். மற்ற அரசியல்வாதிகளும் முன்பு இதே வசனம்தானே பேசுவார்கள்!

ஆனால், அரசியல்வாதிகள் அன்னா ஹசாரே போல, 'திக்விஜயசிங்கிற்கு பைத்தியம் பிடித்து விட்டது' என்ற அளவிற்கு போக மாட்டார்கள். விமர்சனங்களைத் தாங்கும் பண்பு அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, தங்களுக்கும் வேண்டும் என்று அன்னா குழுவினர் உணர்ந்ததாக தெரியவில்லை.

எப்படியோ, விரைவில் ஜன்லோக்பால் அளவிற்கு லோக்பால் வந்துவிடும். இந்தியாவின் துன்பங்கள் தீர்ந்துவிடும்!

இந்தியாவின் கஷ்டம் தீருகிறதோ இல்லையோ, அனில் அம்பானி, ரத்தன் டாடா அவர்க்ளை கைது செய்யும் நிலை ஏற்ப்பட்டால், அன்று 2ஜி வழக்கு முடிவுக்கு வந்து விடும் என்று நினைத்தேன். சுப்பிரமணியன்சுவாமி கூட அவர்கள் இருவரும் சிறைச்சாலை சுவரைப் பார்க்கும் நாள் வரும் என்று பேட்டியளித்தார். ஆனால் அது இனி நடக்காது போல!

2ஜி வழக்கு முடிவுக்கு வருகிறதோ இல்லையோ, கூடங்குளம் பிரச்சினை முடிவுக்கு வராதது போலத் தோன்றுகிறது. உள்ளாட்சித்தேர்தலுக்கு முன் தினம், நண்பர் ஒருவருடன் 'இடிந்தகரைக்கு' சென்றிருந்தேன்.

சுனாமியைப் பற்றி பேசுகிறார்கள், ஜப்பான் போல பாதிப்பில்லை என்கிறார்கள். ஏன் செர்னோபிலைப் பற்றி பேசவில்லை என்று புரியவில்லை.


'வரலாறு மிக முக்கியம்!'

மதுரை
06/11/11

5 comments:

Prabhu Rajadurai said...

ஆமா, சஞ்சய் இறந்த பொழுது பத்திரிக்கைகளில் வெளிவந்த அந்த கைக்கடிகாரம் விவகாரம் உண்மையா?

வல்லிசிம்ஹன் said...

கடிகாரங்கள் பல செய்திகளை உள்ளடக்கி வைத்திருக்கும் என்றும் பேசப்பட்டது.

Anonymous said...

Actually in Japan itz rather worse than tchernobyl and they r trying to hide it from the world which is rather a cruel joke. They r misguiding people and worst of all, making them use the resources from the affected area. In short itz like slow poisoning their generation. All the countries are aware of this but keep mum to escape from their own people. Itz like tchernobyl disaster in the 80's when some european countries announced that they have stopped the plume that drifted over large parts of the western Soviet Union and Europe. Misguiding people is not something new to the governments, and abdul kalam is a nice puppet to their show. Plus I dont know y people keep on saying japan as one of the most democratic country which z like calling berlusconi monogamous. Coz like italy, in japan mafia is institutionalised. They dont smuggle drugs anymore but run the government, if u understand what i say.

Vivek Vinothagan

ஏவிஎஸ் said...

ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு செங்கோல் வழங்கினார். அதை ஜெயலலிதாவிற்கு எம்.ஜி.ஆர் திரும்பி வழங்கி விட்டார் என்று ஒரு நினைவு.

சஞ்ஜய் கடிகார விவகாரம் நினைவிலிருக்கிறது. அது உண்மையா, வதந்தியா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் கடிகாரத்தில் கூட பல தகவல்கள் உள்ளதாகவும், அது இன்னமும் டிக்,டிக் என்று ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் வதந்திகள் உண்டு. சமாதியில் அதை நம்பி, சிலர் காது வைத்துக் கேட்க முயற்சிப்பதையும் பார்க்கலாம்.

சாய் பிரசாத் said...

முக்கியமான வரலாறு தான்.. எம்.ஜி.ஆர் கடிகாரம் பற்றி கேள்விப்படிருக்கிறேன்... இது புதிய தகவல்
.