3.5.11

தமிழகத்திலும் மோடி ஆட்சி!

சமீப காலமாக இணையத்திலும் பத்திரிக்கைகளிலும், ‘தமிழக உருப்படுவதற்கு ஒரே வழி, மோடி ஆட்சிதான்என்று பலராலும் திரும்பத் திரும்ப கூறப்படும் வேளையில், கடந்த வாரம் இணையத்தில் படித்த செய்தி ஒன்றினால், ‘தமிழ் நாட்டில் உண்மையிலேயே மோடி ஆட்சி மலர்ந்து விட்டதா?என்ற சந்தேகம் வந்து விட்டது.

இந்தியாவிலுள்ள பெரிய 20 மாநிலங்களில் பொருளாதார சுதந்திரம், அபரிதமான செல்வம், மனித வள மேம்பாடு ஆகிய துறைகளில் முதன்மை வகிக்கிறது என்று இந்திய மாநிலங்களில் பொருளாதார சுதந்திரம் 2011என்ற அறிக்கை கூறுவதாக ஐபிஎன் லைவ், பிஸினஸ் ஸ்டாண்டர்டு ஆகிய வலைத்தளங்களின் செய்தியை படித்தால், ‘குஜராத்தும் தமிழ்நாடும்அங்கே இங்கே முன்னே பின்னே இருந்தாலும் பொதுவில் ஒன்றாகத்தான் இருப்பதைப் பார்த்தால் தமிழ்நாட்டையும் தூக்கி ‘மோடிகையில் குடுத்து விட்டார்களோ என்று ‘அச்சமாகஇருக்கிறது.

***

கம்யூனிஸ்டுகளைக் (போலி மற்றும் ஹோலி) கேட்டால் ‘ஆம், குஜராத்தும், தமிழகமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தானே என்பார்கள். கம்யூனிஸ்ட் (இடது/போலி) கட்சியின் அதிகாரபூர்வமற்ற பத்திரிக்கையான ஹிந்து, ‘குஜராத்தில் தனி நபர் வருமானம் வேண்டுமாயில் பெருகியிருக்கலாம். ஆனால், பசி கூடியுள்ளது’ என்றும் ‘அதிகமாகிவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்தான் அதற்கு காரணம்’ என்று எச்சரிக்கிறது.

***
தமிழகத்தில் மோடி ஆட்சி நடைபெறுகிறதுஎன்று பேசினால், கம்யூனிஸ்டுகள் கருணாநிதியை தாக்குவதாக எடுத்துக் கொண்டு கை தட்டுவார்கள். அதே மேடையில் அமர்ந்திருக்கும் சீமான், ‘பேசுவது யார் விஜயகாந்தா?என்பார்.
Politics makes strange bedfellows என்று சும்மாவா சொன்னார்கள்.
தமிழ் வெறியர், தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர் என்று ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்ட கருணாநிதி, தேசிய ஒருமைப்பாட்டை கட்டிக்காப்பதாக சொல்லப்படும் காங்கிரசுடன்! தீவிரவாதத்தை (விடுதலைப்புலிகள்?) இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி தமிழகத்திலிருந்து விரட்டியதாக ‘சோஅவர்களால புகழப்பட்ட ஜெயலலிதா, விடுதலைப்புலிகளின் அனுதாபிகளுடன்!!
தமிழகத்தில் அமையப் போவதாக அரசியல் நோக்கர்கள் அனைவராலும் நம்பப்படும் அதிமுக ஆட்சியில் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இரு கைதுகளை நான் எதிர்பார்க்கிறேன். ஒன்று சீமான்! அடுத்தது விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ்!!
***  
ஏன் இங்கு அரசியல் பதிவு என்றால் வேறு எதுவும் எழுதுவதற்கு இல்லை என்பது காரணமாக இருக்கலாம். Politics is the last refuge of a Scoundrel இல்லையா?
நீ என்ன ஸ்கெளண்ட்ரலா என்றால் நேற்று எனக்கு அப்படித்தான் தோன்றியது. அனைவரும் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கேட் திருமணத்தை வியந்து கொண்டிருக்கையில் எனக்கு மட்டும் அந்த சந்தேகம் வந்தது. சார்லஸ் டயானா திருமணத்தின் பொழுது டயானாவிற்கு கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டது. சிலர் அதனை விமர்சிக்கவும் செய்தனர்.
கேட்-மிட்டில்டன்னுக்கு அப்படி நடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் வந்தால்... அது கூடப் பரவாயில்லை. அப்படி ஒரு சோதனை நடந்து, அவரது கன்னித்தன்மை நிரூபிக்கப்பட்டிருந்தால், வில்லியமின் ஆண்மைத்தன்மை மீது சந்தேகம் வந்திருக்குமே, என்று நினைத்தால் ஸ்கெளண்ட்ரல் என்று சொல்லாமல் பின்ன எப்படிச் சொல்வதாம்!
It seems the Royal Family is drifting away from the Church in its quest to getting closer to Jesus

மதுரை
03/05/11

8 comments:

PRABHU RAJADURAI said...

இந்தப் பதிவில் குறிப்பிடப்படும் அறிக்கை பற்றி சற்று சேரியமாக அறிந்து கொள்ள


Economic Freedom of the States of India: 2011
By Swaminathan S. Anklesaria Aiyar, Research Fellow, Center for Global Liberty and Prosperity; Bibek Debroy, Professor, Centre for Policy Research, Delhi; Laveesh Bhandari, Founder/Director, Indicus Analytics.
http://www.cato.org/economic-freedom-india/

PRABHU RAJADURAI said...

இந்த அறிக்கையின் முடிவில் முக்கியமாக் நான் குறிப்பிட விரும்புவது 2005ம் ஆண்டிலும் சரி 2009ம் ஆண்டிலும் சரி சட்ட அமைப்புகள் மற்றும் சொத்துரிமை மீதான பாதுகாப்பு என்ற இரு அம்சங்களில் தமிழ்நாட்டின் அருகில் கூட மற்ற மாநிலங்கள் வர முடியவில்லை. இது நான் ஏற்கனவே அனுமானித்த விடயம்தான்.

குறிப்பாக கூற வேண்டுமென்றால், 2009ம் ஆண்டில் தமிழநாட்டின் மதிப்பெண் 0.901 அடுத்த மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் மதிப்பெண் 0.624.

மருத்துவ துறையை எடுத்துக் கொண்டாலும் இப்படித்தான் இருக்கும் என்று புரூனோ கூறுவார்

அட்டவணை வடிவில் இந்த அறிக்கை முடிவுகள்

http://www.cato.org/economic-freedom-india/AppendixIV.pdf

Anonymous said...

Cato is an ultra rightist think tank that supports conservative policies- less government,less tax,
more freedom for business,less regulation for pollution and the right to hire and fire.Do you support this.Check the backgrounds of the authors. Not long ago Rajiv Gandhi Foundation published a study that gave glowing tributes to gujarat.

Prakash said...

Good one

PRABHU RAJADURAI said...

Dear Anony,

I am aware that Cato is a rightist think tank. However I like S.A.Aiyer and his reasonings. Simple and lucid ideas. Well anyway the purpose of this blog post is not to assert that TN is the most developed state but only to draw a comparison between TN and Gujarat. I believe in private entrepreneurship, with sufficient state control and regulation

Anonymous said...

My associate and I actually enjoyed studying this weblog publish, I used to be simply itching to know do you trade featured posts? I'm all the time looking for someone to make trades with and merely thought I would ask.

PRABHU RAJADURAI said...

Dear Anony,

I am at the loss to understand what you mean by trade features posts?

புருனோ Bruno said...

//Dear Anony,

I am at the loss to understand what you mean by trade features posts?//

அதாவது, அவர் அவரது பதிவில் உங்கள் வலைப்பதிவை புகழுந்து எழுதுவார் அல்லது சுட்டி தருவார். நீங்கள் மணற்கேனியில் அவரை புகழ்ந்து எழுதவேண்டும் அல்லது அவரது பதிவிற்கு சுட்டி தர வேண்டும்