பல வருடங்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன் ‘தனது மகளை பள்ளியில் சேர்க்க சென்ற பொழுது, மகளின் பள்ளி ஆவணத்தில் ஜாதி, மதம் என்ற இடத்தில் இந்தியன் என்று குறிப்பிட வேண்டியதாகவும், பள்ளி நிர்வாகிகள் ஜாதி, மதம் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று கூறியதாக’ ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஏன் தற்பொழுது கூட தமிழ் ஊடகங்களில் பலமுறை ‘ஜாதியை ஒழிக்கப் போவதாக அரசு கூறினாலும், பள்ளிகளில் குழந்தைகளில் சேர்க்கப் போனால் முதலில் ஜாதியைத்தானே குறிப்பிடச் சொல்கிறார்கள்’ என்று எழுதப்படுவதை படிக்க நேர்கிறது.
இத்தகைய செய்திகளால், ஏதோ தாங்கள் விரும்பாவிட்டாலும், அரசு மக்களின் மீது ஜாதியினை திணிக்கிறது என்று மக்கள் மத்தியில் ஒரு எண்ணம், முற்றிலும் தவறான எண்ணம் ஊட்டப்பட்டுள்ளது.
நானறிந்த பல குழந்தைகளின் பள்ளி ஆவணங்களில் மதம் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஜாதி குறிப்பிடப்படவில்லை என்பதை அறிவேன்.
ஆயினும், எந்தப் பள்ளியிலாவது, குழந்தையின் ஜாதி, மதம் போன்றவற்றை குறிப்பிட கட்டாயப்படுத்தினால் அவர்களிடம் ‘தமிழக அரசு இந்தப் பிரச்னை குறித்து வெளியிட்ட அரசாணை எண்.1210 தேதி 02.07.73’ஐ சுட்டிக்காட்டவும். இந்த அரசாணையின்படி பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதி, மதம் போன்ற இடங்களை காலியாக விடவோ அல்லது இல்லை என்று குறிப்பிடவோ உரிமை உண்டு என்று அரசு கூறுகிறது.
இவ்வாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளிகளுக்கு ஆணையிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுவில் (writ petition) ‘இவ்வாறு ஏற்கனவே ஒரு அரசாணை இருப்பதால் உத்தரவு எதுவும் தேவையில்லை’ என்று சமீபத்தில் தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது.
மதுரை
16.06.07
12 comments:
//எந்தப் பள்ளியிலாவது, குழந்தையின் ஜாதி, மதம் போன்றவற்றை குறிப்பிட கட்டாயப்படுத்தினால் அவர்களிடம் ‘தமிழக அரசு இந்தப் பிரச்னை குறித்து வெளியிட்ட அரசாணை எண்.1210 தேதி 02.07.73’ஐ சுட்டிக்காட்டவும். இந்த அரசாணையின்படி பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதி, மதம் போன்ற இடங்களை காலியாக விடவோ அல்லது இல்லை என்று குறிப்பிடவோ உரிமை உண்டு என்று அரசு கூறுகிறது.
//
புதிய தகவல் தெரிந்து கொண்டேன்.
நன்றி ஐயா.
I was not aware of this. Thank you for the information.
Regards,
Rajesh
நீங்கள் கொடுத்திருக்கும் இந்த தகவல் பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
02-07.73க்கு முன் இப்படி ஒரு சட்டமோ அல்லது உரிமையோ நமக்கு இல்லையா என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.
இந்த புரட்சிகர உத்தரவை நிறைவேற்றிய டாக்டர் கலைஞர் வாழ்க.
Many many thanks for this useful information. Many people who want to declare no religion/caste have difficulties without knowing this.
Please continue your service.
பிரபுஜி,
இது மிகவு பயனுள்ள தகவல்.
மேல்நிலைப் பள்ளியில் சேரச் சென்றபோது ஜாதி என்ற கேள்விக்கு எதிராக BC அல்லது FC என்ற வரையிலாவது கட்டாயமாகப் பூர்த்திசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டோம் (அரசு பள்ளி). சத்துணவு போன்ற அரசு நடத்தும் திட்டங்களின் பயனாளர்களைத் தீர்மானிக்க அந்தத் தகவல் தேவை என்று சொன்னதாக நினைவு.
நன்றி.
If someone leaves the caste column blank it means either the person is not entitle to any reservation or if entitled (s)he does not avail it. If in the initial stages if the caste is not mentioned can one add it later. I think that should be possible with proper proof. In any case a state which implementss 69% reservation is a casteist state only.It wants to cover all muslims and christians
also under reservation. When the system relies heavily on caste and religion to distribute benefits
some illusory measures like the option of leaving caste column
blank do not mean much. They are
symbolic but useless gestures.For
all I know tomorrow there can be a
caste based census and in future all application forms for job and
education in govt may have caste as a mandatory column.
உங்களை என் பதிவினில் தொடர்பதிவு செய்ய அழைத்திருக்கிறேன். எழுதுவீர்கள் என்றால் மகிழ்வடைவேன்.
www.reallogic.org/thenthuli.ஒரு வழக்கறிஞராக நிறைய அனுபவங்கள் இருக்கும். எழுதுங்களேன்.
I have been reading your blog of late as a link from one of the other blog posts.I found your blog on Jaathi enna hypocritic.Do you really think the establishment is doing enough to create a level playing field for all people.Political parties are using caste as a very powerful driving force to muster support and abuse people power.I cant think of any politician of our times who has contested in a place where is is not prudent to do so,on caste based calculations.But nevertheless I do appriciate the style and content of your blog and the issues discussed.Please do keep it up.(I would have loved to type in tamil but I dont have the facility.please bear with me.
நான் தெரிந்திராத விசயம் அறியக்கொடுத்ததற்கு மிக்க நன்றி.
அதுசரி,
சாதிகள் என்றுதான் எதுவுமே கிடையாதே, பின் எதற்கு அதை இன்னும் பள்ளி ஆவணங்களில் பிடித்து தொங்கிக்கொண்டு கிடக்க வேண்டும். அச்சடிக்கும்போதே இதை தவிர்த்து இருக்க வேண்டும் அல்லவா?
என்ன எழவோ!
//‘தமிழக அரசு இந்தப் பிரச்னை குறித்து வெளியிட்ட அரசாணை எண்.1210 தேதி 02.07.73’ஐ சுட்டிக்காட்டவும். இந்த அரசாணையின்படி பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதி, மதம் போன்ற இடங்களை காலியாக விடவோ அல்லது இல்லை என்று குறிப்பிடவோ உரிமை உண்டு என்று அரசு கூறுகிறது.
//
மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் மத்திய அரசின் சட்ட /அறிவிப்புக் குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்.
பிரபு,
சாதி குறித்த நேற்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு...
சாதி உங்கள் சாய்ஸ !
http://kalvetu.blogspot.com/2007/09/blog-post.html
Post a Comment