15.9.07

கலீல் கிப்ரானும், குழந்தை வளர்ப்பும்!

திரைப்படப் பாடல்கள் எத்தனையோ கேட்கிறோம்…ஆயினும் கவித்துவமான வரிகள் உடனடியாக மனதில் பதிவதில்லை. ஆனால், முக்கியமான ஒரு சம்பவத்தோடு வரிகள் தொடர்பு கொள்ளும்போதுதான் அவற்றின் முழு அர்த்தமும் புரிகிறது. அல்லது யாரேனும் ஒருவர் அந்த வரிகளை எடுத்துக் கூறும் பொழுது…

லியோனி போன்றவர்கள் திரைப்படப் பாடல்களை வைத்து நடத்தும் பட்டிமன்றங்கள், சாதாரண மக்களிடம் அதிக வரவேற்பினை பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஏனெனில் அந்த சாதாரணர்களில் நானும் ஒருவன்!

சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு எழுதிய தீர்ப்பினை படிக்க நேரிட்டது. பிரிந்து வாழும் கணவனுக்கும் மனைவிக்குமான, குழந்தை யாரிடம் இருப்பது என்ற வழக்கமான பிரச்னைதான். ஆனால் நீதிபதி முன் வந்த பிரச்னை, குழந்தை தந்தைக்கு சார்பாக பிரமாண பத்திரம் (affidavit) தாக்கல் செய்ய முடியுமா? என்பதுதான். முடியாது என்று தனது தீர்ப்பில் கூறிய நீதிபதி, இறுதியில் கலீல் கிப்ரானின் கவிதையொன்றினை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

படித்த நான் வியந்து விட்டேன்! அந்தக் கவிதையில் வெளிப்படும் மனோதத்துவம் (child psychology) ஏதோ கடந்த பத்து வருடங்களில் தோன்றிய கருத்தாக்கம் என நினைத்திருந்தேன்…

அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன். மூலத்திலிருந்து நேரடி தமிழாக்கம் கிடைத்தால் மகிழ்வேன்!

Your children are not your children.
They are the sons and daughters of Life's longing for itself.

They come through you but not from you,
And though they are with you yet they belong not to you.

You may give them your love but not your thoughts,
For they have their own thoughts.

You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow, which you cannot visit,
not even in your dreams.

You may strive to be like them, but seek not to make them like you.
For life goes not backward nor tarries with yesterday.

You are the bows from which your children as living arrows are sent forth.
Let your bending in the Archer's hand be for gladness

கலீல் கிப்ரான் கவிதைப் புத்தகத்தினை வாங்கிப் படித்திருந்தால், இந்தக் கவிதையின் அர்த்தத்தினை மனம் முழுவது வாங்கியிருக்காது. நீதிபதி சந்துரு தனது தீர்ப்பில் பொருத்தமாக இதனை கையாண்டது, என்றும் எனது மனதில் இந்த வரிகளை ஏற்றி விட்டது! அவருக்கு நன்றி!!

மதுரை
14.09.07

ஆனால், நீதிபதிகள் தாங்கள் எழுதும் தீர்ப்பில், கவிதையோ, கருத்தோ தங்கள் சுயவிருப்பில் ஏற்றுவது எவ்வளது தூரம் சரியான செயல் என்பதில் எனக்கு சந்தேகமுண்டு!

நீதிபதி ஸ்ரீவத்ஸவா கூட இப்படித்தானே!

5 comments:

Gurusamy Thangavel said...

அருமையான வரிகள். அண்மையில் தந்தையாகியிருக்கும் எனக்கு இதைப் பிடித்துப்போனதில் வியப்பேதுமில்லை. பதிந்தமைக்கு நன்றி.

Voice on Wings said...

//You are the bows from which your children as living arrows are sent forth.//

அருமையான வரிகள். கலீல் கிப்ரானின் The Prophet என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட வரிகள் இவை. அதை முழுவதுமாகப் படிக்க இங்கே சொடுக்கவும்.. திருக்குறளுக்கு இணையாக இதிலிருந்து அறிவுரைகளை பெறலாம்.

Anonymous said...

every parents shd. read it and learn a lesson from it how to treat the children eventhough they are our own children. but it is the responsibility of parents to guide them guard them.. instead of forcing them to instill our own thoughts.

Unknown said...

உங்கள் பதிவுகளை அவ்வப்போது படித்து வருகிறேன். புரியும்படியாக, பயனுள்ளதாக எழுதுகிறீர்கள்.

இந்தப் பதிவின் நோக்கத்துக்குத் தொடர்பில்லாத கேள்வி: // நீதிபதி முன் வந்த பிரச்னை, குழந்தை தந்தைக்கு சார்பாக பிரமாண பத்திரம் (affidavit) தாக்கல் செய்ய முடியுமா? // இந்த வழக்கைப் பற்றி இன்னும் சிறிது விரிவாக எழுத இயலுமா? குழந்தைகளைப் பற்றி நீதிபதி கவித்துவமாக ஏன் சொல்ல நேர்ந்தது?

PRABHU RAJADURAI said...

நன்றி நண்பரே,

இந்த வழக்கில் தந்தை, தனக்கு சார்பாக குழந்தையினை சாட்சி சொல்ல விரும்பியுள்ளார். அதற்காக, குழந்தை சொல்வது போல ஒரு அபிடவிட் தயாரித்து தாக்கல் செய்துள்ளார்...குழந்தை சுயமாக அன்றி சொல்லிக் கொடுத்து நீதிமன்றத்தில் சாட்சி கூறும் வாய்ப்பு அதிகம் என்பதால் அதை ஏற்க நீதிபதி மறுத்துள்ளார்.

குழந்தைகள் மீது பெற்றோர்கள் தங்களது எண்ணங்களை புகுத்துவதற்கு உரிமையில்லை என்ற வகையில் எழுதப்பட்டுள்ள இந்த கவிதை...வழக்கிற்கு முழுவதும் பொருத்தமானது என்று கூற முடியாது...பொதுவான ஆலோசனை என்று எடுத்துக் கொள்ளலாம்