16.1.09

அழிப்பது ‘புலி’களின் குணமே!

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியப் பெண்களுக்கான தேசிய கூட்டமைப்பு (National Federation of Indian Women) என்ற சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிப் பேராண்மை மனுவினை (Writ Petition) தாக்கல் செய்தது. அதாவது தணிக்கை குழுவினரால் (Censor Board) தடை செய்யப்பட்ட திரைப்படக் காட்சிகளையும், பாடல்களையும் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பேருந்துகளில் ஓளி/ஒலிபரப்புவதை தடுக்க போதிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வேண்டும் மனு.


பொதுவாக எனக்கு இது போன்ற மனுக்களில் நம்பிக்கை அவ்வளவாக கிடையாது. நானும் வழக்குரைஞர் நண்பர் ஒருவருக்காக முன்பு 'அரசு அனுமதித்த நபர்கள் தவிர மற்றவர்கள் தங்களது வாகனங்களில் சிவப்பு விளக்கினை பயன்படுத்துவதை உடனடியாக தடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்' என்று ஒரு மனு தாக்கல் செய்து அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் ஏதும் பலன் இல்லை!


‘இன்னார்’ சிவப்பு விளக்கினை பயன்படுத்துவதாக கூறி ஒரு அவமதிப்பு மனு (Contempt Petition) போடலாமா? என்றால், வழக்கு தாக்கல் செய்த நண்பர் ‘ஏன், நான் ஒழுங்காக இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா’ என்கிறார்.



***


சமீபத்தில் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு வழக்குரைஞர்களின் கருத்துகளை கேட்டபின்னர், ‘படக்காட்சி என்றால் சரி, படக்காட்சியோடு இணையாத பாடல் (Audio without any accompanying visual display) மட்டுமென்றால் அந்தப் பாடல் காட்சி தணிக்கைத் துறையினரால் தடை செய்யப்பட்டிருந்தாலும் திரைப்பட சட்டத்தின் (Cinematograph Act) எந்த ஒரு பிரிவினையும் மீறியதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.


ஆனாலும் குத்துப்பாட்டு போடுபவர்கள் ஒரேடியாக மகிழ்ந்து விட வேண்டாம். வெறும் பாடல் என்றாலும், பாடல் வரிகள் அநாகரீகமாக (obscene) இருக்கும் பட்சத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.


இந்திய தண்டனைச் சட்டத்தின் 294ம் பிரிவு மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும்(annoy) வண்ணம் அநாகரீகமான பாடல்களைப் (obscene songs) பாடினால் மூன்று மாத தண்டனைக்கேதுவான குற்றம் என்று கூறுகிறது. இந்தப் பிரிவின் மற்றொரு பகுதி அநாகரீக செயல் (obcene act) புரிந்தாலும் குற்றம் என்று கூறுவதால், அநாகரீக பாடல்களை ஒலிபரப்புவதும் குற்றமே!


‘அப்சீன்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு பொருத்தமான தமிழ் வார்த்தை எனக்குத் தோன்றவில்லை. தமிழறிஞர்களைக் கேட்டால், முதலில் அப்சீன் என்றால் என்னவென்று வரையறு என்பார்கள்.


***


அநாகரீக பாடல் கூடாது. இந்தப் பாடலைப் பாடலாமா?

இதோ வருகுது யுத்தம்
துடிக்குது புஜம்
ஜெயிப்பது நிஜம்


பகைவனுக்கருள்வது பிழை
வா

பகைவனை அழிப்பது முறை
ம்ம்ம்...பொறுப்பது புழுக்களின் குணம்
அழிப்பது புலிகளின் குணமே!

எட்டிப்போ
இதோ வருகுது புலி
யுத்தத்தால் அடாவடி ஒழியுது
மனோபலம் வருகுது மொத்தத்தில்


பாடாவிட்டாலும் நேற்று கேட்டேன், ஏதோவொரு பண்பலை வானொலியில்!

விக்ரம் படத்தில், இளையராசா இசையமைப்பில், கமல்காசன் பாடிய இந்தப் பாடலுக்கு படம் வெளிவந்த காலகட்டத்தில் சில எதிர்ப்புகள் இருந்ததாக படித்த ஞாபகம். தற்பொழுது இல்லை போலும்.



நமது பேச்சுரிமை அதிகரித்திருப்பதற்காக நாம் மகிழலாம்!


மதுரை
160109









கண்ணுக்கு விருந்து...

11 comments:

PRABHU RAJADURAI said...

The above referred Judgment is reported as
National Federation of Indian Women TN Council Vs. Govt. of TN in (2009) 1 MLJ 100

TBCD said...

"கொச்சை" என்ற சொல் சரியா வராதா..

ஆங்கிலத்தில் யோசிச்சிட்டு சொற்களைத் தேடினால்..பல சமயம் குழப்பமே மிஞ்சுகிறது..

அதை விட்டுவிட்டு, இதை வழக்கத்தில் எப்படி சொல்லுவாங்க என்று யோசிச்சால்..சில வேளைகளில் சரியாக மாட்டிவிடும் என்று நினைக்கிறேன்.. :))

ஃஃஃஃஃஃஃஃ

விக்ரம் பட பாடல் புலிகளைப் பற்றி பாடப் பெற்றது...போச்சு..இனிமே அதைப் போட்டால் பிரச்சனை பண்ணுவானுங்களே..

Unknown said...

//அந்தப் பாடல் காட்சி தணிக்கைத் துறையினரால் தடை செய்யப்பட்டிருந்தாலும்// இதை விளக்க முடியுமா?

எப்பவும் போல், நன்றி.

துளசி கோபால் said...

கண்ணுக்கு 'விருந்து'

நன்றியோ நன்றி.

அது என்ன மூவர்ண கபாப்?

அந்தப் பச்சை, ஒருவேளை பீடாவாக இருக்குமோன்னு நினைச்சேன்.

PRABHU RAJADURAI said...

டிபிசிடி,
கொச்சை சரியாகத்தான் இருக்கிறது.

மேடம்,
நேற்று இந்தப் படத்தைப் போடும் பொழுது உங்களை நினைத்தேன்...அது குடமிளகாய்.

ஆனா, இது எங்க ஏரியாவாச்சே!

கெ.பி,
It is not an offence under Cinematograph Act, to broadcast a song, even if the song sequence is prohibited by the Censor Board. Mere audio cannot be brought under the provisions of the said Act.

However, an obscene song, whether it is prohibited by the Censor Board or not, if broadcasted can become an offence under Indian Penal Code.

When the charge is under IPC, it is possible to argue, since the said song passed the Censor Board, it would not be an obscene song.

However, it is for the Court to decide whether a song is obscene or not and not the Censor Board.

ambi said...

//However, an obscene song, whether it is prohibited by the Censor Board or not, if broadcasted can become an offence under Indian Penal Code.
//

எனக்கென்னவோ இந்த தீர்ப்பே ரொம்பவே குழப்புதுன்னு தோணுது. நீங்க சொல்றபடி (அல்லது தீர்ப்பு படி) பாத்தா இன்னிக்கு தமிழ் நாட்டுல முக்கால்வாசி பாடல்களை அம்மன் கோவில் கொடை விழாக்களில் குழாய் மைக் கட்டி போட முடியாது. அப்ப்டி ஒளிபரப்பினா மைக் செட் காரன் முதல் விழா கமிட்டி தலைவர் வரைக்கும் கேஸ் போட்டு உள்ள தள்ள முடியுமா?

உதாரணமா தின்டுகல்லு தின்டுகல்லு பாட்டுல கொச்சையா சில வரிகள் வருது (சபை நாகரீகம் கருதி இங்க அதை கோடிட்டு காட்ட விரும்பலை). 15 நிமிஷத்துக்கு ஒரு முறை சன் டிவில காட்றாங்க.

யாராவது இந்த ஜட்ஜ்மென்டை காட்டி கேஸ் போட முடியுமா?

எனக்கு புரியலை அல்லது என் புரிதலில் தவறு இருந்தால் தயவு செய்து திருத்தவும்.

மதுரைல எங்க சார் இருக்கீங்க?

ambi said...

விக்ரம் பட பாடல் செமையா இப்ப இருக்கற சிச்சுவேஷனுக்கு பொருந்துது. :))

ரட்சகன் படத்துல வந்த "சோனியா சோனியா" பாட்டுக்கே காங்கிரஸ்காரங்க ஆர்பாட்டம் பண்ணி காமடி பண்ணாங்க. :))

Anonymous said...

ஈழத்து வழக்கிலும் கொச்சை என்பதுவே அதிகளவு நெருங்கி வரக்கூடிய சொல்லாக இருக்கின்றது.

PRABHU RAJADURAI said...

'யாராவது இந்த ஜட்ஜ்மென்டை காட்டி கேஸ் போட முடியுமா?'

Not necessary.

We have an enactment since 1860, known as Indian Penal Code under which, it is an offence to sing an obscene song. However what was considered to be an obscene song in 1860 could easily be qualified as a nursery rhyme now.

DH Lawrence's novel Lady Chatterley's Lover is a well known example. The said novel was considered to be obscene in UK till 1960.

I m in Narayanapuram...

Unknown said...

வக்கீல் சார், இந்த பகுதி தான் எனக்கு விளங்கல. உங்கள் விளக்கப்படி, தணிக்கை செய்யப்படாத பாடல்களை ஒலிபரப்புவதில் சட்டப்படி குற்றமில்லை. ஏன், காப்புரிமை சட்டப்படி?

இன்னும், //இந்திய தண்டனைச் சட்டத்தின் 294ம் பிரிவு// படி, //அநாகரீகமான பாடல்களைப் (obscene songs) பாடினால் மூன்று மாத தண்டனைக்கேதுவான குற்றம்//. அதாவது இந்த மாதிரி பாடல்களை ஒலிபரப்பினால், பொதுமக்கள் கம்ப்ளெயின்ட் கொடுக்கணும். காவல்துறையே நடவடிக்கை எடுக்கணும்னு அர்த்தம் இல்லை. (ignoring the realities of life). [இதுல, நீங்க முதலில் குறிப்பிட்ட நீதிப் பேராண்மை மனுவின் வேண்டுகோள் .பாடல்களுக்கெதிராக காவல்துறை உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும்]

அம்பி //மைக் செட் காரன் முதல் விழா கமிட்டி தலைவர் வரைக்கும் கேஸ் போட்டு உள்ள தள்ள முடியுமா?// கேள்விக்கு மறுகேள்வி மேல கேட்டுருக்கேன்.

சட்டத்துறை கேள்வி - "நீதிப் பேராண்மை மனு": நீதித் தேவதை தானே, தேவன் இல்லியே? பேராணை என்றாலும் பரவாயில்லை.. ஈயம் இளிக்கிறது:-) (மொழிபெயர்ப்பு உங்களுது இல்லனு தெரியும்). Maybe NIFW TNc should move the court reg. this:-)

PRABHU RAJADURAI said...

"ஏன், காப்புரிமை சட்டப்படி?"

It is not Copyright Act but Cinematograph Act.

Playing an obscene song will be an only under IPC.

If Censor Board prohibits the song visual and if the song is played along with visual, the person can be prosecuted under both IPC as well as Cinematograph Act for two counts of offences.