29.5.07

விகடன் - புரட்சிக் கலைஞரின் கோபம்

ஆனந்த விகடன் பேட்டியில் தனது திருமண மண்டபம் இடிக்கப்பட்டதைப் பொறுத்து பொங்கிப் பொறுமியிருக்கிறார் விஜயகாந்த்!

ஏதோ மற்ற அரசியல்வாதிகளும், நீதிமன்றங்களும் இணைந்து சதி செய்து அவரது திருமண மண்டபத்தினை இடித்தது போல தோற்றத்தினை உருவாக்க நினைக்கிறார். நில ஆர்ஜித சட்டங்களைப் (Land Acquisition Laws) பற்றி அறிந்தவர்களுக்கு, இந்த இடிப்பு ஒன்றும் பெரிய விஷயமில்லை. அரசு குறிப்பிட்ட ஒரு நிலம் வேண்டும் என்று நினைக்கையில், நீதிமன்றங்களால் பொதுவாக இயலக்கூடியது நில உரிமையாளருக்கு போதிய இழப்பீடு கிடைக்கிறதா என்று பார்ப்பது மட்டுமே!

அகில இந்திய அளவில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டத்தில், விஜயகாந்த் இழந்தது ஒரு துளி. அவ்வளவே! இந்தியா முழுவதும், இச்சாலை அமைப்பதினால், எத்தனை ஆயிரம் நபர்கள் தங்கள் விவசாய நிலங்களை இழக்கின்றனர். அனைவரிடமும் மாற்றுத் திட்டம் உண்டு! இவ்வாறு ஒவ்வொருவரிடமும் மாற்றுத்திட்டம் பெற்று அதனை பரிசீலித்துக் கொண்டிருந்தால் சாலையினை வங்காள வளைகுடாவில்தான் போட வேண்டும்!

சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஒரு கூட்டம், திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் நடத்தாமல், பாதிக்கப்படும் கூடங்குளம் மக்கள் கலந்து கொள்ளும் வகையில் கூடங்குளத்திலேயே நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக. அதற்காக இலவசமாக ஒரு மண்டபமும் தர தயாராக இருந்தனர். இருந்த பொழுதும் நீதிமன்றம் தலையிட மறுத்து விட்டது.

கேவலம், கூட்டம் நடைபெறும் இடத்தினை மாற்றவே அதிகாரிகள் தயாராக இல்லாத பொழுது...திட்ட இடத்தினை மாற்றுவதாவது.


பொதுவாகவே பெரிய திட்டங்களை அரசு செயல்படுத்த முயல்கையில், அது சர்தார் சரோவர் அணைக்கட்டாயினும் சரி, சேது சமுத்திர திட்டமானாலும் சரி, கூடங்குளம் அணுமின்நிலையமானாலும் சரி...நீதிமன்றங்கள் அதில் ஓரளவுக்கு மேல் கேள்வி கேட்பதில்லை. விஜயகாந்தின் கலியாண மண்டபம் எம்மாத்திரம்.

சர்தார் சரோவர் திட்டத்தினால் பாதிப்படையும் பழங்குடிகள், சேது சமுத்திர திட்டத்தினால் பாதிப்படையலாம் என அஞ்சும் மீனவர்கள், கூடங்குளம் அணு உலைக்கு தங்கள் நிலங்களை இழந்த விவசாயிகளின் இழப்பு விஜயகாந்திற்கு ஏற்ப்பட்ட இழப்பிற்கு சற்றும் குறைந்ததில்லை!

கலியாண மண்டபம் இடிக்கப்பட்டாதால் பாதிப்படைந்தது, மற்றவர்களைப் போல தனக்கு வாழ்வாதரப் பிரச்னையில்லை என்று விஜயகாந்த் ஆறுதலடைவது நன்று!

11 comments:

Anonymous said...

Mr prabhu,

You are right.

When govt. takes over fields or lands of individuals the rate fixed by Govt is always lesser than the market rate.
So many poor/ middle class people has to live with whatever Govt compensates.

Just because he is famous and and all these media is trying to expose him...he got a chance atleast to give interviews!!!!
What other common people are doing, they are sacrificing for a social cause. Let him learn from them.
He is simply trying to politize the issue for his own selfish reasons.

Sridhar V said...

நல்ல கட்டுரை...

அவர் ஏதோ அவரை தாக்குவதற்காகவே இந்த திட்டம் நிறைவேறுகிற மாதிரி சொல்வது கொஞ்சம் அதிகம்தான்.

ஆனால் இதைப்போல சில மனிதர்களின் வசதிக்காக பல திட்டங்கள் முடக்கி வைக்கப் பட்டிருப்பதும் உண்மைதான்.

//கேவலம், கூட்டம் நடைபெறும் இடத்தினையே மாற்றவே அதிகாரிகள் தயாராக உள்ள பொழுது...//

தயாராக இல்லாத பொழுது என்று இருக்க வேண்டுமோ?

Anonymous said...

Over to Idly Vadai

Anonymous said...

பாலம் கட்டி பொது மக்கள் நலத்திற்கு கட்டிய ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கு மதுரையில் இறந்த மூவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க காட்டலாமே !

PRABHU RAJADURAI said...

வெங்கட்,
தவறை திருத்தியாகி விட்டது. நன்றி!

Sundar Padmanaban said...

Prabhu annathe (sorry for english- my laptop crashed and I'm yet to reinstall the stuff).

Vijayakanth should have used this opportunity to 'donate' his Mandapam and should have volunteered it, without opposing it. This would have helped him in gaining the empathy of public and more supporters! With all his noises all over the place, he only proved to be more concerned in protecting his property rather than being part of a public cause!

//சாலையினை வங்காள வளைகுடாவில்தான் போட வேண்டும்!
//

athu Vangala *Viri*kuda -nu irukkanum. correct-a?

OK oru quiz. what's the difference between valaikuda and virikuda? :-)

Cheers
sundar.

PRABHU RAJADURAI said...

சுந்தர்,
இன்று மீண்டும் படிக்கையில் எனக்கும் ஏதோ தவறு இருப்பது போல தோன்றியது. ஆனால் என்ன தவறு என்று புரிபடவில்லை.

உங்கள் கேள்விக்கெல்லாம் பதில் தரத்தக்க ஐக்யூ இருந்தால், எனக்கு பொறியியற் கல்லூரியில் இடம் கிடைத்திருக்குமே!

ஏதோ சட்டம் பற்றி எழுதுவதால், யாரும் இங்கே தவறு கண்டுபிடிப்பதில்லை. மற்ற விஷயம் எழுத ஆரம்பித்தால் இப்படி பிரச்னையில் வந்து முடிகிறது.

Nakkiran said...

With the Help of Google..

GULF- VALAIKUDA...
BAY - VIRIKUDA..

A gulf is a part of the ocean that is partly surrounded by land. A gulf cuts into the shoreline. It is similar to a bay, but a gulf goes farther inland than a bay does. A gulf is also bigger than a bay

Sundar Padmanaban said...

அலோ பிரபுஜி,

//உங்கள் கேள்விக்கெல்லாம் பதில் தரத்தக்க ஐக்யூ இருந்தால், எனக்கு பொறியியற் கல்லூரியில் இடம் கிடைத்திருக்குமே!
//

இதானே வேணாங்கறது! எனக்குத் தெரிஞ்சது 'பொரி'யியல்தான். :-) பொறியியல்லாம் தெரியாது!

நக்கீரன் ஸார். விவரங்களுக்கு நன்றி.

வளைகுடா விரிகுடா பெயர்களிலேயே ஓரளவுக்கு விளக்கம் இருக்கிறது. நிலம் சூழ உள்ளே வந்து கடல் நன்றாக வளைந்திருக்க்கும் இடம் வளைகுடா - கொண்டி மாதிரி வளைந்திருக்கும் - கிட்டத்தட்ட மூன்று பக்கங்களிலும் நிலம் சூழ்ந்திருக்கும். விரிகுடா லேசான வளைவுள்ளது - இரண்டு பக்கம் நிலம் சூழ்ந்திருக்க கடல் விரிந்து செல்லும். வளைகுடா ஆங்கில 'U' வடிவத்தில் இருக்க விரிகுடா 'L' வடிவத்தில்.

நமக்கு கிழக்கே வங்காள விரிகுடா. மேற்கே அரபிக் கடல் - இந்தியாவின் கம்புக்கூட்டுக்குள் இருப்பதுபோல வளைந்து வளைகுடாவாக! :-)

Sundar Padmanaban said...

//மற்ற விஷயம் எழுத ஆரம்பித்தால் இப்படி பிரச்னையில் வந்து முடிகிறது.
//

இந்த மாதிரில்லாம் சொன்னீங்க அப்றம் நான் உங்ககூட கா விட்ருவேன். :-(

PRABHU RAJADURAI said...

சுந்தர்,

இந்த மரத்தடி அரட்டையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு கொஞ்சம் தொழிலை கவனிச்சிகிட்டு இருக்கேன் ஒரு மூணு வருஷமா...இங்க தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை எழுப்புறீங்களே!

இந்தா ஆச்சு, 4ம் தேதி கோர்ட் திறக்கிறாங்க...எனக்கு இருக்கு ஆப்பு!