28.10.07

கலைஞர், ஞாநி மற்றும் சுந்தரமூர்த்தி

நேற்று டிவியில் சேகர் குப்தாவின் வாக் த டாக் நிகழ்ச்சி...கருணாநிதி வாக்காமல் சோபாவில் சாய்ந்தபடி பேசினார். கனிமொழி மோசமாக கருணாநிதி கூறுவதை சேகருக்கு மொழிபெயர்த்தார். முதலாம் பகுதி போன வாரம் வெளிவ்ந்ததாம். எப்படியோ நான் பார்த்தவரை புரிந்தது, கருணாநிதி இல்லாமல் திமுக அவ்வளவுதான் என்று!

பலமுறை பலர் கூறியதுதான்...தனது சாதுரியம், முக்கியமாக நகைச்சுவை உணர்வால் பேட்டியின் இறுக்கமான சூழ்நிலையினை எளிதில் அவரால் தளர்த்த முடிகிறது. மேலும், பேட்டியாளரையே வசியப்படுத்துவதன் (charm) மூலம், அவரால் சங்கடப்படுத்தக்கூடிய கேள்வியினை தவிர்க்க முடிகிறது. தமிழகத்தின் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத ஒரு திறமை அவரிடம் உள்ளது. இவ்விஷயத்தில் திமுகவில் வேறு யாரையும் அவருக்கு அருகில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை!

கனிமொழி மீது எனக்கு இருந்த நம்பிக்கை கூட அவரது சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளாலும், இந்தப் பேட்டியில் அவர் தடுமாறியதை வைத்தும் போய் விட்டது. தயாநிதிக்கும் இனி திமுகவில் எதிர்காலம் இருக்கிறதா என்று புரியவில்லை!


***

தமிழக அரசியலில் கலைஞர் இல்லாமல் போவது அவரது எதிரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கலாம். ஆனால், அதன் விளைவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை! தமிழகத்தில் தீவிரவாதத்தினை நோக்கி சென்றிருக்க வேண்டிய பல இளைஞர்களை, மட்டுப்படுத்தி ஜனநாயக பாதைக்கு இழுத்ததில் முழுப்பங்கு திராவிட இயக்கங்களுக்குத்தான் என்பது என் எண்ணம்.

இன்றும் கலைஞர் மட்டுமே, தடுமாறும் உள்ளங்களை மட்டுப்படுத்தும் ஒரு காரணியாக இருக்கிறார். கலைஞரை விட்டால், திமுகவில் அதன் ஆதர்ச கொள்கைகளான இறை மறுப்பையும், இட ஒதுக்கீட்டினையும், பார்ப்பனீய எதிர்ப்பினையும் பற்றிப் பேசுவதற்கு யார் இருக்கிறார்கள்?

கலைஞருக்குப் பின் இவ்வகையான கொள்கைகளில் ஈர்க்கப்படும் படித்த இளைஞர்கள் ம.க.இ.க போன்ற தீவிர இயக்கங்களில் தஞ்சமடையப்போகிறார்கள் என்பது எனது அனுமானம்.


***

அரசியலுக்காக பல சமரசங்களைச் செய்து கொண்ட கலைஞரிடம், மனதின் ஆழத்தில் பழைய உணர்வுகள் பதுங்கியிருக்கின்றன என்று ராமர் விஷயத்தில் அவரிடம் தோண்டித் தோண்டித் துருவிய சேகரிடம், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இரு முறை ‘சடார்’ என அவர் பதிலளித்ததில் புரிந்தது. எவ்வித ஜாக்கிரதை உணர்வுமின்றி மனதில் இருந்து வெளிப்பட்ட பதிலாக இருந்தது.

டிப்ளோமேட்டிக்காக பதிலளித்து வந்தவரிடம் துருவித் துருவி, ‘இது பெரியார் நாடு. இங்கு பிஜேபிக்காரர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்’ என்று கூற வைத்த சேகரை பாராட்ட வேண்டும்.

கொல்லன் தெருவில் ஊசி விற்பதைப் போல, ‘நீங்கள் ராமாயணம் படித்திருக்கிறீர்களா?’ என்று சேகர் ஆச்சரியமாக வினவ...’வால்மீகி ராமாயணம் மட்டுமல்ல. ஆறு வகையான ராமாயணத்தையும் படித்திருக்கிறேன்’ என்று கூறி வாயடைக்க வைத்தார்.

அடுத்த கட்ட திமுக தலைவர்கள் கடந்த வார குமுதம் படித்திருந்தாலே ஆச்சரியம்!

மதுரை
28.10.07

(எனது வலையக நண்பர் சுந்தரமூர்த்தியின் பதிவுக்கு எதிர்வினையாக எழுதியது. கொஞ்சம் அதிகமானதால் தனிப்பதிவாக இங்கு)

10 comments:

அருண்மொழி said...

கலைஞர் கலைஞர்தான். சுப்ரீம் கோர்ட் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த விதம் அபாரம். அவரை போல் பத்திரிக்கைகளுக்கு பதில் அளிப்பவர் வேறு யாரும் இல்லை. No one can replace him.

Sundar Padmanaban said...

//அடுத்த கட்ட திமுக தலைவர்கள் கடந்த வார குமுதம் படித்திருந்தாலே ஆச்சரியம்!
//

சொன்னீங்களே - இது வார்த்தை. பெரும் புகழ் பெற்றவர்களின் (எந்தத் துறையிலும்) வாரிசுகளும் அதே அளவு புகழ் பெறுவது மிகவும் அரிதான நிகழ்வு. கலைஞருக்கு மாற்றாக ஒருவர் இல்லை என்பது நிதர்சனம்.

அதே சமயத்தில் lime light தன் மீது விழாத அடையாளம் காணப்படாத எத்தனையோ நேர்மையாளர்களும், திறமைசாலிகளும் எல்லாவிடத்தும் இருக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மைதான்.

'கலைஞருக்குப் பிறகு' என்பது போலவே ஜெ.க்குப் பிறகு என்பதும் விடையில்லாத பெரிய கேள்விதான்.

Anonymous said...

Hello Prabhu,

I saw the same programe yesterday. I am really surprised to see the sharpness and presence of mind of kalaingar. Any question from Shekar was hit six by thalaivar. as you have mentioned, when asked about Ram, He responded splendidly.

Yes it is true that we cannot imagin a tamil nadu with out kalaingar. Only with him we see the reminicense of periyar. Vaiko is a third rated fortunist. Vaiko is no where near thalaivar!

Excellent article Prabhu, Keep going!

Wishes!

சாலிசம்பர் said...

அசத்தலான ஒரு பதிவு.

//கலைஞரை விட்டால், திமுகவில் அதன் ஆதர்ச கொள்கைகளான இறை மறுப்பையும், இட ஒதுக்கீட்டினையும், பார்ப்பனீய எதிர்ப்பினையும் பற்றிப் பேசுவதற்கு யார் இருக்கிறார்கள்?//

வரலாறு அப்படி ஒரு தலைவனை உருவாக்காமலா போய்விடப் போகிறது?


//(எனது வலையக நண்பர் சுந்தரமூர்த்தியின் பதிவுக்கு எதிர்வினையாக எழுதியது. கொஞ்சம் அதிகமானதால் தனிப்பதிவாக இங்கு)//


சுந்தரமூர்த்தி அவர்கள் தான் தடை போட்டு வைத்திருக்கிறாரே.அதில் என்ன இருக்கிறது என்று நீங்களே சொல்லிவிடுங்கள்.

மு. சுந்தரமூர்த்தி said...

பிரபு,
என்பதிவுக்கான விளம்பரத்திற்கும், மேலதிக விவரங்கள், உங்கள் கருத்துக்கள் ஆகியவற்றுக்கும் மிகவும் நன்றி.

ஜாலிஜம்பர்,
எதுவும் எழுதுவதில்லை என்பதால் என்பதிவை சில காலம் மறைத்து வைத்திருந்தேன். ரோசாவசந்த் அளித்த உந்துதல் பேரில் ஒரு பதிவை எழுதி இப்போது திறந்து வைத்திருக்கிறேன். பிரபுவின் இப்பதிவின் முடிவில் தொடுப்பு கொடுத்திருக்கிறார்.

http://kumizh.blogspot.com/2007/10/blog-post.html

தறுதலை said...

அகர் அவாளின் சமீபத்திய பேச்சுகள் பற்றியும் எழுதவேண்டும் (அனானியாகவாவது)

கடந்தவார குமுதம். இப்படிப்பட்ட இரண்டாம் கட்டத் தலைவர்களை உச்சத்தில் வைப்பது கருணாநிதியின் இரட்டை வேடப் போக்கையே காட்டுகிறது.

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

சீனு said...

//கொல்லன் தெருவில் ஊசி விற்பதைப் போல, ‘நீங்கள் ராமாயணம் படித்திருக்கிறீர்களா?’ என்று சேகர் ஆச்சரியமாக வினவ...’வால்மீகி ராமாயணம் மட்டுமல்ல. ஆறு வகையான ராமாயணத்தையும் படித்திருக்கிறேன்’ என்று கூறி வாயடைக்க வைத்தார்.//

இது தாங்க கலைஞர் டச்.

Anonymous said...

எப்படியோ நான் பார்த்தவரை புரிந்தது, கருணாநிதி இல்லாமல் திமுக அவ்வளவுதான் என்று.

Annadurai encouraged other leaders to grow up. Under him DMK was not a one man show. EVK Sampath,NV Natarajan, Nedunchezian, Karunanidhi, Sathyavani Muthu, Chittrarasu, Maran, and others were given opportunities to grow and develop themselves. MGR helped DMK to develop a mass base. So Anna led a team of competent players.Annadurai was a large hearted person who could rise above petty ego clashes and biases. He was not envious of the popularity of MGR and hence could encash it for DMK's victory. Can the same be said of Karunanidhi. Now what is the position in DMK. Karunanidhi sent out MGR from the party, Vaiko formed another party. Stalin is no match for Jayalalitha. Dayanidhi Maran is out of the party for all purposes. If DMK declines after Karunanidhi he is responsible for that to a great extent.Let us not shed no tears for that.

சீனு said...

//Annadurai encouraged other leaders to grow up. Under him DMK was not a one man show.//

அதனால் தானே கலைஞரே வர முடிந்தது...

Anonymous said...

உழைப்பு, உழைப்பு, உழைப்பு அப்படியொரு அசுரத்தனமான உழைப்பின் மூலம் உருவானவர் திரு.மு.க.

நிச்சயமாக அவருக்குப்பின்னான தி.மு.கவை எதிர்கொள்ளல் எல்லா கட்சிகளுக்கும் மிக எளிது என்றால் அது மிகையில்லை.

இவ்விஷயத்தில் ஸ்டாலின் தன் தந்தையின் திறமையில் மிகச்சிறு பங்காவது அடைய முயலாமல் இருப்பது பொறுப்பற்றத்தனம். எப்படி சமாளிக்கப்போகிறாரோ தெரியவில்லை.

அன்புடன்
பொன்.முத்துக்குமார்