7.8.06

இயேசு 'டீ' விக்கிறார்

நகைச்சுவை உணர்வு என்பது சிலருக்கு இரத்தத்திலேயே ஊறியிருக்கும். நகைச்சுவையினன இரசிக்கும் உணர்வினை கூறவில்லை... பேச்சிலும் செயலிலும் இயல்பாகவே சிலருக்கு குறும்பும் நக்கலும் வெளிப்படும். அத்தகைய நபர்களை நண்பர்களாக பெற்றவர்கள் பாக்கியசாலி.கள். எனக்கும் அப்படி ஒரு நண்பர் உண்டு. அவரது நக்கல்களை எழுத்தில் வடிப்பது கடினமான செயல். அந்தந்த சூழ்நிலைகளில்தான் அவரது குறும்புகள் அர்த்தம் பெறும்.

அவரது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வீட்டிலிருந்து ஒரு சொம்பினை எடுத்து அங்கிருந்த ஒரு சிறுவனிடம் கொடுத்து மிகச் சாதாரணமாக, ‘இந்தா, போய் பக்கத்து கடையில் நாலை ஆறா போட்டு நான் சொன்னேன்னு டீ வாங்கிட்டு வா’ என்றார். பையனும் பேசாமல் காசை வாங்கிக் கொண்டு போனான். பின்னர் சிறிது நேரம் கழித்து டீயுடன் திரும்பி வந்தவன், ‘என்னண்ணே நீங்க...நீங்க சொன்னதை அப்படியே சொல்லி கடையில எல்லாரும் கிண்டல் பண்றாங்கண்ணே’ என்று சலித்துக் கொண்ட பின்னர்தான் எங்களுக்கே அவரது குறும்பு புரிந்தது.

ஒரு முறை என்னிடம் வந்தார், 'என்னடா, உங்க இயேசு தச்சர் மகன்னு சொன்ன! டீக்கடை வைச்சிருந்தத சொல்லலயே'

எனக்கு விளங்கவில்லை, ' என்ன சொல்ற, எங்க பாத்தே'

'பின்ன, நேத்து தமுக்கதுல உங்க மீட்டிங். போனா எல்லாரும் 'டீ விக்கிறார், இயேசு டீ விக்கிறார்னு பாடிக்கிட்டுருந்தாங்களே'

கொஞ்ச நேரம் கழித்துதான் எனக்குப் புரிந்தது, 'ஜீவிக்கிறார்தான் நண்பருக்கு டீ விக்கிறார்' ஆகி விட்டார் என்று.

ஆனாலும் அவர் விடவில்லை, 'ரியல் எஸ்டேட் கூட நடத்றார் போல' என்றார் ஒரு கண்ணடிப்புடன்.

அடுத்த குறும்பு என்று தெரிந்தாலும், நண்பர் எங்கு வருகிறார் என்று தெரியவில்லை. பரிதாபமாகப் பார்த்தேன்.

'இல்ல! அங்க ஃபுல்லா 'இயேசு வீடு விக்கிறார்'னு போஸ்டர் ஒட்டியிருக்கு. அதான் கேட்டேன்' சிரிக்காமல் சீரியஸாக ஜோக்கடிப்பது அவரது கை வந்த கலை.

இந்த முறை எனக்கு விளங்கிப் போனது. 'இயேசு விடுவிக்கிறார்தான், வீடு விக்கிறவராக நண்பருக்கு மாறிப் போனது என்று'

இயேசு ‘must be crazy’ பின்ன இப்படிப்பட்ட நபர்களை படைத்திருக்கிறாரே!

6 comments:

Boston Bala said...

:-)))

CAPitalZ said...

"God must be creazy" படத்தை பாருங்கள். கடவுளைப் பற்றி இல்லை, ஆனால் மிகவும் நகைச்சுவை. இரண்டு பாகங்கள் உண்டு. ஒரு Coca Cola போத்தலில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்காவிடில் நான் உங்களுக்காக விழுகிறேன் ;)

Anonymous said...

Nice post :)

Sundar Padmanaban said...

பிரபுஜி.

இங்கிட்டு இருக்கீங்கன்னு இப்பத்தான் பாத்தேன்! :(

மரத்தடில முந்தி இதப் பத்தி சொல்லிருக்கீங்கன்னு நெனைக்கிறேன். மறுபடியும் வாசிக்க நல்லாருந்தது.

capital. God Must be Crazy பயங்கர காமெடி படம். ப்ளைட் போம்போது பைலட்ல ஒருத்தரு குடிச்சுட்டு தூக்கிப் போடற கோககோலா பாட்டில் ஆப்பிரிக்க பாலைவனத்துல விழ, அதை எடுத்துவச்சிக்கிட்டு லூட்டியடிக்கிற ஒரு ஆதிவாசிதான் கதாநாயகன். நான் பாத்தது 1985-ல. படம் முழுக்க சிரிச்சிக்கிட்டேயிருக்கலாம்.

புருனோ Bruno said...

ஹி ஹி

நாங்க கூட டீ விக்கிறார், இயேசு டீ விக்கிறார் என்று பகடி பாடல் பாடியிருக்கிறோம்

--

PRABHU RAJADURAI said...

பொதுவாக விளம்பர பின்னூட்டங்களை நான் வெளியிடுவதில்லை என்றாலும், மேலே கண்ட பின்னூட்டம் வெளியிடப்படுகிறது. It requires a smile to start a day:-)