20.3.09

அமெரிக்காவைப் பார்...

நடந்து முடிந்த வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தத்தைப் பற்றி 19/03/09 தேதியிட்ட ‘இந்து’வில் அதன் அமெரிக்க வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் கவனத்தை ஈர்ப்பதாயிருந்தது. அதாவது அமெரிக்காவில், ஒரு வழக்காடி தன்னுடைய வழக்கினை தானே நடத்தக்கூடிய உரிமை உள்ளதாம். வழக்குரைஞர் வேலை நிறுத்தம் காரணமாக, தமிழ்நாட்டிலும் வழக்காடிகள் தங்களுடைய வழக்கினை தாங்களே நடத்தும் உரிமையினைப் பெற்றுள்ளார்களாம்.

இந்த கடிதத்தை பிரசுரித்ததன் மூலம், ‘இந்து’ பத்திரிக்கை ஒரு இந்திய வழக்காடிக்கு தனது வழக்கினை தானே வாதிடும் உரிமை இல்லை என்பது போன்ற தோற்றத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது. வாசகரும் சரி, இந்துவும் சரி அறியாத ஒரு விடயம் நமது நாட்டில் நிலவும் சட்டங்கள் நாகரீகத்திலும் மனித உரிமையைப் பேணுவதிலும், அமெரிக்க நாட்டிலுள்ள எந்த ஒரு சட்டத்திற்கு குறைவான ஒன்றல்ல. இங்கும் ஒரு வழக்காடிதான், தன்னுடைய வழக்கினை நடத்தும் முதல் உரிமை உள்ளவர். வேண்டுமானால் அவர் ஒரு வழக்குரை நியமித்துக் கொள்ளலாம். எனவே இந்த ஒரு சாதாராண உரிமைக்கு கூட அமெரிக்காவை தேடி ஓட வேண்டியதில்லை...

பல சமயங்களில், இங்கும் வழக்காடிகள் தங்களுடைய வழக்குகளை தாங்களே நடத்துவதுண்டு. ஒரு வழக்குரைஞருக்கு கிடைக்கும் உரிமையை விட சற்று மேலான உரிமை, ‘Party in Person’ என்று அழைக்கப்படும் அவர்களுக்கு உண்டு. வழக்கினை வாதிடுகையில், தனது வழக்கின் சாரத்தை விட்டு வெளியே சஞ்சரிக்கும் வழக்குரைஞர், நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்படுவார். ஆனால், வழக்காடி வாதிடுகையில், அவ்வித கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்பட முடியாது. எவ்வளவு தர்மசங்கடம் என்றாலும், நீதிபதி அவரது வாதத்தைக் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். இல்லை, கதவுக்கு வெளியே சென்று ‘எனக்கு இங்கே நீதியில்லை. எனது வழக்கினை பேச எனக்கு உரிமை இல்லையா?’ என்று கத்த ஆரம்பித்து விடுவார்கள்.

அது மட்டுமில்லாமல், சட்ட ரீதியிலும் சில உரிமைகள் உண்டு. உரிமையியல் வழக்கில், கூறப்படும் தீர்ப்பில் அந்த தீர்ப்பினை எதிர்த்து எங்கு எவ்வளவு நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என்று கூற வேண்டியதில்லை. நாமே, சட்டப்புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால், வழக்காடி தானே வழக்கினை நடத்துகையில் தீர்ப்பில் அவற்றை குறிப்பிட்டாக வேண்டும். (Order 20 Rule 5A CPC)

சட்டமும், குடிமகன்கள் அனைவரும் சட்டத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்றே கருதுகிறது. சட்டம் இவ்வாறு கூறுகிறது என்பது எனக்குத் தெரியாது என்று வாதிட்டு யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது.

சுப்பிரமணிய சுவாமி, கே.எம்.விசயன் ஆகியோர் தங்களது வழக்குகளை தாங்களே நடத்திய சில முக்கியமானவர்கள்.

ஆனால், எதற்கு பேராணை மனு (Writ), எதற்கு உரிமையியல் வழக்கு (Civil Suit), எதற்கு மனு (Original Petition), எதற்கு நுகர்வோர் மனு (Consumer Complaint) என்ற விடயங்களை மெத்தப் படித்தவர்களே அறிந்து கொள்ள நேரம் செலவழிக்க விரும்பாத நமது நாட்டில், சாதாரண பொது மக்கள் தங்களது வழக்கினை தாங்களே நடத்தினார்கள் என்ற பத்திரிக்கைச் செய்திகளில், விக்கிரமாதித்யன் கதைகளை விட சற்று அதிக அளவில் உண்மையிருக்கலாம், அவ்வளவுதான்.

-oOo-

சட்ட சம்பந்தமான விடயங்களில் தாங்கள் ஆர்வமுடையவராக இருப்பின் கீழ்கண்ட சரியா, தவறா என்பதை யூகிக்கவும். பின்னர் ஒரு வழக்குரைஞரை தொடர்பு கொண்டு தங்களது சட்ட அறிவினை சரி பார்த்துக் கொள்ளலாம். எனது மற்ற பதிவுகளிலும், பதில்கள் இருக்கலாம்.

(எச்சரிக்கை: advocacy is an art of impossibility என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன் நான். எனவே சரியா, தவறா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை)

(1) உங்களது வீட்டினை 3 வருடங்கள் கழித்து கண்டிப்பாக காலி செய்து தர வேண்டுமென்று ஒப்பந்தம் கையெழுத்திட்டு, வாடகைக்கு விடுகிறீர்கள். 3 வருடம் கழித்து வாடகைதாரர் ஒப்பந்தப்படி காலி செய்தாக வேண்டும்.

(2) உங்களது வங்கிக் கணக்கில் (Bank Deposit) தங்களது மனைவி பெயரை மட்டும் நாமினி (nominee) என காட்டியுள்ளீர்கள். உங்களது மரணத்துக்குப் பின்னர் உங்களது மகனுக்கும் உங்களது மனைவியோடு இந்து மத சட்டப்படி வாரிசுதாரர் என்ற வகையில் டிபாசிட் பணத்தில் உரிமை உண்டு.

(3) அதுவே காப்பீட்டு தொகைக்காக கொடுக்கப்படும் நாமினியாக இருந்தாலும் அதே உரிமை உண்டு

(4) உங்களது நிறுவனம், 3 வருடங்களுக்குள் வேலையை விட்டு செல்வதாயிருந்தால், 1 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்ற உறுதியினை பெற்று உங்களை வேலைக்கு அமர்த்துகிறது. அதற்கு ஆதரவாக (security) உங்களது சான்றிதழ்களை நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளீர்கள். ஒரு வருட காலத்தில் வேலையை ராசினாமா செய்து சான்றிதழ்களை பெற வேண்டுமென்றால் 1லட்சம் செலுத்தினால்தான் சான்றிதழ்கள் கிடைக்கும்.

(5) உயில் பத்திரத்தில் முத்திரைக் கட்டணம் (stamp duty) செலுத்த தேவையில்லை.

(6) உங்கள் நண்பருக்கு கடன் உறுதிச் சீட்டு (promissory note) மூலம் கடன் கொடுத்துள்ளீர்கள். மூன்று வருடம் காலம் முடியும் முன், கடனை திருப்பிச் செலுத்த மேலும் ஒரு வருட காலம் அவகாசம் வேண்டுகிறார். நீங்கள் கொடுக்க நினைத்தாலும், மற்றொரு நண்பர் 3 வருட காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் அவ்வளவுதான் என்கிறார்.

மேற்கண்ட விடயங்களில் தங்களது புரிதல்களையும், இந்த விடயம் சார்ந்த பிரச்னைகள் எழும் பொழுது, ஒரு வழக்குரைஞரின் ஆலோசனை பெறாமல் தங்களால் செயல்பட முடியுமா என்பதையும் சற்று சிந்தியுங்கள். பின்னர் உங்களுடைய இடத்தில் ஒரு சாமான்ய குடிமகனை வைத்து பாருங்கள்.

-oOo-

இந்துவில் நான் மேலே குறிப்பிட்ட கடிதத்தினை எழுதிய வாசகர், சம்பந்தப்பட்ட வழக்காடிகள் plead செய்ததாக குறிப்பிடுகிறார். ப்ளீடு என்ற வார்த்தையினை உரிமையியல் சட்டப்படி எழுத்து பூர்வமாக முதலில் தாக்கல் செய்யப்படும் வழக்கினை குறிக்கவே பயன்படுத்துவோம். பொதுவாக, நீதிமன்ற புறக்கணிப்பு நடைபெறும் பொழுது ‘ப்ளீடிங்’ முதலியவற்றை வழக்குரைஞர்களே பார்த்துக் கொள்வார்கள். வழக்கினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அலுவலகத்தில் அதன் ஆய்வினை (scrutiny) முடித்து அதற்கு எண் வாங்கி நீதிமன்றம் முன்பும் கொண்டு வருவார்கள். பின்னர் வழக்காடியை உள்ளே அனுப்பி, வழக்கினை விசாரணைக்கு அனுமதிக்க (admit) வேண்டி இடைக்கால தடை உத்தரவும் (interim injunction, stay, direction etc.,) கோர வைப்பார்கள். அவ்வளவுதான்.

மற்றபடி வழக்காடிகளை இறுதி விசாரணைக்கு எல்லாம் அனுப்புவதில்லை.

வழக்குரைஞர்களின் போராட்டம் என்பது, நீதிமன்ற புறக்கணிப்புதான். வேலை நிறுத்தமல்ல. இதனால்தான், வழக்குரைஞர்கள் தங்களுடைய போராட்டத்தினை நாட்கணக்கில் தாங்க (sustain) முடிகிறது.

தொழிலாளர் போராட்டத்திற்கும், வழக்குரைஞர்களின் போராட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இது புரியாமல், இந்து வாசகர்கள் அனைத்து வகைகளிலும் ஆதங்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக கடிதம் எழுதித் தள்ளி விட்டார்கள்.

-oOo-

மேற்கண்ட கடிதம் எழுதிய ரெக்சு அருள் (Rex Arul) அமெரிக்காவில் பொறியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தமிழார்வம் மிக்கவர். திருக்குறளில் மரண தண்டனை பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி வாசித்துள்ளார். என்னை பெயர் சொல்லி அழைக்க தயங்கி uncle என்று கூப்பிடுவார். உறவில் எனக்கு சகலை :-)

மதுரை
20.03.09

22 comments:

புருனோ Bruno said...

//(1) உங்களது வீட்டினை 3 வருடங்கள் கழித்து கண்டிப்பாக காலி செய்து தர வேண்டுமென்று ஒப்பந்தம் கையெழுத்திட்டு, வாடகைக்கு விடுகிறீர்கள். 3 வருடம் கழித்து வாடகைதாரர் ஒப்பந்தப்படி காலி செய்தாக வேண்டும்.//
சரி

//(2) உங்களது வங்கிக் கணக்கில் (Bank Deposit) தங்களது மனைவி பெயரை மட்டும் நாமினி (nominee) என காட்டியுள்ளீர்கள். உங்களது மரணத்துக்குப் பின்னர் உங்களது மகனுக்கும் உங்களது மனைவியோடு இந்து மத சட்டப்படி வாரிசுதாரர் என்ற வகையில் டிபாசிட் பணத்தில் உரிமை உண்டு.//
இல்லை

//(3) அதுவே காப்பீட்டு தொகைக்காக கொடுக்கப்படும் நாமினியாக இருந்தாலும் அதே உரிமை உண்டு//
உண்டு

//(4) உங்களது நிறுவனம், 3 வருடங்களுக்குள் வேலையை விட்டு செல்வதாயிருந்தால், 1 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்ற உறுதியினை பெற்று உங்களை வேலைக்கு அமர்த்துகிறது. அதற்கு ஆதரவாக (security) உங்களது சான்றிதழ்களை நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளீர்கள். ஒரு வருட காலத்தில் வேலையை ராசினாமா செய்து சான்றிதழ்களை பெற வேண்டுமென்றால் 1லட்சம் செலுத்தினால்தான் சான்றிதழ்கள் கிடைக்கும்.//
இல்லை. சான்றிதழ்களை ”hold back" செய்ய முடியாது

//(5) உயில் பத்திரத்தில் முத்திரைக் கட்டணம் (stamp duty) செலுத்த தேவையில்லை.//
சரி. தேவையில்லை

//(6) உங்கள் நண்பருக்கு கடன் உறுதிச் சீட்டு (promissory note) மூலம் கடன் கொடுத்துள்ளீர்கள். மூன்று வருடம் காலம் முடியும் முன், கடனை திருப்பிச் செலுத்த மேலும் ஒரு வருட காலம் அவகாசம் வேண்டுகிறார். நீங்கள் கொடுக்க நினைத்தாலும், மற்றொரு நண்பர் 3 வருட காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் அவ்வளவுதான் என்கிறார்.//
புதிதாக பிராமிஸரி நோட் எழுதி வாங்க வேண்டியது தான்

புருனோ Bruno said...

//வழக்குரைஞர்களின் போராட்டம் என்பது, நீதிமன்ற புறக்கணிப்புதான். வேலை நிறுத்தமல்ல. இதனால்தான், வழக்குரைஞர்கள் தங்களுடைய போராட்டத்தினை நாட்கணக்கில் தாங்க (sustain) முடிகிறது.//

நல்ல கருத்து. இப்பொழுது தான் புரிகிறது

PRABHU RAJADURAI said...

டாக்டர்
அது என்ன நல்ல கருத்து. மற்றவர்கள் பல்லைக் கடிக்கிறார்கள்:-)

ஆயினும், நீங்கள் ஒரு நல்ல வழக்குரைஞரை பார்ப்பது நல்லது. self medication is dangerous, as for as you are concerned :-)

Unknown said...

அவர்களின் நீதிமன்ற புறக்கணிபிற்கும்...வேலை நிருத்தர்த்திர்க்கும் என்ன வேறுபாடு ???????உச்சநீதிமன்ற ஆணையையே இவர்கள் மதிக்கவில்லைஎன்றால் இவர்கள் யாருக்கு கட்டுப்பட்டவர்கள்???????

Anonymous said...

ஒரு round shooting order கொடுத்திருக்கலாம், அப்புறம் ரெண்டு பேர பணி இடமாற்றம் செய்துவிட்டால் போச்சு. ஆரம்பித்த சில ரவுடிகளுக்கு பயம் வந்திருக்கும்.. அது என்ன நீதிமன்றத்துக்குள், பாடசாலைகளுக்குள், வழிபாட்டுத்தலங்களூக்குள் போலிஷ் கூடாதுன்னு அங்க மட்டும் புனிதம், தற்போதெல்லாம் தெய்வங்களா விசாரிச்சு தீர்ப்பு சொல்லிகிட்டிருக்கு, இல்ல, கோவிலுக்கு செல்கிற/இருக்கிற எல்லோரும் தர்மத்துக்கு பயந்தவர்களா ? இல்ல, மடம்ன்னா தப்பு நடக்காதான்னு கமல் மாதிரி கேட்கவேண்டியதுதான்,,, ஏதோ, எங்க ஊர்பஞ்சாயத்துக்கு மேல என்ன வேணும் போலிஷ் வேண்டியதில்லன்னு ஆதிகால மனிதன் மாதிரி பேசினால், நாளைக்கு ஒரு வாதத்திற்கு தீவிரவாதிகள் ஒரு நீதிமன்றத்தினை பணயமாக பிடித்தால் கூட துப்பாக்கிசூடு கூடாதென்று நன்றாக வக்காலத்து வாங்குவீர்களா என்ன ?..முட்டையடிக்கிறதுதான் எதிர்ப்பு தெரிவிப்பதற்க்கு எளிதான வழியாயிருக்கும் போது, ரவுடிகளை அடி வெளுக்குறதுதான் அடுத்தவர்களுக்கும் எளிதானது.. எந்த வழியில் எதிர்பென்பதென்பது மட்டும்தான் எதிர்ப்பவர்கள் முடிவு, அதை எப்படி கையாளவேண்டு/அடக்கவேண்டுமென்று அவர்களே முடிவெடுக்க முடியாது ..எளிதான வழி எல்லோருக்கும்..தடியடியா கண்ணிர்புகையாவென்று வானரங்களே முடிவுசெய்ய கூடாது..அப்புறம் சும்மா போலிஷ் வந்து பேச்சுவார்த்தை நடத்திட்டு ஜூஷ் கொடுத்துவிட்டு விட்டுவிடும், சும்மா போய் நானும் வக்கீல்தானென்று காட்டிவிட்டு வாரேன்று வீட்டில் சொல்லிட்டுவருகிற மாதிரி ஆகிவிடும்..

Anonymous said...

வானரங்களை அடக்குவதற்கு, பயிற்சிபெற்ற வானரங்கள் - என்றுதான் எழுத நினைத்தேன்..விட்டுபோய் விட்டது..

புருனோ Bruno said...

//அது என்ன நல்ல கருத்து. மற்றவர்கள் பல்லைக் கடிக்கிறார்கள்:-)//

”வேலை நிறுத்தம் அல்ல. நீதிமன்ற புறக்கணிப்பு மட்டும் தான்” என்பதும் இரண்டு விஷயங்களும் ஒன்றல்ல என்பதும் நீங்கள் கூறியவுடன் சட்டென்று புரிந்து விட்டது

புருனோ Bruno said...

//ஆயினும், நீங்கள் ஒரு நல்ல வழக்குரைஞரை பார்ப்பது நல்லது. self medication is dangerous, as for as you are concerned :-)//
ஹி ஹி

இது குவிஜு (க்விஸ்) என்று நினைத்தே பதிலளித்தேன் :) :)

என்னை பொருத்த வரையில் எனக்கு பரிச்சயம் இல்லாத எந்த ஒரு professional வேலையையும் நான் செய்வதில்லை !! அந்தந்த professionalகளிடமே விட்டு விட்டு அவர்கள் கூறுவதை அப்படியே கேட்டுக்கொள்வது, அதை அப்படியே கடைபிடிப்பது என்று மட்டும் நடப்பேன் .

PRABHU RAJADURAI said...

Dear Friend,

You have a right to express your indignation at the behavior of the Advocates, either in throwing eggs or pelting stones. However, your views will be appreciated if you show more restraint in selecting your words. Similar to the case of the Advocates, others only see your anger, overlooking what you want to convey. I hope you will understand.

A friendly smile will always help, particularly here.

Anonymous said...

Dear Prabhu
I do not want to be polite in certain situation preciously where action is indispensable !!
Thanks

Anonymous said...

To appear as party in person good home work and the capacity to answer questions is a must. S.Swamy appears and argues in many cases where he is a party, as a party in person. He has support of lawyers to give back up support and his wife practises in supreme court. In USA websites of courts are very informative and user friendly. I dont want to say much
about the conduct of lawyers during the recent strike, as by now, the whole world knows about it.

Anonymous said...

The series of posts about Mr. Subramanyan Swami seems to be missing from your blog. Are you planning to publish it in some other media? Just curious.

Boston Bala said...

சு சாமி பதிவுகள் என்னாச்சு!?

PRABHU RAJADURAI said...

I am advised against starting such a campaign against an individual, particularly against a personality of such a stature!

I did that as an experimental project, when I had leisure time during our recent boycott and I am satisfied with the outcome. However certain persons here are interested in distributing the same in printed form. I have no hand in such an effort. The digital format is for private circulation on request...

Anonymous said...

Prabhu Sir, - Again nice article... I am interested in reading your article(s) on S Swamy. Would you please send it?

PRABHU RAJADURAI said...

My Mail ID is prabhuadvocate@gmail.com

PRABHU RAJADURAI said...

My opinions on the issues raised in this blog:
(1) The rights of a tenant are protected by the statute. Hence, a tenant can be evicted only on those grounds, provided under law. Expiry of the term provided in the tenancy agreement is not a ground.

(2) Nominee can act only as a trustee of the money, left by the deceased. He is expected to distribute the money to the legal heirs of the deceased. The legal heirs of a deceased can be prevented to inherit the estate of the deceased only by a validly executed will. If a nominee fails to pass on the money to a legal heir, he can be prosecuted.

(3) The law is same in the case of insurance as well. By delivering the money to the nominee, the banks as well as the insurers can avoid the head ache of finding out the real legal heir.

(4) Certificates are personal documents. Retaining such documents will be an infringement of the fundamental right to life.

(5) Will need not be stamped. Will can be executed in any blank paper.

(6) The period of limitation to sue for money on a promissory note can be extended beyond 3 years, if a written acknowledgment of debt taken within the period of 3 years. From the date of such acknowledgment the time will be extended by another 3 years. Normally, an acknowledgment would be taken in the back side. Even part payment of the debt through a cheque can be an acknowledgment.

Dr.Bruno scored 3.5 out of 5...pass:-)

Unknown said...

யூகிக்க சொன்னதுன்னால, கையை 'அடங்கு'ன்னு சொன்னாலும் கேட்காமல், இதோ என் யூகங்கள்.
1. தவறு
2. சரி
3. தவறு
4. சரி ?இதைப் பற்றி வழக்குகள் நிலுவையில் இருந்த போது படித்த நினைவு. என்ன ஆயிற்று என்று ஞாபகம் இல்லை.
5. தவறு
6. புதிய ப்ராமிஸரி நோட்டு வேண்டும்?

Unknown said...

//பொதுவாக, நீதிமன்ற புறக்கணிப்பு நடைபெறும் பொழுது//.....//இடைக்கால தடை உத்தரவும் (interim injunction, stay, direction etc.,) கோர வைப்பார்கள். //இதை மற்ற வாழ்வியல் அடிப்படைத்தொழில்களில் (Professions that are basic necessity - மருத்துவர்களோ, குப்பை கூட்டுபவர்களோ!) செய்தால் விளைவுகள் நேரடியாய்த் தெரியும். அது தான் வித்தியாசம்.

மற்றபடி, வழக்காடிகள் பற்றிய விவரங்களைத் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

புருனோ Bruno said...

//Dr.Bruno scored 3.5 out of 5...pass:-)//

நான் பாஸ் ... ஹையா... ஜாலி...

//(4) Certificates are personal documents. Retaining such documents will be an infringement of the fundamental right to life.
//

இது தொடர்பான ஒரு தீர்ப்பு பற்றிய பத்திரிகை செய்தி

Educational institutions cannot hold back certificates: Madras High Court

Rex Arul said...

Great post, Prabhu Uncle, as always. I stomped on this posting serendipitously. While I liked your observations, I will have to respectfully disagree with a few observations you had made :-)

My letter in The Hindu was this: http://www.hindu.com/2009/03/19/stories/2009031955420802.htm

Due to space-constraints, editors edit our letters and at times the implication thereof may be different than what was originally indited by the author. I was not saying that "pro se" rights did not exist in India. I was merely pointing that it was not a common practice known to the common-man unlike the US.

You are right in pointing Dr. Subramanian Swamy and KM Vijayan. Although an Economist, Dr. Swamy was a former Law Minister and a Visiting Professor at Harvard University and Mr. Vijayan is a lawyer. So, they hardly represent the common-man :-) and there is nothing special about them appearing "pro se." How many காத்தமுத்துs and ரங்காத்தாள்s have argued their cases "pro se" before the courts in India? Hardly any. That's why it was newsworthy in 2004 and it was in 2009 at the height of the lawyers' standoff.

Personally, I have a great respect (thanks to my Dad, who revers law only next to his faith) for Law, including the Indian and US legal systems, although I personally feel that the legal fraternity in India has not educated the populace about "pro se" rights just to keep its job secure. No offense as there are many good lawyers, who do "pro bono" work too. However, unlike the US, not many organizations do "pro bono" work in India to educate common-man about his legal rights. That's an affront to a democracy like India. Let's just face it. In fact, only servility dominates the attorney-client relationship in India. At least that has always been my experience -- having walked around the courts in Coimbatore and having sued the Government of Tamil Nadu at the Madras High Court in 1992 (I authored the entire affidavit on the Writ of Mandamus that my lawyer commented to my Dad in my absence that it will be better for him to put his son into a law-college than an Engineering college.)

Also, when the term "plead" was used in the letter, it was used "literally"; not to connote any legalese. For example, a word "reaction" literally can just mean that, but when viewed by a Nuclear Engineer or Scientist can mean much more about "fusion" or "fission" and so I was certainly not implying any legalese :-) Again, you will agree with me that a letter to the editor is a simple way of communicating to and through the masses. It's not a judicial forum.

I agree with the observation that "pro se" cannot supplant the need for lawyers, just the same way as home-medicine cannot cure all maladies. We all need excellent lawyers and their edifying expertise. In fact that is the bedrock of any judicial system. It's worth recollecting Arignar Annadurai, Former Chief Minister of Tamil Nadu -- சட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் தான் விளக்கு.

The common-man -- including numerous readers of "The Hindu," including Yours Truly -- was so disgusted with the behavior of the protesting lawyers that they decided to take on them through the Press.

And for the record, no lawyer here in the US indulges in the despicable behavior of certain lawyers as we saw in the august premises of the Madras High Court. And it is not even just an isolated incident. Judges at the Egmore Court were beaten and roughed up and this kind of uncouth behavior happens very often at many lower-level courts.

There are quite a number of things that the Indian legal fraternity can learn from its counterpart in the US. Civility and Ethics are two great things that we need to emulate and having been exposed to the lawyers and the legal system here in the US, I can say with confidence that we have lots to learn. After all, our legal system owes in part to the Canadian, British Westminster, and the US legal systems.

ரங்குடு said...

அமெரிக்காவில் மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்டிரேட்டுகள், போலீஸ் அதிகாரிகள் எல்லோரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அவர்கள் அப்படித் தேர்ந்தெடுக்கப்படுவதால் அரசாங்கத்தின் / அமைச்சர்களின் கைப்பாவைகளாய்ச் செயல் பட வேண்டிய அவசியம் இல்லை.

அவர்கள் தம்பதவிக் காலத்தில் நல்ல பெயர் எடுத்தால் தான் அடுத்த முறை பதவியில் இருக்க வாய்ப்பு உண்டு.

மேலும் அமெரிக்காவின் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு மேயர் உண்டு. அவரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.