26.9.09

யாருமற்ற ஒருவனும், மோடியும்!

சோம்பேறித்தனம் கெட்ட குணம்தான். ஆனால் ஒரு நன்மை இருக்கிறது. திரையரங்குகளுக்கு செல்லாமல் இருப்பது. ஆக, ‘உன்னைப் போல ஒருவ’னையும் பார்க்கவில்லை.

முன்பெல்லாம் திரைப்படம் பார்க்காவிட்டாலும், தொலைக்காட்சிகளில் துண்டு துண்டாக பார்த்து மனதில் கதையை ஒட்டிக் கொள்ளமுடியும். தற்பொழுது அந்த வசதியும் இல்லை. ஆனாலும், ‘உன்னைப் போல ஒருவ’னைப் பொருத்தவரை வலைப்பதிவுகளில் எழுதிக் குவிப்பவற்றைப் படித்து படித்து, ஏதோ படம் பார்த்தது போலவே இருக்கிறது.

கமல்ஹாசனின் ஆழ்மனதில் இருப்பதை பிய்த்துப் பிடிங்கி வெளியே எடுத்து, ‘பார், இந்துத்வா’ என்று ஒரு பக்கமும், ‘இல்லை, இல்லை முற்போக்குத்தனம்’ என்று இன்னொரு பக்கமுமாக நின்று பதிவர்கள் விவாதித்து வருவது என்னைப் போல வாசகர்களின் மனதை பெண்டுலம் போல இங்கேயும் அங்கேயும் அல்லாட வைக்கிறது!

‘இந்துத்வாவும் இல்லை, முற்போக்குத்தனமும் இல்லை. கமல் ஒரு வியாபாரி. அவருக்கென்று பெரிய கருத்து எல்லாம் அவரிடம் இல்லை. அவ்வப் பொழுது சந்தையில் எந்தக் கருத்து விலை போகுமோ, அதை வைத்து படமெடுப்பது அவரது தந்திரம்’ என்றும் சிலர்.

கலப்பு மணத்தை ஆதரிக்கும் எவரும், வகுப்புவாதியாக இருக்க முடியாது என்று நான் கருதுவதாலும், கமல் ஹாசன் என்றுமே ஒரு கருத்தினை தெளிவாக வெளிப்படுத்தியது இல்லை என்பதாலும்...நான் ‘வியாபாரி’ வகுப்பில் சேர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கமல் திரைப்படங்களை வைத்து, பெரிதாக சொத்து சேர்க்க நினைக்கவில்லை என்றால், ஒரு வியாபாரி தனது வெற்றியை வெறுமே தான் பெறும் பண லாபத்தை வைத்து மட்டுமே கணக்கிடுவதில்லை என்பதுதான் என்னுடைய பதில்.

‘கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்...’ என கமல் எப்பொழுதெல்லாம் வேறு மொழித் திரைப்படமோ அல்லது காட்சியோ அவரை பாதிக்குமோ, உடனே அதனை தமிழில் எடுக்க முயலுவார். அப்படியே ‘வெட்னஸ்டே’ படக் கருத்தால் அல்ல, படத்தால் பாதிக்கப்பட்டே உபோஒ தயாரித்துள்ளார் என்று, பாவம் ஒரு பெனிபிட் ஆப் டவுட் கொடுத்து விடலாமே!

-oOo-

‘காமன் மேன்’ என்ற பொதுப்புத்திக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றும் அதற்கு வெடிகுண்டு வைத்த பயங்கரவாதம்தான் தெரியும் என்றும் அதற்கு முன் நடந்த பயங்கரவாதங்கள் தெரியாது என்றும் வாதிடுபவர்கள் கூறுவதைத்தானே, திரைக்கதையிலும் சொல்லப்படுகிறது. நடைமுறையில் என்ன இருக்கிறதோ, அதை மாற்றாமல் கமல் எடுத்திருக்கிறாரே!

-oOo-

தீவிரவாதிகளாக, இஸ்லாமியர்களை காட்டியுள்ளாராம். குண்டு வைத்த குற்றத்திற்காக, இஸ்லாமியர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டதே இல்லையா? இல்லாத ஒன்றை  படமெடுக்கவில்லையே. நிசத்தை பிரதிபலிப்பதுதானே திரைப்படமும்.

ஆனால் இந்த வாதத்திற்கு எதிராக ‘இஸ்லாமியர்கள் எல்லாம் தீவிரவாதிகள் இல்லை. ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்கள்’ என்று ஒரு சந்திராயன் கண்டுபிடிப்பு எடுத்து வைக்கப்படுவதுதான் விந்தை!அரசிடமும், நிலுவையிலுள்ள சட்ட அமைப்புகளிலும் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று (தவறாக) நினைப்பவர்களால்தான், மற்றவர்களின் கவனத்தை கவர பயங்கரவாதம் முன்னெடுக்கப்படுகிறது.

‘அந்நியனி’ல் இருந்து ‘உபோஒ’ வரை இதைத்தானே சொல்கிறார்கள். ஏன், கமலே ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வரும் பாடல் காட்சியில் ‘டுமீல் டுமீல்’ என்று சும்மா நிற்பவர்களைக் கூட போட்டுத் தள்ளுகிறாரே.

வேடிக்கை என்னவென்றால், காமன் மேனை, படத்தில் ஒரு இந்து என்று அந்தப்பக்கமும், இல்லை முஸ்லீம் என்று இந்தப்பக்கமும் வாதிடுகிறார்கள். ஆனால், மயிரினைப் பிளப்பது போல் ஆராய்ந்து, ‘...ம் காமன் மேன் குண்டு வைக்குமளவுக்கு துணிவதால்தான் அவரை முஸ்லீமாக காட்டியுள்ளார்கள்’ என்ற அளவிற்கு வாதம் வளரவில்லை!

எனவே படம் யதார்த்தத்தை பிரதிபலிப்பதுதான்...

-oOo-

அப்படியாயின், படத்தில் வரும் முஸ்லீம் தீவிரவாதிக்கு மூன்று மனைவிகளாமே? இங்கு இடிக்கிறது.

படத்திலுள்ள காமன் மேனுக்கு குண்டு வைப்பது மட்டுமே தீவிரவாதமாக தெரிந்தது யதார்த்தம். அவரது கேரக்டரை சிதைக்க கதாசிரியருக்கு உரிமை இல்லை. ஆனால் கதையில் வரும் ஒரு முஸ்லீம் பாத்திரத்திற்கு மூன்று மனைவியை உருவாக்குவது கதாசிரியர். ‘ஹம் பாஞ் அவுர் ஹமேன் பச்சீஸ்’ என்று குஜராத் முதல்வர் மோடியால் உருவாக்கப்பட்ட பொதுப்புத்தியால் கட்டமைக்கப்பட்டவர்தான் கதாசிரியர் என்று யாராவது வாதிட்டால்...என்னிடம் எதிர்வாதம் இல்லை.

வசனம் எழுதியவர் எனக்குத் தெரிந்தவரை அப்பழுக்கு இல்லாத மனிதாபிமானி. அவருக்குதான் முஸ்லீம் நண்பர்கள் நிறைய இங்கு உண்டே...கொஞ்சம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். எத்தனை முஸ்லீம்கள் இங்கு மூன்று, வேண்டாம் இரண்டு மனைவியாவது வைத்திருக்கிறார்கள் என்று.

எனக்குத் தெரிந்து இரண்டு மனைவிகள் கட்டியவர் எழுத்தாளர் பாலகுமாரன். ஆனால் அவர் இந்து. கலைஞர் இஸ்லாமியர் இல்லை.

கமல்?

அவர் யாருமற்றவர்

-oOo-

உபோஒனில் ஒரு நாளில் தீவிரவாதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கமல் கேட்டு அவர்கள் கமலிடம் ஒப்படைக்கப்படுவதாக கதை செல்கிறது என்று அனுமானிக்கிறேன்.

ஒரு நாளில் அது சாத்தியமில்லை. காந்தகாரில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த விமான பயணிகளை மீட்க இந்திய சிறையில் இருந்த தீவிரவாதிகள் நாம் விடுவிக்கவில்லை. ஏனெனில் இவ்வாறு விடுவிப்பதற்கு சட்டம் இடம் கொடுக்காது. அவர்களுக்காக மனு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் விடப்பட்டார்கள். எதையும் சட்டப்படி செய்ய வேண்டுமே!

பொதுவாக தீவிரவாதிகளோடு பேரம் பேசுவது ஒரு கலை. அந்தக் கலையின் வெற்றி தீவிரவாதிகளோடு பேசி எவ்வளவு நேரம் வாங்க முடியுமோ அவ்வளவு நேரம் வாங்குவதில் இருக்கிறது. காந்தகார் விமான நிலைய கடத்தலில் அவர்களோடு தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த உரையாடல்களை படித்திருக்கிறேன்.

மோகன்லால் சட்டச்சிக்கலை எல்லாம் கமல்ஹாசனிடம் எடுத்துச் சொன்னாரா என்பது தெரியவில்லை. அதற்காக படத்தை பார்க்கலாம் என நினைக்கிறேன். ஆனால் ரவி சிரீனிவாஸ் இங்கு அமைப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது புரியாமல் எடுக்கப்பட்ட படம் என்று வாரியிருப்பதிலிருந்து, ஏமாற்றம்தான் மிஞ்சும் என நினைக்கிறேன்.

மதுரை
26/09/09


பி.கு. ‘அவர் யார் என்ற கேள்விக்கு யாருமற்றவர் என்பதுதான் பதிலாக இருக்க முடியும்என்று யார் யாரைப் பற்றி குறிப்பிட்டார் என்ற கேள்விக்கு பதில் யாரிடமாவது உள்ளதா?

க்ளூ: ஈழத்தமிழர்களும் இந்த போட்டியில் பங்கு கொள்ளலாம். 

25 comments:

Dr.Sintok said...

//மனித வெடிகுண்டாக மாறி முதல் பயங்கரவாத செயலை செய்தது ஒரு இந்து!! //

இதுக்கு சுட்டி எங்கே??

பீர் | Peer said...

ஒரு அனுமானம்..
அது கமல் சொன்னதா? ஈழத்தமிழரை?

Anonymous said...

***
அப்படியாயின், படத்தில் வரும் முஸ்லீம் தீவிரவாதிக்கு மூன்று மனைவிகளாமே? இங்கு இடிக்கிறது.
***

படம் பாருங்க. தீவிரவாதிக்கு மூன்று மனைவி எல்லாம் இல்லை.

ஒரு மிகவும் stressful situation ல பேசப்படும் ஒரு வசனம். குரூர நகைச்சுவை.

நான்கு தீவிரவாதிகள். அதில் ஒருவன் தனக்கு நடந்ததை வைத்து நியாயம் சொல்லும் பொழுது மற்றுமொருவன் சொல்வது. "ஏண்டா அதான் இன்னும் ரெண்டு இருக்கு இல்லைன்னு"

கூறியது ஹிந்து தீவிரவாதி, நியாயம் கற்பிக்க முயன்று கொண்டிருந்தது முஸ்லிம் தீவிரவாதி. பல ஆங்கிலப் படங்களில் பேசப்படும் satire வகை வசனம். அந்த தீவிரவாதி பேசிய வசனம் பொதுப்புத்தியுடன், அனைத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்தை குறைசொல்லும் சமுதாய பிரதிபலிப்பே. அவ்வாறான வசனம் வரக்கூடாது என்று எல்லாம் சொல்லமுடியாது. அதே போன்று, அவ்வாறான வசனம் வந்தால் அந்த வசனத்தை எழுதியவருக்கு இஸ்லாம் சமூகத்தில் நண்பர்கள் இருக்கக்கூடாது என்று நினைப்பதும் தவறு.

ஒரு குரூர நகைச்சுவை. அதை எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளும் உரிமை பார்வையாளனுக்கு இருக்கிறது. full stop.

Sridhar Narayanan said...

:)) நல்ல பதிவு.

’யாருமற்றவர்’னு படித்தவுடன் ஒரு புன்னகை வந்தது. பின்னூட்டம் போட வேண்டும் என்று நினைத்தேன். கீழே நீங்களே கேள்வியும் கேட்டிருக்கிறீர்கள்.

//யார் யாரைப் பற்றி குறிப்பிட்டார் //

ஆண்டன் பாலசிங்கம் JK பற்றி என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். :)

எனக்குத் தோன்றியது ஆதி சங்கரர் குருவைத் தேடி போகும்போது கேட்கப்படும் கேள்வி ‘நீ யார்’ அதற்கு அவர் ‘யாருமற்றவன்’ என்று பத்து பாடல்களில் (ஆறு என்றும் சொல்வார்கள்) பதில் சொல்கிறார்.

நல்ல பதிவு! நன்றி!

கெக்கே பிக்குணி said...

பி.கு.வுக்கு மறுமொழி ('யார்' 'யார்' மறுமொழி கொடுத்தாங்கன்னு இன்னும் 'யாரு'ம் சொல்லவில்லை ஆதலால்): "அவர் யார் என்ற கேள்விக்கு யாருமற்றவர் என்பதுதான் பதிலாக இருக்க முடியும்" என்று ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பற்றி ஆன்டன் பாலசிங்கம் சொன்னது...?

கெக்கே பிக்குணி said...

// Dr.Sintok said...

//மனித வெடிகுண்டாக மாறி முதல் பயங்கரவாத செயலை செய்தது ஒரு இந்து!! //

இதுக்கு சுட்டி எங்கே??// வழிமொழிகிறேன். ஆதாரம் / சுட்டி எங்கே?

Prabhu Rajadurai said...

Why Link?

Athu oru thunbial nigalvu...

nagoreismail said...

‘‘அதான் மூணு பொண்டாட்டியில ஒண்ணுதானே போச்சு, மீதி ரெண்டு இருக்கில்ல’’ - என்று சொல்கிறான், என்ன சொல்ல வருகிறார்கள், மீதி ரெண்டு இருந்தால் தீவிரவாதியாகாதே ஒண்ணே ஒண்ணு இருந்தா மட்டும் தீவிரவாதியாவுண்டா?

சரி அவன் பொண்டாட்டிய கொன்னதுக்காக குண்டு வச்சான், நீ என்னா செய்றே, அவன் மார்க்கெட்ல குண்டு வச்சுடுவானோன்னு அவன் மேலேயே குண்டு வைக்கிறே, என்ன பெரிய வித்தியாசம்.

பதிலுக்கு பதில் தானே நீ சொல்றதும். ரூட் காசுக்கான தீர்வு இல்லையே!

முஸ்லீம் வீட்டு பெண்கள் பர்தாவை தூக்கி போட்டு விட்டு இந்து பின்னாடி பம்பாய் ஓடுவதாகவும், கம்யூனிஸ்ட் லெனின்கள் துர்கா பூஜையில் பொட்டு வைத்து கொண்டாலும் முஸ்லீம் பெண்கள் தொழுகையிலேயே கவனம் சிதறுவதாகவும் பொக்கிஷம் படைத்தும், மூணு பொண்டாட்டி கட்டுறவன் என்றும் படமெடுத்து மன அரிப்பை தீர்த்துக் கொள்கிறார்கள்.

இதை எல்லாம் தொலையட்டும் என்று விட்டு விட முடியாது

Eswaran said...

In WW-II japanese used their fighter jets in suicide attacks on US naval ships. So you can say LTTE to be forerunners in suicide attacks.

superlinks said...

வணக்கம் உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

மணிகண்டன் said...

Let us hear out from a legal mind. What do you think of polanski's case and his arrest after 30+ years and the french government reaction to the same.

Anonymous said...

மாதவராஜ் தளத்தில் இடப்பட்ட பின்னூட்டம்

எதிர்க்கப்பட வேண்டியது பார்ப்பனீயம் தான், மாறாக அந்த சமூகத்தில் பிறந்த காரணத்திற்காகவே ஒருவரை எதிர்க்கக்கூடாது என்கிற உங்கள் கூற்று முற்றிலும் சரி ஆனால் யார் அப்படி எதிர்க்கிறார்கள் ? கமலஹாசன் பார்ப்பன சமூக‌ பின்னணி கொண்டவர் என்பதாலேயே அவரை எதிர்ப்ப‌வர்கள் யார் ? அல்லது பாரதியை அவ்வாறு எதிர்ப்பவர்கள் யார் ?

நீங்கள் கூறுவது போல‌ கமலஹாசனை ஒரு மாபெரும் கலைஞன் என்று அவருடைய‌ ஒரு பகுதியை மட்டும் (நடிப்பு,அதிலும் அவர் சிவாஜிக்கு ‘வாரிசு’) வைத்துக்கொண்டு வாழ்த்த முடியாது. அவ்வாறு செய்தால் த‌ன் காலத்தின் மாபெரும் கலைஞனாக திகழ்ந்த,கலையை தன் மக்களுக்காகவே(மக்கள் என்றால் உழைக்கின்ற மக்கள்) வடித்தெடுத்த‌ சாப்ளினுக்கும் கமலஹாசனுக்கும் வேறு பாடு இல்லாமல் போய் விடும். அவரும் கலைஞன் இவரும் கலைஞன் என்றாகி விடும் ! அது சரியா ?

கமலஹாசனுடைய பார்ப்பனச்சார்பு பளீர் என்று பருண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை,அது மிகவும் சூக்குமமானதாக இருக்கலாம், சில சமயம் பெரியார்,கம்யூனிசம் என்று அவருக்கான‌ ஊறுகாயுடன் முற்போக்கும் கலந்திருக்கலாம்,அதாவது பாரதியை போல. நான் கமலஹாசனை ஒரு ‘பார்ப்பன பாசிஸ்ட்’ என்று கூறவில்லை.பாசிச கருத்தை பேசுபவனெல்லாம் பாசிஸ்ட் இயக்கத்தில் இருக்க வேண்டியதுமில்லை.ஆனால் கலஹாசனுக்கு தனது பார்ப்பன சமூகத்தின் மேண்மை பற்றிய பெருமை இருக்கிறது.

பாரதி பற்றி இனியும் சொல்வதற்கென்ன இருக்கிறது ? சொல்லியும் ஆகப்போவது ஒன்றுமில்லை.அனைத்தும் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும் எனவே பாரதி பற்றிய கதையை இத்துடன் விட்டுவிடுகிறேன்.

Prabhu Rajadurai said...

Manikandan,

Thank you...In US, there was an interesting case, wherein a white racist though acquitted of charge of murder of a black activist was retried after 25 years and convicted. You can read the story here

http://marchoflaw.blogspot.com/2006/10/blog-post.html

மணிகண்டன் said...

Prabu,

It was really interesting to read about evers case. Keep on writing these sort of articles.

In polanski's case, the girl is against prosecuting polanski. I don't know whether it would make any difference as he has entered a plea bargain with the judge whose activities were erratic.

Prabhu Rajadurai said...

Manikandan,

A criminal act, though inflicted against an individual will be deemed to be an offence against the state. Hence, unlike a civil wrong even if the victim condones the act, the state can still proceed.

For instance our Criminal Procedure Code has categorized the offences which are not compoundable.

I have read about case, when a man was arrested for the offence of kidnapping. (Removing a minor even with her/ his consent from the custody of the Guardian is kidnapping). Well he was arrested after about 15 years, and found married to the girl whom he kidnapped and with children.

The Court has to convict him for the offence of kidnapping but the other events can be a mitigating factor in punishing the offender...

Now you can evaluate Polanski's case in the above principles.

சிறில் அலெக்ஸ் said...

படம் பாக்காமலேயே குற்றம் கண்டுபிடிப்பவரா நீங்க :)

கலக்கல் விமர்சனம். ‘அமைப்புகள் எப்படி வேலை செய்யுதுண்ணு தெரியாமல்....’ 100% உண்மை.

Nagarajan said...

//மனித வெடிகுண்டாக மாறி முதல் பயங்கரவாத செயலை செய்தது ஒரு இந்து!! //

Who was the first suicide bomber?

The first modern suicide bombing occurred in Iran in 1980 when 13-year old Hossein Fahmideh detonated himself as he ran up to an Iraqi tank at a key point in a battle of the Iran-Iraq War. Lebanon, during its civil war, saw a modern suicide bombing: the Islamic Dawa Party's car bombing of the Iraqi embassy in Beirut, in December 1981. Hezbollah's bombing of the U.S. embassy in April 1983 and attack on United States Marine and French barracks in October 1983 brought suicide bombings international attention.

Prabhu Rajadurai said...

Natarajan,

I did not say 'first suicide bomber'. What I have referred is the 'first suicide terrorist attack directed against an individual and with clear knowledge of no military target. Neither the Japanese Kamikaze attack would fall within this definition.

Anyway, the point I would like to press is that to become a terrorist, one need not be a Muslim.

Had the Jews denied their 'home land', the west, particularly Europe would today be coping with Jewish Terrorism.

Nagarajan said...

பிரபு,

நீங்கள் சொன்னது "மனித வெடிகுண்டாக மாறி முதல் பயங்கரவாத செயலை செய்தது ஒரு இந்து" என்று.பிறகு அதை நடத்தியது 1991ல் தணு என்றீர்கள். முதற்கண் அந்த தாக்குதலை நடத்திய தணு ஒரு இந்து என்ற முறையில் அதை செய்யவில்லை.ஒரு ஈழதமிழச்சி என்ற அடிப்படையில் தான் அதை செய்தார். ஆனால் அவர் உலகின் முதல் மனிதவெடிகுண்டு அல்ல. அமெரிக்க தூதரகம் மீது ஹிஸ்புல்லா 1983ல் முதல் சிவிலியன் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்திவிட்டது.தனிமனிதரை குறிவைத்து நடத்திய முதல் வெடிகுண்டு தாக்குதல் என்றும் கூட சொல்லமுடியுமா என்பது சந்தேகம் தான். ஏன் என்றால் 80களில் ஹிஸ்புல்லாவும் எல்டிடியும் பல மனிதவெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கின்றன.

நீங்கள் சொன்னதில் ஒன்று உண்மை. மனித வெடிகுண்டாக மாற ஒருவன் முஸ்லிமாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.ஆனால் முஸ்லிம் மதத்துக்கு நல்ல பெயர் சம்பாதித்து தரவேண்டும் என்பதற்காக இந்துக்கள் தான் முதல் மனிதவெடிகுண்டாக மாறினதாக கூறவேண்டாம். தமிழ் பேசும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் மொழிக்காகவும், இனத்துக்காகவும் ஈழத்தில் மனித வெடிகுண்டாக மாறினார்களே ஒழிய இந்து மதத்துக்காக மனிதவெடிகுண்டாக மாறிய ஒரு ஆளை கூட நான் கேள்விபட்டதில்லை.

bala said...

prabhu,

You are probabaly right.had the jews been denied their home land,europe would have been facing jewish terrorism.

Europe ofcourse is facing islamic terrorism now;curiously pakistan,bangladesh,egypt,indonesia which are all islamic countries are also facing islamic terrorism and so is phillipines which is predominatly christian;thus islam has the dubious distinction of terrorising people of all religions;thus the claim that islam treats all religions including islam equally is indeed true.They can thus be said to be practising socialistic terrorism.

bala

Anonymous said...

//Had the Jews denied their 'home land', the west, particularly Europe would today be coping with Jewish Terrorism.//

கிபி 30 முதல் 1946 வரை யூதர்கள் சொந்தநிலமின்றி ஐரோப்பாவில் அகதிகளாக வசித்தார்கள்.ஆனால் அவர்களில் யாரும் தீவிரவாதியாகவில்லை.

மணிகண்டன் said...

Now is understand the phrase "offence against the state". :)- thanks

Nanban said...

kamal may be a business man or not.here its not an issue.the movie is supporting two concepts;one is Brahmanism i.e.Hinduism another one is fascism;those things has to be discussed;bese those concepts influences the society. kamal supporting the lawlessness.without inquiry the Muslim terrorists will be killed.but in our country advani;modi;rss&vhp criminals are never be punished;even though they have killed 1000 s of innocent Muslims;Christians;dalits;in Gujarat;kovai;bombay;RSS+VHP;RIOTS against Muslims nobody was convicted; not even registered a case against the offenders;but 100s of innocent Muslims were booked under POTA act;the SUPREME COURT IS ALSO SILENT regarding RSS riots;so the state is supporting Hinduism;so the root cause of terrorism in India is Hinduism;for detailed discussion visit www.vinavu.com

Nanban said...

for a detailed discussion plse visit www.vinavu.com

Anonymous said...

//மனித வெடிகுண்டாக மாறி முதல் பயங்கரவாத செயலை செய்தது ஒரு இந்து!!//

You could not prove it. At least have the honesty to remove it.