மூன்று பிரபலங்களைக் குறித்து சமீபத்தில் வந்த
வதந்தி, விசாரித்தால் ஓரளவிற்கு உண்மையிருக்கலாம்…
முதலாமவர் திரைப்பட இயக்குஞர். அவர் இயக்கிக்
கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்திற்காக, உல்லாசத்திற்கு பெயர் பெற்ற நாடு ஒன்றில்
சில நாட்கள் தங்க நேர்ந்தது. தினமும் படப்பிடிப்பிற்கு செல்வதும், பின்னர் விடுதி
அறையில் வந்து நல்ல பிள்ளையாக தங்குவதுமாக இருந்தவரை, அந்த விடுதி வரவேற்பறை
பெண்மணி கவனித்துக் கொண்டே இருந்தார். இயக்குஞர் விடுதியிலிருந்து விடைபெறும்
சமயம் அந்தப் பெண், ‘திரைப்படம் எடுப்பதற்காகவோ அல்லது வேறு வேலைகளுக்கோ இங்கு
பலர் வந்து தங்குகிறார்கள். அனைவரும் மற்ற நேரங்களில், மதுக்கூடத்தையோ அல்லது வேறு
கேளிக்கைகளையோ தேடி போவார்கள். ஆனால், நீங்கள் அப்படி ஏதும் இல்லாமல் உங்களது
அறைக்கு திரும்பி விடுகிறீர்கள். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கிறது. நானும் உங்கள்
மதம்தான், நாம் திருமணம் செய்து
கொள்ளலாமா?’ என்றாரார்.
இயக்குஞரோ, ‘தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள்
இருப்பதாகவும், அந்தப் பெண்ணுக்கு வேறு நல்ல கணவன் கிடைப்பார் என்று வாழ்த்தி‘ விடை பெற்றாராம்.
இரண்டாமவர், அரசின் முக்கியதுறை ஒன்றில் மிக உயர்ந்த
பதவியிலிருப்பவர். சில மாதங்களுக்கு முன்னர், வேறு ஒரு உயர்ந்த பதவி வகிப்பதற்காக
பிரச்னைக்குறிய ஒரு இடத்திலிருக்க நேரிட்டது. குடியரசு தினத்திற்கு முன்பு,
கொடியேற்று விழாவை எப்படி நடத்துவது என்று விவாதிக்க தனது சகாக்களை அழைத்தார். இவரது
ஆர்வத்தில் சகாக்கள் அதிர்ந்து போய் விட்டனராம். ‘ஏன் நாமெல்லாம் பிரச்னையில்லாமல்
தொடர்ந்து செய்ல்படவேண்டாம் என்று நினைக்கிறீர்களா? இல்லாத வழக்கத்தை
ஏற்ப்படுத்தி, வம்பில் சிக்கிக் கொள்ள வேண்டாம்’ என்றார்களாம். இவருக்கும் ஆச்சரியாமாம்...
மூன்றாமவர், நாடறிந்த அரசியல்வாதி முதன்மையான
பொறுப்பிலிருப்பவர். தனக்கு அந்த பொறுப்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் என்று
நினைக்கும் ஒரு விடயத்தில் அவர் எடுத்த நடவடிக்கை, நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட
அதிக கோபத்திலிருந்தவரை பார்க்க இளம் அதிகாரி ஒருவர் சென்றிருந்தார். வெறுப்பில்,
தன் முன் இருந்த காகிதத்தில் கோட்டுப்படங்களை கிறுக்கிக் கொண்டே இருந்தவர்,
அதிகாரி பேச்சை எடுத்ததும், நீதிபதிகளை ‘இவர்களைப் பற்றி தெரியாதா?‘ என்ற ரீதியில்
திட்டித் தீர்த்தாராம். அப்படி திட்டியதில் சில வார்த்தைகளை அச்சில் ஏற்ற
இயலாதாம்...
-oOo-
கிரேக்க மூலத்திலிருந்து ட்ரிவியல்
(Trivial) என்ற் ஆங்கில வார்த்தை
உருவானதற்கு ஒரு கதை உண்டு. அந்தக் காலத்தில் பெண்கள் தத்தம் வீடுகளில் இருந்து
பொருட்கள் வாங்க சந்தைக்கு செல்வார்கள். அப்படி மூன்று வழியில் (Tri + Via) இருந்து வரும் பெண்கள்
சந்தைக்கு செல்லும் வழியில் ஒன்றாக கூடுகிறார்கள். ‘அப்படி செல்லும் வழியில்
பெண்கள் என்ன பேசுவார்கள்?, அதுதான் ட்ரிவியல் பேச்சு’
என்று நான்
சொன்னால், பெண்கள் அமைப்பு வைத்து என்னை கண்டிப்பார்கள்.
எனவேதான், ஆண்களும் இதற்கு
விதிவிலக்க என்று விளக்கவே இந்தப் வெட்டிப் பேச்சு பதிவு!
சென்னை
14/07/12
1 comment:
That's ok
3 name please ( * _*)
:-)))
Post a Comment