6.4.10

மதன், நீங்களுமா?
ஆனந்த விகடன் வார இதழில் ‘ஹாய் மதன்என்ற தலைப்பில் கார்டூனிஸ்ட்டும் வரலாற்று எழுத்தாளருமான மதன் வாசகர் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். பல வருடங்களுக்கு முன்னர் ஜூனியர் விகடனில், எழுத்தாளர் சுஜாதா ஏன்? எதற்கு? எப்படி? எனறு பதிலளித்து வந்த அதே முறையில்தான் இந்த தொடரும் அமைந்துள்ளது.

இந்த வார இதழில், என்ன கேள்வி என்று தெரியவில்லை. ஆனால் ஒரு கேள்விக்கான பதிலில் நிலவுக்கு முதன் முதலில் மனிதர்கள் சென்ற பொழுது ஆல்ட்ரின்தான் முதலில் நிலவில் காலடி வைப்பதாக இருந்ததாகவும், அதனை ஆம்ஸ்டிராங் படம் பிடிப்பது என்றும் ஏற்ப்பாடாகியிருந்தது என்றும் ஆனால் ஆல்ட்ரின் நிலவில் மெத்தென்று இருந்து புழுதியில் கால் வைக்க தயங்கியதால் ஆம்ஸ்டிராங் முதலில் இறங்கியதாகவும், பின்னர் வாழ்நாள் முழுவதும் ‘தவற விட்ட வாய்ப்புக்காக வருந்திஆல்ட்ரின் மதுவுக்கு அடிமையாகிப் போனதாகவும் எழுதியிருக்கிறார்.


(பேருந்தில் செல்கையில் கையில் கிடைத்த விகடனில் ஹாய் மதனில் படித்தது என்று நினைக்கிறேன். தவறு என்றால் திருத்திக் கொள்கிறேன்)

அப்பல்லோ 11 நிலவுப் பயணம் குறித்து அநேக தகவல்கள் உள்ளது. அல்ட்ரின் எழுதிய புத்தகமும் உள்ளது. இப்படி ஒரு தகவலை நான் படித்ததில்லை.

பொதுவாக இவ்வாறான பயணங்களில், அறியாத பிரதேசங்களில் பயணக் கலத்தின் தலைவர் முதலில் கால் வைப்பது மரபு இல்லை. எனவே ஆல்ட்ரின் முதலில் கால் வைக்கலாமா என்று விவாதிக்கப்பட்டது. ஆயினும், மனிதகுல வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கப் போகும் ஒரு நிகழ்வின் பெருமையினை தலைவருக்கு தர வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டு மரபை மீறி ஆம்ஸ்டிராங்கிற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

இத்தகைய முடிவுகள் விண்கலம் இங்கிருந்து கிளம்பும் முன்பே எடுக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு நொடியும் திட்டமிடப்படாமல், இவ்விதமான பயணங்கள் மேற்கொள்ளப்படாது.

ஆல்ட்ரின் குடிப்பழக்கத்துக்கு ஆளானது உண்மை. ஆனால் நழுவ விட்ட வாய்ப்புக்காக என்பது தவறு.

அடுத்தது, நிலவில் ஆம்ஸ்டிராங் இருப்பது போல படமே எடுக்கப்படவில்லை என்று கூறியிருப்பதும் தவறு. சில படங்களே எடுக்கப்பட்டது என்பதுதான் சரியான் தகவலாய் இருக்கக் கூடும்.

***இதே இதழில், எப்படி நேருவின் மகள் இந்திரா காந்தியானார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இந்திராவின் கணவரான பெரோஸ் காந்திக்கும் குஜாராத் ‘காந்திக்கும் சம்பந்தமில்லை என்பதையும் விளக்கியிருந்தால் வாசகர்கள் மேலும் தெளிவு அடைந்திருப்பார்கள்.

ஞாநி, சாரு நிவேதிதாவைத் தொடர்ந்து மதனும் இவ்வாறு தகுந்த ஆய்வின்றி ஒரு சம்பவத்தினை எழுத முற்ப்படுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

தனது தவறினை ஏற்றுக் கொண்டு வாசகர்களுக்க்கு நிலவுப் பயணம் குறித்து சரியான தகவல்களைத் தர வேண்டிய பொறுப்பு மதனுக்கு உள்ளது. பார்க்கலாம்...

மதுரை
060410

10 comments:

Prabhu Rajadurai said...

ஆல்ட்ரின் நிலவில் கால் வைத்த முதல் மனிதர் என்ற வாய்ப்பினை இழந்தாலும், நிலவில் சிறுநீர் கழித்த முதல் மனிதர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளாராம்...:-)

http://www.thaindian.com/newsportal/health/buzz-aldrin-was-first-man-to-pee-on-the-moon_100219104.html

sriram said...

அன்பின் பிரபு ராஜதுரை,
நான் ஆம்ஸ்ட்ராங்க் மேட்டரை கவனிக்கவில்லை (கவனித்திருந்தாலும் எனக்கு அது பத்தி ஒண்ணும் தெரியாது)

ஆனால், Surname பத்தின பதிலைப் படிச்சபோது இதே எண்ணம் எனக்கும் தோன்றியது. (இந்த விசயத்தைக் கூட சொல்லத் தெரியலயேன்னு)

எனக்கு மதனைப் பிடிக்கும், அவர் பதில்களைத் தொடர்ந்து படிக்கிறேன், சில நேரங்களில் அவர் நுனிப்புல் மேய்வதைக் கண்டிருக்கிறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

கல்வெட்டு said...

.

//ஆனந்த விகடன் வார இதழில் ‘ஹாய் மதன்’ என்ற தலைப்பில் கார்டூனிஸ்ட்டும் வரலாற்று எழுத்தாளருமான மதன் வாசகர்//

பிரபு இராஜதுரை,
தயவு செய்து மதனை வரலாற்று எழுத்தாளர் என்று சொல்லி உண்மையான வரலாற்று எழுத்தாளர்களை அசிங்கப்படுத்த வேண்டாம். :-)))

மதன் என்னளவில் அவர் ஒரு ஓவியர் மட்டுமே. கார்டூனிஸ்ட்கூட கிடையாது. தமிழில் கார்டூனிஸ்ட் என்றால் மதியைச் சொல்லலாம். இந்திய அளவில் ஆர்.கே லட்சுமன்.

கார்ட்டூனிஸ்ட்:
கார்ட்டூனிஸ்ட்களுக்கு என்று ஒரு அரசியல் / சமூகப்பார்வை உள்ளவர்கள். அதன் வழியாகக் காணும் காட்சிகளை சித்திரமாக வரைபவர்கள். மதனுக்கு அப்படி ஒன்றும் கிடையாது.

வரலாறு:
மதன் அவருக்கு கிடைத்த ஓவிய வெளிச்சத்தில் கேள்வி பதில் பிறகு வந்தார்கள் தின்றார்கள் என்று ஒரு தொகுப்பு என்று ஜல்லி அடித்தவர்.

தமிழர்களுக்கு வரலாறு இல்லை என்று உளறி வாங்கிக்கட்டிக் கொண்டவர்.

ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் ..
http://www.varalaaru.com/Default.asp?articleid=482

மதன் ஏற்கனவே இங்கு அடிபட்டு இருக்கிறார். உங்களது பதிவையும் சேர்த்து அவரின் முட்டாள்தனத்திற்கு மூன்று :-))

ஆ.வி மதனின் சறுக்கல் : அறிவுக்கெட்டத்தனமான அறிவுக்கு விளக்கம்
http://tbcd-tbcd.blogspot.com/2007/12/blog-post_28.html

ஆய் மதனின் உளறல்கள்....அடவுலே இருக்க விட மாட்டாய்ங்க போலிருக்கே !!
http://tbcd-tbcd.blogspot.com/2009/03/blog-post_08.html

**

பாராவையும் நீங்கள் வரலாற்று எழுத்தாளர் என்று சொல்லிவிடுவீர்களோ என்று பயமாக உள்ளது. :-)))

'பாஸ்போர்ட்' மருதன் வெளியிடாத பின்னூட்டம்
http://etamil.blogspot.com/2009/01/blog-post.html

.

தங்கவேல் said...

//ஞாநி, சாரு நிவேதிதாவைத் தொடர்ந்து வரலாற்று எழுத்தாளராக அறியப்பட்ட மதனும் இவ்வாறு தகுந்த ஆய்வின்றி ஒரு சம்பவத்தினை எழுத முற்ப்படுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.//

பிரபு சார், வாக்கியத்தைச் சற்று மாற்றி அமையுங்கள். படிக்கையில் சட்டென்று சாருவும், ஞானியும் வரலாற்று ஆசியர்கள் என்ற பொருள்படும்படி மயக்கம் தருகிறது.

துளசி கோபால் said...

என்னையும் 'வரலாற்று எழுத்தாளர்' லிஸ்டில் சேர்த்துருங்க ப்ளீஸ்:-))))

www.bogy.in said...
This comment has been removed by a blog administrator.
chandru said...

sir,
you are realy great.
regards,
chandran-tirunelveli

யாத்ரீகன் said...

http://thatstamil.oneindia.in/news/2010/06/07/bhopal-gas-tragedy-judgement-keshub-mahindra.html awaiting on a post from you sir

http://twitter.com/yathirigan/status/15680011897

Prabhu Rajadurai said...

Yathrigan,

Thank you...I am out in touch with net. Well, I shall try this weekend after reading the subject. My blog on Bhopal disaster is at http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_31.html

சென்ஷி said...

கல்வெட்டு,

உங்க பின்னூட்டங்களை அப்படியே எங்கயாச்சும் தொகுத்து வைக்கலாமே.. சில நேரங்கள்ல எதையாச்சும் தேடுறப்ப நீங்கதான் சரியா வசதிப்படுறீங்க :)))

(இப்ப நீங்க கொடுத்த இணைப்புகளை முன்பே படிச்சிருக்கேன். ஆனாலும் உங்க டைமிங். ரொம்பப் பிடிச்சிருக்குது)