21.6.10

ஞாநி கொடுத்த பத்மஸ்ரீ!

You are incorrigible

என்று ‘மாஸ்க்படத்தில் காவலர் மீது ஜிம் கேரி பாய்வாரே, அப்படிப் பாய வேண்டுமென்று இருக்கிறது, பத்தி எழுத்தாளர் ஞாநி மீது!


அவரது இந்தத் தகவ்லுக்கு ஆதாரம் என்னவென்று தெரியவில்லை. இணையத்தில் தேடினால், இந்தியாவின் மக்கள் தொகையினை பெருமளவில் குறைக்க உதவிய ஆண்டர்சனுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கக்பட்டு அதற்கு ஓபாமா வாழ்த்தியதாகவும் ஒரு கிண்டல்தான் கண்ணில் பட்டது.

ஞாநி இவ்வளவு நல்லவரா?
-oOo-
யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தின் தலைவரான கேசுப் மஹிந்திரா பலரால் மதிக்கப்படும் ஒரு தொழில் அதிபர். அவரது சேவையினை பாராட்டி மத்திய அரசு ‘பத்ம பூசன்விருது அளிக்க முன் வந்தது. ஆனால் தன் மீது போபால் விபத்து குற்றவியல் வழக்கு நிலுவையிலுள்ளது என்று கூறி அவர் அதனை மறுத்து விட்டார்.
-oOo-

மற்றவர்கள் பலருக்கும் நிகழக்கூடிய அனுபவம் ஒன்று எனக்கு நிகழ்ந்ததேயில்லை. எனக்கு அதில் வருத்தமா இல்லை பெருமிதமா என்று தெரியாது. ஆனால் அப்படியொரு அனுபவம் வாய்க்க எனக்கு வாய்ப்பில்லை என்றுதான் நினைத்து வந்தேன்.

ஒன்றும் பெரிதாக் இல்லை... என்னைப் போலவே பெயர் கொண்ட மற்றொரு நபரை சந்திக்கையில் ஏற்ப்படக்கூடிய அசட்டுத்தனமான ஒரு உணர்வுதான் அது.

பிரபு என்ற பெயரும் ராஜதுரை என்பதும் பிரபலமான பெயர்கள்தான் என்றாலும், பிரபு ராஜதுரை என்று சேர்த்து விளிக்கையில் சற்று பிசிறு தட்டும் ஒரு பெயருடைய வேறு யாரும் இருப்பார்கள் என்று நான் நினைத்ததில்லை. யாதோங்கி பாராத் வகை திரைபப்டங்களில் வருவது போல ஏதோ சிறு வயதில் தொலைந்து போன சகோதரனை தேடுவது போல அவ்வப்பொழுது மற்றொரு பிரபு ராஜதுரையை தேடி வந்தாலும், உலகில் வேறு யாருக்கும் இல்லாத தனிப் பெயர் என்ற பெருமைக்கு பங்கம் வந்துவிடும் அபாயத்தை எண்ணி பயமாகவும் இருக்கும்.

அதற்கு வந்து விட்டது வேட்டு!

சமீபத்தில் இணையத்தில் வலை விரித்ததில் சிக்கியது இந்த தினமணி செய்தி


தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் ஒருவர் எனது கட்சிக்காரர். அதனால் ஏதேனும் என்னுடைய பெயர் தவறுதலாக வந்து விட்டதா என்று தெரியவில்லை. விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.


உங்களுக்கும் யாரையாவது தெரியுமா? அல்லது பேஸ்புக்கில் இருப்பவரையாவது தெரியுமா?

Madurai
21/06/10

3 comments:

ராஜ நடராஜன் said...

//
நேற்று பேஸ்புக்கில் புகைப்படத்துடன் என்னைப் போல ஒருவர் இருக்கிறார். எனக்கு இப்பொழுது பயமாக இருக்கிறது!!!//

நல்லாத்தானே இருக்கிறார்!இதுக்குப் போய் ஏன் பயப்படுறீங்க:)

Rex Arul said...

//
உங்களுக்கும் யாரையாவது தெரியுமா? அல்லது பேஸ்புக்கில் இருப்பவரையாவது தெரியுமா?
//

தெரியும்.......ஆனா தெரியாது....

PRABHU RAJADURAI said...

Why I am on the wrong side of the news always?
http://www.maalaimalar.com/2011/01/10180105/robbery-in-four-and-half-lac-t.html